For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்கா மீது அனல் கக்கிய அஹமதிநிஜாத்

By Staff
Google Oneindia Tamil News

நியூயார்க்:

ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பங்கேற்க வந்த இரான் அதிபர் அஹமதிநிஜாதும்,வெனிசுவேலா அதிபர் சாவேசும் அமெரிக்காவை மிகக் கடுமையாக விமர்சித்துபரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை சாத்தான் என்று வர்ணித்துள்ளார் ஹூயுகோசாவேஸ். மேலும் ஐ.நா. சபை இப்போது அமெரிக்காவின் முழுக் கட்டுப்பாட்டில்இருப்பதால் அதனால் ஒரு பயனும் இல்லையென்றும், ஒரு வெட்டியான அமைப்பாகஐ.நா. இருப்பதாகவும் தாக்கியுள்ளார்.

அதே போல இரான் அதிபர் அஹமதிநிஜாதும் அமெரிக்காவை வாரிவிட்டுச்சென்றுள்ளார்.

நியூயார்க் வந்துள்ள அகமதிநிஜாத் ஐ.நா. தலைமைச் செயலகத்தில்செய்தியாளர்களிடம் பேசினார். பேட்டி தொடங்குவதற்கு முன்பு திருக்குரானிலிருந்துசில வாசகங்கள் வாசிக்கப்பட்டன. பின்னர் பேசத் தொடங்கிய அகமதிநிஜாத்,

யுரேனியம் செறிவூட்டல் திட்டத்தை நிறுத்தி வைக்க ஐ.நா. சபை வேண்டுகோள்விடுத்துள்ளது. நாங்கள் இந்த யுரேனியத்தை அணு ஆயுதம் தயாரிக்க பயன்படுத்தப்போவதில்லை. மின் சக்தித் திட்டத்திற்காகவே இந்த பணியில் ஈடுபட்டுள்ளோம்.

இதுதொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருக்கிறோம். ஆனால் எப்போதுபேச்சுவார்த்தை என்பதற்கு காலக் கெடு விதிக்க முடியாது. நியாயமான முறையில்வல்லரசு நாடுகள் எங்களுக்கு உறுதிமொழிகள் தந்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்குவருவோம். யுரேனியத் திட்டத்தையும் நிறுத்தி வைப்போம்.

Hugo Chavez

இப்போது ஐரோப்பிய யூனியன் அமைப்புடன் இரான் நடத்தி வரும்பேச்சுவார்த்தையில் நல்லது நடக்கும் என நம்புகிறோம்.

எங்கள் விஷயத்தில் மட்டும் நிர்ப்பந்தம் கொடுக்கும் அமெரிக்கா எங்களதுபிராந்தியத்தில் உள்ள பாகிஸ்தான், இந்தியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளின் ஆயுதத்திட்டங்களை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? இவையும் அணு ஆயுதநாடுகள்தானே?

ஐ.நா. பாதுகாப்பு சபையில் உள்ள எல்லா நாடுகளும் அணு ஆயுதங்களை குவித்துவைத்துள்ள நிலையில் அந்த நாடுகள் இரானை பார்த்து யுரேனியத்தை தயாரிக்காதேஎன்று சொல்வது ஏன்?

அமெரிக்கா தன்னிடம் உள்ள அணு ஆயுதங்களை அழித்துவிட்டதா? யுரேனியம்தயாரிப்பை நிறுத்திவிட்டதா?

இரான் யுரேனியம் செறியூட்டலை நிறுத்தினால் நாங்கள் யுரேனியம் தருகிறோம் என்றுஅமெரிக்காவும் ஜெர்மனியும் பிரான்சும் சொல்கின்றன. இவர்களை நம்பி 50ஆண்டுகளாக நாங்கள் பல வகையிலும் மோசம் போய்விட்டோம்.

இரானுக்கு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் இவர்கள் முறையாகநிறைவேற்றியதில்லை. இந் நிலையில் இவர்களை எப்படி மீண்டும் இரான் நம்பமுடியும்?

எங்களது அணு சக்தித் திட்டம் அமைதியானது. அமைதிக்காகவே இந்த்த திட்டம்.அணு ஆயுதம் தயாரிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. எங்களுக்கு அதுதேவையும் இல்லை. எங்களது திட்டத்தில் எந்தவித ஒளிவுமறைவும் இல்லை.

Mohamed Ahmadinejad

சர்வதேச அணு சக்திக் கழகத்திற்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம்.எங்களது அணு சக்தி நிலையங்களை ஆய்வு செய்ய அனுமதித்துள்ளோம். இதைதவிர உங்களுக்கு வேறு என்ன வேண்டும்?.

வேண்டுமானால் அமெரிக்கா தனது யுரேனிய செறிவூட்டும் திட்டத்தை கைவிடட்டும்.இன்னும் 5 வருடத்தில் நாங்கள் அமெரிக்காவுக்கு யுரேனியம் விற்கத் தயார். அதுவும்50 சதவீத விலை தள்ளுபடியுடன் என்றார் அகமதிநிஜாத் சிரித்தபடியே.

கைதிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,

அமெரிக்க மக்கள் தொகை 21.9 கோடி. ஈரான் மக்கள் தொகை 6.8 கோடி. அமெரிக்கசிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 30 லட்சம். ஈரான் சிறைகளில் 1.3 லட்சம்பேர் மட்டுமே உள்ளனர். எது அதிகம் என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள்என்றார் புன்னகையுடன்.

கடந்த 27 வருடங்களாக ஈரான் மீது துவேஷத்துடன் நடந்து கொள்கிறது அமெரிக்கா.இது தேவையில்லாதது. ஆதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடுதான் இது. பலதலைமுறைகளாக அணு ஆயுதங்களை தயாரித்துக் குவித்துக் கொண்டிருக்கும் நாடுஅமெரிக்கா. இப்போதும் கூட அவர்கள் ஏதாவது ஒரு புது ஆயுதத்தைத் தயாரித்துக்கொண்டுதான் உள்ளனர்.

ஆனால் நாங்கள் நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். எங்கள் மீது நிர்ப்பந்தத்தைதிணிக்க முயன்றால், அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அதெல்லாம் இனிநடக்கவே நடக்காது.

உலகில் உள்ள ஒவ்வொரு இனத்தையும், சமூகத்தையும் நாங்கள் மதிக்கிறோம், அன்புசெலுத்துகிறோம். அது யூதர்களாக இருந்தாலும் சரி, கிறிஸ்தவர்களாக இருந்தாலும்சரி, முஸ்லீம்களாக இருந்தாலும சரி, அனைவரையும் நிாங்கள் மதிக்கிறோம்.யூதர்களும் மனிதர்கள்தான். அவர்களை நாங்கள் வெறுக்கவில்லை என்றார்.

ஆனால், யூதர்களை ஹிட்லர் லட்சக்கணக்கில் கொன்றார் என்பது குறித்துமுழுமையாக விசாரணை நடத்த வேண்டும். சும்மா பேச்சுவாக்கில் எதையும் சொல்லக்கூடாது என்றார்.

தொடர்ந்து இரானின் யூதர்கள் எதிர்ப்பு பற்றி ஏகப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன.அதற்கு பதிலளித்த அஹமதிநிஜாத், யூதர்கள் பற்றி தொடர்ந்து அமெரிக்க நிருபர்கள்கேள்வி கேட்டீர்கள். அது போலவே பாலஸ்தீனர்கள் குறித்தும் நீங்கள் கவலையுடன்கேள்வி கேட்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். யாரும் கேட்கவில்லை. என்னகாரணமோ?. சரி பரவாயில்லை என்றார்.

லெபனானில் ஹிஸ்புல்லாவுக்கு இரான் ஆயுதம் தந்ததால் தான் இஸ்ரேலுடன் 35நாட்கள் போரிட்டு வெல்ல அவர்களால் முடிந்தது என்று நிருபர்கள் கேட்டபோது,

ஹிஸ்புல்லாவுக்கு இரான் தருவது மதரீதியிலான ஆதரவு தான். ஆயுதம் எல்லாம்தரவில்லை. அதை யாராவது நிரூபிக்க முடியுமா? என்றார்.

ஹிஸ்புல்லாவிடம் இருந்து ஆயுதங்களை பறிக்க ஐ.நா. படை அனுப்பப்படுகிறதே.அவர்களுக்கு இரான் உதவுமா என்று கேட்டபோது,

ஹிஸ்புல்லா பிரச்சனை லெபனானுடன் தொடர்புடையது. அடுத்த நாட்டுபிரச்சனையில் இரான் தலையிடாது என்றார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை அமெரிக்காவும், அதன் தோழன் பிரிட்டனும் இணைந்துகொண்டு தவறாக பயன்படுத்தி பிற நாடுகளை ஆக்கிரமிப்பதை வேலையாகக்கொண்டுள்ளன. இதை தடுத்து நிறுத்துவோம் என்றார்.

முன்னதாக ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் ஈரான் தனது யுரேனியம் திட்டத்தை நிறுத்தவேண்டும் என ஐ.நா. காலக்கெடு விதித்திருந்தது. மேலும் இத்திட்டம் தொடர்பாகஅக்டோபர் மாதத்திற்குள் ஈரானுடன் உடன்பாடு காண ஐரோப்பிய யூனியனின்பேச்சுவார்த்தையாளர் சோலோனாவையும் அமெரிக்கா உள்ளிட்ட 6 நாடுகளும்கேட்டுக் கொண்டுள்ளன என்பது நினைவிருக்கலாம்.

இவை நடைபெறாவிட்டால் ஈரான் மீது பொருளாராதத் தடையை விதிக்க ஐ.நா.சபையை கேட்டுக் கொள்ளப் போவதாகவும் இந்த 6 நாடுகளும் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் ஈரான் அதிபரின் கருத்து குறித்து அமெரிக்க செய்தித் தொடர்பாளர்டோனி ஸ்னோ கூறுகையில், ஈரான் அதிபரின் கருத்துக்களை கேட்டுக்கொண்டிருப்பதை விட நடவடிக்கையில்தான் நாங்கள் அதிகம் நம்பிக்கைவைத்துள்ளோம்.

உடனடிாயக யுரேனியத் திட்டத்தை ஈரான் நிறுத்தினால் நாங்களும் பேச்சுவார்த்தைக்குஉடனடியாக வருவோம் என்றார் ஸ்னோ.

மற்றொரு அமெரிக்க செய்தித் தொடர்பாளரான டாம் கேசி கூறுகையில், அமெரிக்கா,ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய 6 நாடுகள் விதித்துள்ளநிபந்தனைகளுக்கு ஈரான் சம்மதிக்கிறதா, இல்லையா என்பதை ஈரான் முதலில்தெளிவுபடுத்த வேண்டும்.

அதை விடுத்து பரிசீலிக்கிறோம், சிந்திக்கிறோம் என்று கூறுவதால் பிரயோஜனமும்இல்லை. சமயோசிதமாக நடப்பதாக நினைத்துக் கொண்டு பேசுகிறார் ஈரான் அதிபர்.இதன் மூலம் சர்வதேச சமுதாயத்தை குழப்ப அவர் நினைக்கிறார் என்றார் அவர்.

அதே நேரத்தில் ஐ.நா. சபையில் ஈரான் அதிபர் பேசிய பேச்சு பல நாடுகளையும்கவர்ந்தது. அவரது பேச்சுக்கு பெரும் வரவேற்பும் காணப்பட்டது. அணுஆயுதங்களைக் குவித்து வைத்துள்ள வல்லரசு நாடுகளை விட்டு விட்டு ஈரான்போன்ற சிறிய நாடுகளை நிர்ப்பந்திப்பது நியாயமா என்று அவர் கேட்டது பலநாடுகளின் வரவேற்பை பெற்றது.

அஹமதிநிஜாத் அமெரிக்காவைத் தாக்க வெனிசுவேலா அதிபர் சாவேஸ் ஜார்ஜ்புஷ்ஷை தனிப்பட்ட முறையில் திட்டித் தீர்த்துவிட்டுத் தான் விமானம் ஏறினார்.

அமெரிக்கா சொன்னால் எல்லோரும் கேட்க வேண்டுமா? அமெரிக்கா என்ன ஐ.நா.சபையா? முதலில் ஐ.நா. சபையை சீர்திருத்தும் வழியைப் பாருங்கள் என்று அனல்கக்கிவிட்டுச் சென்றுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X