• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கார்த்திகேசு-ஜமுனா தற்கொலை முயற்சி

By Staff
|

சென்னை :

மனைவியை விட்டு விட்டு வீட்டு உரிமையாளரின் மகள் ஜமனாவுடன்தலைமறைவான மலேசியாவைச் சேர்ந்த கார்த்திகேசு, தனது காதலியுடன்தற்கொலைக்கு முயன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மலேசியாவைச் சேர்ந்தவர் மன்மத ராசா கார்த்திகேசு. சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் கரீஷ்மா. சிலஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காகமலேசியா சென்றார் கரீஷ்மா. அப்போது விபச்சா ரவிடுதியில் அவர் விற்கப்பட்டார்.

அந்த விடுதிக்கு ஜாலிக்காக வந்த கார்த்திகேசு, கரீஷ்மாவின் அழகில் மயங்கி அவரைஅங்கிருந்து மீட்டுச் சென்று குடும்பம் நடத்தினார்.

கரீஷ்மாவை திருமணம் செய்து கொண்ட கார்த்திகேசு பின்னர் அவரை மீண்டும்விபச்சாரத்தில் தள்ளி பணம் சம்பாதித்து வந்தார். இதையடுத்து அவரிடமிருந்துதப்பிய கரீஷ்மா, சென்னைக்கு ஓடி வந்தார். அவரை விரட்டிக் கொண்டுகார்த்திகேசுவும் சென்னை வந்தார்.

தன்னுடன் கரீஷ்மா சேர்ந்து வாழவேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கும்போட்டார். வழக்கு நடந்துகொண்டிருந்தபோதே, கரீஷ்மா சமாதானமாகிகார்த்திகேசுவுடன் வாழ சம்மதித்தார்.

Karthikesu with Jmuna

இதையடுத்து இருவரும் புது வண்ணாரப்பேட்டையில் குடித்தனத்தை தொடர்ங்கினர்.இது கொஞ்ச நாட்களுக்குத்தான் நீடித்தது. சில பெண்களை சேர்த்துக் கொண்டுவிபச்சாரத் தொழிலில் ஈடுபட ஆரம்பித்தார் கார்த்திகேசு.

இதுதொடர்பாக சமீபத்தில் போலீஸார் கார்த்திகேசுவை கைது செய்தனர்.விடுதலையாகி வெளியே வந்த அவரை, கரீஷ்மா வேறு வீட்டுக்கு மாற்றி கூட்டிச்சென்று குடும்பம் நடத்தி வந்தார்.

இங்கு வந்தும் தனது விளையாட்டை விடவில்லை கார்த்திகேசு. வீட்டு உரிமையாளர்ஏழுமலையின் மகள் ஜமுனாவை (8வது வகுப்பு படித்து வருகிறார்) மயக்கி தனதுகாதல் வலையில் சிக்க வைத்தார். திடீரென்று ஒருநாள் இருவரும் வீட்டை விட்டிஓடிவிட்டனர்.

இதுகுறித்து ஜமுனாவிந் தாயார் சரளா போலீஸில் புகார் கொடுத்தார். கார்த்திகேசு,ஜமுனா ஜோடி மதுரையில் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து மதுரைக்கு போலீஸ் படை விரைந்தது. ஆனால் அங்கு அவர்களைகண்டுபிடிக்க முடியவில்லை.

சென்னையில்தான் இந்த ஜோடி பதுங்கியிருக்க வேண்டும் என்று நினைத்த போலீஸார்பல இடங்களிலும் தேடிப் பார்த்தனர். ஆனாலும் இருவரும் கிடைக்கவில்லை.

தலைமறைவாக இருந்த நிலையிலும், ஜமுனாவும், கார்த்திகேசுவும், ஜமுனாவின்குடும்பத்தாருடனும், கரீஷ்மாவுடனும் போனில் பேசியபடிதான் இருந்தனர். இதனால்போலீஸார் குழம்பினர்.

இந் நிலையில், அண்ணா சாலையில் உள்ள இடத்தில் இருவரும் பதுங்கியிருப்பதாககரீஷ்மாவுக்குத் தகவல் கிடைத்தது. அவர் உடனடியாக போலீஸாரிடம் இதைத்தெரிவித்தார். புது வண்ணாரப்பேட்டை போலீஸார் உடனடியாக அங்கு விரைந்தனர்.

ஆனால் போலீஸார் வருவதை அறிந்த கார்த்திகேசு, ஜமுனா ஜோடி அங்கிருந்து தப்பிவிட்டது. இதையடுத்து செல்போன் மூலமாக போலீஸாரும், கரீஷ்மாவும், உடனடியாகசரணடைந்து விடுங்கள், அதுதான் நல்லது என்று ஜமுனாவையும், கார்த்திகேசுவையும்எச்சரித்தனர்.

ஆனால் அதை கண்டுகொள்ளாத இருவரும் பல்லாவரம், தாம்பரம் என பலபகுதிகளுக்கும் ஓடியபடி இருந்தனர்.

நேற்று இரவு 11.30 மணி வரை இந்த ஓட்டம் நீடித்தது. போலீஸாரும் விடாமல்அவர்களை தேடி வந்தனர். இந் நிலையில் தாங்கள் விஷம் அருந்தி விட்டதாககரீஷ்மாவுக்கு ஜமுனா தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து அவர் சொன்னஇடத்திற்கு போலீஸார் விரைந்து சென்றனர்.

அங்கு இருவரும் மயங்கிக் கிடந்தனர். இருவரையும் மீட்ட போலீசார் ஸ்டான்லிமருத்துவமனையில சேர்த்தனர்.

இருவரும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜமுனாவுக்கு தாலி கட்டிவிட்ட கார்த்திகேசு அவருடன் தொடர்ந்து உடலுறவுவைத்துள்ளது தெரியவந்துள்ளது.

இதற்கிடையே தனது மகள் ஜமுனா, கார்த்திகேசுவுடன் ஓடிப் போக கரீஷ்மாதன்காரணம் என ஜனாவின் தாயார் சரளா குற்றம் சாட்டியுள்ளார்.

அவர்தான் எனது மகளை கார்த்திகேசு இழுத்துக் கொண்டு ஓடவும், தப்பிககவும்யோசனை கூறியவர் என்று சரளா குற்றம் சாட்டுகிறார்.கார்த்திகேசுவை சும்மா விடக் கூடாது, அவருக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X