For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையிலிருந்து குண்டுகள்-ராக்கெட் லாஞ்சர்கள்அனுப்பியவன் சீனிவாச ரெட்டி!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ராக்கெட் லாஞ்சர்கள், குண்டுகளை அனுப்பிய நபர்அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் மகபூப் நகர் மாவட்டம் நலமங்கலா வனப்பகுதியிலும், பிரகாசம்மாவட்டத்திலும் அம் மாநில போலீசார் நடத்திய ரெய்டில் குண்டுகளும், அவற்றைஏவக்கூடிய ராக்கெட் லாஞ்சர்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்த ஆயுதங்கள் சென்னையில் இருந்து லாரி மூலம் ஆந்திர நக்சலைட்டுகளுக்குஅனுப்பி வைக்கப்பட்டது தெரிய வந்தது. இந்த ஆயுதங்களே சென்னையில் தான்தயாரிக்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.

அம்பத்தூர் மண்ணூர்பேட்டையில் உள்ள கிராந்தி டிரான்ஸ்போர்ட் என்ற சரக்குநிறுவனத்தின் லாரி மூலம் தான் ராக்கெட் குண்டுகள் ஆந்திராவுக்கு சென்றன. இந்தலாரி நிறுவனத்திற்கு சென்னையில் வால்டாக்ஸ் ரோடு, கிண்டி, ராயப்பேட்டை,வண்ணாரப்பேட்டை, வளசரவாக்கம் ஆகிய இடங்களில் கிளைகள் உள்ளன.

இந்த குண்டுகளை அனுப்பியது யார் என்று 6 தனிப் படைகள் தீவிர விசாரணை நடத்திவருகின்றன.

பரங்கிமலை துணை கமிஷனர்அருண், கமாண்டோ படை எஸ்பி ஆசீர் விஜயகுமார்ஆகியோர் தலைமையில் ஒரு போலீஸ் படை ஆந்திரா சென்று விசாரணை நடத்தியது.

இதற்கிடையில், ஆந்திராவில் இருந்து அந்த மாநிலத்தின் உளவுப்பிரிவு எஸ்பிதலைமையில் ஒரு போலீஸ் படையும், நெல்லூர் இன்ஸ்பெக்டர் தலைமையில்மற்றொரு படையும் சென்னை வந்ததுள்ளன.

கிராந்தி லாரி நிறுவனத்தின் சென்னை மானேஜர் ரமணாவிடம் இந்தப் படைகள்விசாரணை நடத்தி வருகின்றன.

ஆந்திராவில் கைப்பற்றப்பட்ட குண்டுகள் மற்றும் லாஞ்சர்களில் சில சென்னைகொண்டு வரப்பட்டு டிஜிபி அலுவலகத்தில் அதிகாரிகளுக்குக் காட்டப்பட்டன.

இது குறித்து டிஜிபி முகர்ஜி நிருபர்களிடம் கூறியதாவது,

கடந்த 7ம் தேதி இரவு ஆந்திர மாநிலத்தில் மகபூப் நகர் மாவட்டத்தில் போலீசார் திடீர்வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த பகுதியில் உள்ள அச்சம்பேடு பஸ்நிலையத்தில் சந்தேகத்தின் பேரில் அனுமந்த ரெட்டி என்ற ஆசாமியை மடக்கிப்பிடித்து விசாரித்தனர்.

அவனிடம் விசாரித்த போது லாரி ஒன்றில் ராக்கெட் குண்டுகள், லாஞ்சர்கள் வரஇருப்பதாகவும் அவற்றை வாங்குவதற்காக காத்திருப்பதாகவும் கூறினார். அவன்சொன்ன தகவலின் பேரில் அங்குள்ள கிராந்தி லாரி டிரான்ஸ்போர்ட் நிறுவனகுடோனில் போலீசார் சோதனை போட்டு 53 சாக்கு மூட்டைகளை கைப்பற்றிஇருக்கிறார்கள். அந்த சாக்கு மூட்டைகளில் குண்டுகள் இருந்தன.

15 ராக்கெட் லாஞ்சர்களும், 50 ஜெலட்டின் வெடிமருந்து குச்சிகளும் பறிமுதல்செய்யப்பட்டன. இவற்றின் எடை 2 டன் ஆகும். ராக்கெட் குண்டு ஒவ்வொன்றும் 28அங்குலம் நீளமுள்ளது. அதைப்போல ராக்கெட் லாஞ்சர் ஒவ்வொன்றும் 3 ங்குலசுற்றளவு உள்ளவை.

விசாரணையில் இந்த ராக்கெட் ஆயுத குவியல் சென்னை அம்பத்தூர் மண்ணூர்பேட்டையில் உள்ள கிராந்தி லாரி டிராண்ஸ்போர்ட் நிறுவனத்தின் மூலம்அனுப்பட்டவை என்பது தெரிய வந்திருக்கிறது. இதுகுறித்து கிராந்தி லாரிநிறுவனத்தில் 6 கிளைகளில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தினோம்.

அம்பத்தூரில் உள்ள கிராந்தி லாரி நிறுவனத்தில், ராக்கெட் வெடிகுண்டு குவியல்அனுப்பட்டது தொடர்பான ஆவணங்கள் சிக்கின. அந்த நிறுவனத்தின் மானேஜர்ரமணா, ஊழியர்கள் வீரபத்திர ரெட்டி, ராமகிருஷ்ண ரெட்டி உள்பட 4 பேரிடம்விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் இந்த ராக்கெட் குண்டுகள் மூன்று முறை சென்னையில் இருந்துஅனுப்பி வைக்கப்பட்டது தெரியவந்தது.

முதல் இரண்டு முறை அனுப்பட்ட ஆயுத குவியல் ஆந்திர மாநிலம்விஜயவாடாவைச் சேந்த சீனிவாச ரொட்டி என்பவர் பெயருக்குஅனுப்பப்பட்டுள்ளது. மூன்றாவது முறையாக அனுப்பட்ட ஆயுத குவியல் ஆந்திரமாநிலம் நெல்லூர் மாவட்ட வேதபாளையத்தை சேர்ந்த ராமிரெட்டி என்பவர்பெயருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆயுத குவியல்கள் சென்னையில் இருந்து எச்.ஜெ.ஆர்.டூல்ஸ் மார்ட் என்றநிறுவனத்தின் சார்பில் அனுப்பட்டுள்ளதாக குறிப்பிட்டபட்டிருந்தன. இது குறித்துஅந்த நிறுவனத்தில் சோதனை போட்டபோது ஆயுத குவியல்கள் அங்கிருந்துஅனுப்பபடவில்லை என்று தெரிய வந்தது.

போலியாக அந்த நிறுவனத்தின் முகவரியை ஆவணங்களில் போட்டுள்ளனர். இந்தநிறுவனம் ஆந்திராவிற்கு தங்கள் சரக்குகளை அடிக்கடி லாரி மூலம் அனுப்பிவைக்கும், இதனால் நக்லைட்டுகள் ஆயுத குவியலை இந்த நிறுவனத்தின் பெயரைதவறாக பயன்படுத்து கடத்தி இருக்கலாம் என்று கருதுகிறோம்.

ஆந்திர போலீஸ் விசாரணையிலும், சென்னை போலீஸ் விசாரணையிலும் ராக்கெட்ஆயுத குவியலை சென்னையிலிருந்து அனுப்பியது சீனிவாச ரெட்டிதான் என்று தெரியவந்துள்ளது. இரண்டு முறை அனுப்பட்ட ஆயுத குவியலை இவன் ஆந்திராவில்பெற்றிருக்கிறான்.

3வது முறையாக அனுப்பப்பட்ட ஆயுத குவியல்தான் ராமி ரெட்டி பெயருக்குஅனுப்பட்டிருக்கிறது. சீனிவாச ரெட்டி விஜயவாடா ஆட்டோ நகரைச் சேர்ந்தவன்என்று முகவரி கொடுத்துள்ளான். இந்த முகவரியில் விசாரணை நடத்திய போது அப்டிஒரு நபர் யாரும் இங்கு வசிக்கவில்லை என தெரியவந்தது.

மூன்றாவது முறை அனுப்பட்ட ஆயுத குவியல் ராமிரெட்டி என்பவர் பெயருக்குஅனுப்பட்டுள்ளது. அவரது முகவரியும் உண்மைதானா என்று போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.

கிராந்தி லாரி நிறுவன ஊழியர்கள் சொன்ன அடையாளங்களை வைத்து கம்யூட்டர்மூலம் அவனது படத்தை வரைந்துள்ளோம். அந்த படம் ஆந்திர போலீசாருக்கும்,தமிழகத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையத்துக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அவனை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறோம். அவன் பிடிபட்டால்தான் ராக்கெட் குண்டுகளும், லாஞ்சர்களும், இதர கருவிகளும் எங்குதயாரிக்கப்பட்டன என்பது தெரிய வரும்.

இந்த ராக்கெட் குண்டுகள் ஆந்திர மாநிலத்தில் செயல்படும் மாவோநக்சலைட்டுகளுக்குத்தான் சப்பை செய்ய அனுப்பட்டுள்ளது. இதை ஆந்திரபோலீசாரும் உறுதி செய்துள்ளனர். விடுதலைப்புலிகளுக்கு இவைஅனுப்பப்படவில்லை என்றார் டிஜிபி முகர்ஜி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X