• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீவிரவாதத்தை ஒடுக்க இந்தியா-பாக். கூட்டமைப்பு

By Staff
|

ஹவானா:

பிரதமர் மன்மோகன் சிங்கும், பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரப்பும் ஹவானா நகரில் 1 மணி நேரம்சந்தித்துப் பேசினர். இரு நாடுகளிடையேயான அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இந்த சந்திப்பின்போது தீர்மானிக்கப்பட்டது.

கியூபா தலைநகர் ஹவானாவில் அணி சேரா நாடுகள் கூட்டமைப்பின் 14வது உச்சி மாநாடு நடைபெற்றது. இதில்கலந்து கொள்ள பிரதமர் மன்மோகன் சிங் ஹவானா சென்றுள்ளார். இந்த மாநாட்டில் 118 நாடுகளின்தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர். பிரதமர் மன்மோகன் சிங் நேற்று இந்த மாநாட்டில் பேசினார்.

இதைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு அவரும், பாகிஸ்தான் அதிபர் முஷாரப்பும் சந்தித்தனர். இருதலைவர்களும் நேரடியாக சுமார் 1 மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பேச்சு வர்த்தைக்குப் பின்னர் இருவரும் இணைந்து கூட்டறிகை ஒன்றை வெளியிட்டனர். அதில், காஷ்மீர்பிரச்சினை உள்பட இரு நாடுகளுக்கும் இடையிலான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நேர்மையான முறையில்தீர்வு காணப்பட வேண்டும். பரஸ்பர புரிந்து கொள்ளுதல் இந்த விஷயத்தில் அவசியம். அதிலிருந்து இருநாடுகளும் விலகக் கூடாது.

நின்று போயுள்ள இரு தரப்பு வெளியுறவு செயலாளர்கள் அளவிலான பேச்சு வார்த்தையை மீண்டும்தொடங்கப்படும். டெல்லியில் முதல் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும்.

2004 ஜனவரி 6, செப்டம்பர் 24, 2005 ஏப்ரல் 18, செப்டம்பர் 14 ஆகிய நாட்களில் வெளியிடப்பட்ட இருநாட்டுத் தலைவர்களின் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளவற்றை நடைமுறைப்படுத்த இரு நாடுகளும் தீவிரமாகமுயற்சிக்கும்.

மும்பை நகரில் ஜூலை 11ம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு இரு நாட்டுத் தலைவர்களும்கடும் கண்டனம் தெரிவித்தனர். தீவிரவாதத்தை எந்த ரூபத்திலும் ஆதரிக்கக் கூடாது என இக்கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டது.

ஙஙஙதீவிரவாதத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்க இரு நாட்டுத் தலைவர்களும் உறுதி தெரிவித்தனர்.தீவிவரவாதத்தைத் தடுக்க தீவிரவாத எதிர்ப்புக் கூட்டமைப்பை நிறுவ இரு தலைவர்களும் முடிவு செய்துள்ளனர்என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பேச்சுவார்த்தை நடந்த அரங்கிற்கு பிரதமர் மன்மோகன் சிங் முதலில் வந்தார். அவர் வந்த சில நிமிடங்கள்கழித்து பாகிஸ்தான் அதிபர் முஷாரப் வந்தார். இரு தலைவர்களும் கை குலுக்கிக் கொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது இந்தியத் தரப்பில் வெளியுறவு இணை அமைச்சர் அனந்த் சர்மா, தேசியபாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவுத்துறை செயலாளராக பதவியேற்கவுள்ள சிவசங்கர்மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாகிஸ்தான் தரப்பில் அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் குர்ஷித் மஹமூத் கசூரி, பெண்கள் நிலத்துறைஇணை அமைச்சர் சுமைரா மாலிக், வெளியுறவு செயலாளர் ரியாஸ் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தியாவும், பாகிஸ்தானும் இமைந்து தீவிரவாத ஒழிப்பு கூட்டமைப்பை நிறுவ முயற்சி செய்துள்ளதுமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் இதுவரை இரு நாடுகளும்இணைந்து செயல்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வெளியுறவுத் துறை செயலாளராக பதவியேற்கவுள்ள சிவ சங்கர் மேனன் கூறுகையில், இது புதியவிஷயம். இதுவரை இரு நாடுகளும் இணைந்து இந்த விஷயத்தில் செயல்பட்டதில்லை.

தீவிரவாதம் இந்தியாவின் மிக முக்கிய பிரச்சினையாகும். எனவே இதை பாகிஸ்தானுடன் இணைந்து இந்தஒடுக்க முடிவு செய்யப்பட்டள்ளது.

இந்த நடவடிக்கை மூலம், பாகிஸ்தான் மீதான நமது முந்தைய குற்றச்சாட்டுக்கள் மறைந்து விட்டன என்றுஎடுத்துக் கொள்ள கூடாது. இதேபோன்ற கூட்டு நடவடிக்கைகளில் இந்தியா உலக அளவில் 23 நாடுகளுடன்இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்த கூட்டமைப்பின் மூலம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் களையப்படுவார்கள். இந்தியாவுக்குள்தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவோர் முளையிலேயே கிள்ளி எறியப்படுவார்கள்.

இது ஒரு புதிய ஆரம்பம். இதன் மூலம் தீவிரவாதத்தை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை இந்தியாவுக்கு உள்ளதுஎன்றார் மேனன்.

முன்னதாக, பேச்சுவார்த்தையின்போது பாகிஸ்தானுக்கு வருமாறு மன்மோகன் சிங்குக்கு, முஷாரப் அழைப்புவிடுத்தார். அதை மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டார்.

முஷாரப்பைத் தவிர ஈரான் அதிபர் மஹ்மூத் அகமதியேஜத், வெனிசூலா அதிபர் ஹியுகோ செவேஸ், கியூபஅதிபர் ரால் காஸ்ட்ரோ, மலேசிய பிதரமர் படாவி, இலங்கை அதிபர் ராஜபக்ஷே, மங்கோலிய அதிபர் நம்பார்என்க்பயார், மொரீஷியஸ் பிரதமர் ராம் கூலம், நேபாள துணை பிரதமர், சர்மா ஒலி உள்ளிட்டோரையும் பிரதமர்சந்தித்துப் பேசினார்.

அடுத்த அணி சேரா மாநாடு எகிப்து நாட்டில் 2009ம் ஆண்டு நடைபெறும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X