For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயேந்திரர் தான் கருணாநிதியின் புதிய காஞ்சித் தலைவன்: ஜெ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஜெயந்திரர் மற்றும் மு.க. அழகிரி மீது வழக்கு தொடர்ந்த போலீஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டதற்குஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நீதிமன்ற விஷயங்களிலும் தலையிட்டுள்ளது என்பதை எண்ணிப்பார்க்கவே வேதனையாக உள்ளது. சங்கரராமன் என்பவர் காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ளகோவில் அலுவலகத்தில் தனது பணியினை செய்து கொண்டு இருந்த போது கூலிப் படையினரால் கொடூரமாககொலை செய்யப்பட்டார்.

இந்தக் கூலி படையினரே தூண்டி விட்டது யார் என்ற கேள்வி எழுந்த போது அதற்கு உடனடி பதில்கிடைக்கவில்லை. எனவே தகுந்த புலன் விசாரணை அதிகாரிகளைக் கொண்டு ஒவ்வொரு தடய நுனியையும்காவல் துறை ஆராய வேண்டியிருந்தது.

இதற்கிடையில், பத்திரிக்கைளில் பெருவாரியாக யூகச் செய்திகள் வர ஆரம்பித்து விட்டன. திமுகவினரும்கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டங்கள் செய்ய ஆரம்பித்தனர். கருணாநிதிகுற்றவாளிகளை கைது செய்ய ஏன் இத்தனை தாமதம்? என்று தினம் பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்து வந்தார்.

இந்த சூழ்நிலையில் தான் தற்போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காஞ்சி காமகோடி மடத்தைச் சேர்ந்த(!?!?) ஜெயேந்திரர், விஜயேந்திரர் மற்ரும் வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள், பிரேம் குமார் உள்ளிட்ட காவல் துறைபுலன் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். சென்னை உயர்நீதிமன்றம் பலமுறை அவர்களதுஜாமீன் மனுக்களை நிராகரித்து.

இதற்கிடையில் இந்தக் கொலையில் தகுந்த ஆதாரங்களைத் தர முன் வந்த நபர் (ரவி சுப்பிரமணியம்) அப்ரூவர்ஆனார். வழக்கு பல கட்டங்களை தாண்டி இன்று விசாரணைக்காக புதுவை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

2006 மே மாதம் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, கருணாநிதி முதல்வராக பதவிக்கு வந்த பிறகுஎல்லாவற்றையும், சில காரண காாரிய அடிப்படையில் அணுகியதைப் போல், இந்த வழக்கையும் அதேஅளவுகோளில் அணுகி இருப்பது மிகுந்த வேதனையையும், சட்டத்தின் மாட்சியின் மீது அவருக்குள்ள தாழ்ந்தஅபிப்ராயத்தையும் காட்டுகிறது.

வேரை பிடுங்கி வெந்நீரை ஊற்றுவது என்று சொல்வது போல் எல்லா காரியங்களும் அந்த வழக்கில் தற்சமயம்நடந்து வருகிறது. அந்த வழக்கு நீர்த்து போவதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அத்தனையையும் திமுகஅரசு செய்து வருகிறது. அதனுடைய அங்கமாகத் தான் சிறையில் இருக்கும் அப்ரூவரை பயன்படுத்தி,நியாயமான முறையில் புலன் விசாரணை செய்த வழக்கு புலன் விசாரணை அதிகாரி, காவல் துறைகண்காணிப்பாளர் பிரேம்குமார் தற்போது தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அவர் செய்த குற்றம், கோவிலில் நடந்த கொலையை புலன் விசாரணை செய்தது. மேற்படி பிரேம்குமாரைதற்காலிக பணி நீக்கம் செய்து காஞ்சி மடத்தின் புதிய பக்தராக கருணாநிதி அவதாரம் எடுத்துள்ளார். இனிகருணாநிதிக்கு காஞ்சித் தலைவன் என்றால் அண்ணா அல்ல, காஞ்சி மடாதிபதி தான் அவருக்கு புதிய காஞ்சித்தலைவன். இந்த வழக்கை இனி மக்கள் மறந்து விட வேண்டியது தான்.

கருணாநிதியின் போக்கிற்கு மற்றுமொரு அடையாளம் அவர் மகன் அழகிரி மீதான கொளை வழக்கு தற்சமயம்நடைபெற்று வரும் முறை. முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணன் கொலையுண்ட சம்பவம் தொடர்பாகஅழகிரியும், கூலிப்படையினரும் கைது செய்யப்பட்டு உரிய முறையில் புலன் விசாரணை செய்யப்பட்டு வழக்குமதுரை நீதிமன்றத்திலிருந்து வருகிறது.

தகப்பனார் முதல்வர், மகன் கொலை வழக்கில் முதல் குற்றவாளி, தகப்பனார் நியமித்திருக்கும் அரசு வழக்கறிஞர்இந்த வழக்கை நடத்தப் போகிறார். எந்த லட்சணத்தில் இந்த வழக்கு இனி நடக்கும் என்பதை புரிந்துகொள்ளலாம்.

இதற்கிடையில் மேற்படி வழக்கை மிகவும் திறமையாக, நேர்மையாக புலன் விசாரணை செய்த காவல் துறைஆய்வாளர் மாரிமுத்து மீது ஒரு பொய் வழக்கினை போட்டு தற்போது அவரும் பிரேம்குமார் போலவேதற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அதுமட்டுமல்ல, நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று காவல் நிலையத்தில் கையொப்பம் இடும் அவல நிலைக்கு அந்தஆய்வாளர் தள்ளப்பட்டுள்ளார். இதே நேரத்தில் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முதல்வரின் மகன்அழகிரி காவல் துறையினரின் சகல மரியாதையுடன் உலா வந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் வழக்கின் புலன் விசாரணை அதிகாரியோ, ஜாமீன் பெற்று காவல் நிலையத்தில் கையொப்பமிட்டுவருகிறார். மேற்படி சம்பவங்களில் இருந்து ஓர் உண்மை தெரிய வருகிறது. கருணாநிதியின் மகன் வழக்கை புலன்விசாரணை செய்த காவல் துறை ஆய்வாளர், தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். புதியவரவாகவந்துள்ள காஞ்சி மட ஜெயேந்திரரை சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்து புலன் விசாரணை நடத்தியஅதிகாரியும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதையே உரிய நடைமுறையாக கொண்டு வசதி படைத்தவர்கள் இனி வழக்கில் சிக்கினாலும் கவலைப்படவேண்டாம் கருணாநிதியுள்ளார். தேவைப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவர்களின் மனம் குளிர, புலன் விசாரணைஅதிகாரியே கூட பணி நீக்கம் செய்யப்படுவார். இன்னும் வேண்டும் என்றால் புலன் விசாரணை அதிகாரி மீதேவழக்கும் தொடுக்கப்படும்.

ஆனால் அதே நேரத்தில் ஐஏஎஸ் அதிகாரி என்ற அடிப்படை பொறுப்பு கூட இல்லாமல் செயல்பட்டு குற்றச்சாட்டுமுழுமையாக நிரூபணமாகிய முனீர் ஹோடா, முதல்வர் அலுவலகத்திலேயே முக்கிய அதிகாரியாகபணியாற்றுகிறார். ஆனால் சட்டப்படி புலன் விசாரணை செய்த காவல் துறை அதிகாரிகள் பிரேம்குமார்,மாரிமுத்து ஆகியோர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டு நடுத் தெருவில் நிற்கிறார்கள்.

இதுதான் கருணாநிதியின் ஆட்சியின் மாட்சி. முனீர் ஹோடாவுக்கும், கருணாநிதியின் மகன் அழகரிக்கும் ஒருநீதி. பிரேம்குமாருக்கும், மாரிமுத்துக்கும் ஒரு நீதி. இது தான் கருணாநிதியினுடைய ஆட்சிமுறை சட்டத்தின்மாட்சி.

எந்த அளவிற்கு தமிழகத்தில் சின்னா பின்னமாகி விட்டது என்பற்கு இதை விட வேறு சான்று இருக்க முடியாது.இனி கடவுள் தான் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X