For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் நேரத்தில் கருணாநிதிக்கு சிறுபான்மையினர் மீது பாசம் வரும்: ஜெ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தேர்தல் நேரத்தில் தான் சிறுபான்மையினர் மீது கருணாநிதிக்கு திடீர் பாசம் வரும் என முன்னாள் முதல்வர்ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பெண் அதிகாரியிடம் தவறாக நடந்து கொண்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் டிஜிபி ரவீந்திரநாத் மீதுநான் முதல்வராக இருந்தபோது ஏன் 4 வருடமாக நடவடிக்கை எடுக்கவில்லை என்று கருணாநிதி கேட்டுள்ளார்.ஒரு அதிகாரி மீது துறைரீதியாக நடவடிக்கை எடுத்து விசாரிப்பது முதல்வரின் வேலை அல்ல.

சையத் முனீர் ஹோதாவை முழுமையாக பணி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு பரிந்துரைத்தும்கருணாநிதியின் தலையீட்டால் மத்திய அரசு இந்த விஷயத்தில் மெளனம் சாதித்தது.

முதல்வருக்கும் தலைமைச் செயலாளருக்கும் தெரியாமல் இரு அரசாணைகளை முனீர் ஹோதா வெளியிட்டார்என்பதை கருணாநிதி ஒத்துக் கொண்டுள்ளார். ஆனால், அவர் சிறுபான்மை இனத்தவர் என்ற புதிய கதையைஇப்போது கொண்டு வருகிறார்.

தேர்தல் நேரத்தில் சிறுபான்மையினர் மீது கருணாநிதிக்கு திடீர் பாசம் வரும், தேவைப்படும்போது அந்த சிந்தனைஅவருக்கு வரும்.

தமிழக வரலாற்றிலேயே சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை தமிழக உள்துறைச் செயலாளராக நியமித்ததுநான் தான். வக்பு வாரிய தலைவராகவும் பெண்ணை நியமித்தேன் (இவரது தோழி பதர் சயீத்)

நான் கோப்புகளில் கையெழுத்திடில்லை என்றும் அது குறித்து விசாரிக்க ஒரு குழுவை நியமிப்பதாகவும்கருணாநிதி கூறியுள்ளார்.

நான் கருணாநிதி மற்றும் அவரது உறவினர்களின் சொத்து விவரம் குறித்து கேட்டிருந்தேன், அது தொடர்பாகநான் குழு நியமிக்கிறேன் என்று சொல்லியிருந்தேன்.

அதே போல முரசொலி மாறன் சிகிச்சைக்காக மத்திய அரசாங்கம் ரூ. 200 கோடி செலவிட்டது அரசுக்கு திருப்பிச்செலுத்தப்பட்டதா இல்லையா என்று கேட்டிருந்தேன். இதற்கெல்லாம் 50 நாள் ஆகியும் கருணாநிதியிடம் இருந்துபதில் இல்லை. மூச்சு பேச்சு இல்லை.

எந்தெந்த கோப்புகளை நான் பார்க்கவில்லை என்று கருணாநிதி கூறுகிறாரோ அவற்றை துறைவாரியாகவரிசைப்படுத்தி வைக்கப்பட்டும். என்னிடம் பணியாற்றிய, இப்போது பணியாறறும் ஐஏஎஸ் அதிகாரிகளைஎன்னிடம் கோப்புகளுடன் வரச் சொல்லுங்கள். ஒவ்வொரு கோப்புக்கும் எழுத்துப்பூர்வமாக பதில் தருகிறேன்.

கருணாநிதி எத்தனை முடி திருத்தும் நிலையங்களை வேண்டுமானாலும், இனி வரும் நாட்களில் இதேவேலையாகக் கூட, திறக்கட்டும். எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால், இதே அக்கறையுடன் ஒரு கார்மெக்கானிக் ஷெட்டை திறந்து வைப்பாரா?

ஆந்திர நக்சல்களுக்கு தமிழகத்தில் இருந்து ராக்கெட் லாஞ்சர்கள் போய் இருக்கின்றன கருணாநிதியின்ஆட்சியில். கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன் எல்லா கெட்ட விஷயங்களும் ராக்கெட் வேகத்தில் நடந்துவருகின்றன.

நிலைமை இப்படியே போனால் ஏழை, எளிய மக்கள், மனசாட்சிக்கு பயப்படுபவர்கள், நியாய அநியாயத்துக்குகட்டுப்பட்டவர்கள் தமிழகத்தை விட்டு அகதிகளாக வெளியேறும் அவல நிலை ஏற்பட வெகு நாட்கள் இல்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X