For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பணத்துக்காக மாணவனை கடத்திய பெரியப்பா!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பணத்துக்கு ஆசைப்பட்டு தம்பி மகனையே கடத்திய பெரியப்பா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த பெண்உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை சாஸ்திரி நகரை சேர்ந்த பாலசிங்கம் ஞானராஜ். இவரது மனைவி இந்திரா. இவர்களின் மகன்அலெக்சாண்டர் (10). இவர் 6ம் வகுப்பு படிக்கிறான். இந்திராவின் அக்காவின் கணவர் தம்பிதுரை. இவர் வீடும்அதே பகுதியில் தான் உள்ளது.

இவர்களது மகள் ஆர்த்தியும், அலெக்சாண்டரும் ஒரே பள்ளியில் படிக்கின்றனர்.

வீட்டில் இருந்து தினமும் பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் அலெக்சாண்டர். பெரியப்பா வீட்டுக்கு சென்றுஆர்த்தியையும் அழைத்துச் செல்வான். இந் நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை பள்ளிக்கு சென்றஅலெக்சாண்டரை வேனில் வந்த 3 பேர் கடத்திச் சென்றனர்.

Alexander

அதை பார்த்த பெண் ஒருவர் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதை தொடர்ந்து 15தனிப்படைகளை அமைத்து சென்னை முழுவதும் கடத்தல் கும்பலை போலீசார் தேடினர்.

இந் நிலையில் அன்று பிற்பகலில் சாஸ்திரி நகரில் வசிக்கும் அலெக்சாண்டரின் தாத்தா ஜெயபால் வீட்டுக்குஒருவன் போன் செய்து ரூ.60 லட்சம் பணத்தை கொடுத்தால் சிறுவனை விடுவிடுப்போம் என்று கூறினான்.

செங்கல்பட்டு மெயின் ரோட்டில் உள்ள பொது தொலைப் பேசியில் இருந்து அந்த தொலைபேசி அழைப்புவந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து அந்த பகுதியிலும் தனிப்படை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்திராவின் தந்தை ஜெயபாலுக்கு சொந்தமான நிறுவனத்தில் வேலை பார்த்த 3 பேர் சமீபத்தில் டிஸ்மிஸ்செய்யப்பட்டனர். அந்த ஆத்திரத்தில் அவர்கள் சிறுவனை கடத்தியிருக்கலாம் என்று சந்தேகமும் எழுந்தது.

Meena and Tambidurai

மேலும், மாமல்லபுரம் அருகே பாலசிங்கத்துக்கு சொந்தமான 7 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த இடத்தைவாங்கியதில் ரவீந்திரன் என்பவருடன் தகராறு ஏற்பட்டது. அதனால், ரவீந்திரனுக்கு இதில் தொடர்பு இருக்குமோஎன்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர்.

ஆனால் அவர்கள் யாரும் இந்தக் கடத்தலில் சம்பந்தப்படவில்லை என்று விசாரணையில் உறுதியானது.

இதனால் சொத்துக்கு ஆசைப்பட்டு உறவினர்களே சிறுவனை கடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

Indira

இந் நிலையில் நேற்று பிற்பகலில் ஸ்கூல் பேக்குடன் வீடு திரும்பினான் அலெக்சாண்டர். அவனிடம் போலீசார்விசாரணை நடத்தியபோது தன்னை கடத்திய கும்பல், மேடவாக்கம் பகுதியில் அடைத்து வைத்திருந்ததுவிடுவித்ததாகக் கூறினான்.

இதனால் குற்றவாளிகளை மேடவாக்கம் பகுதியில் போலீசார் தேடினர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மகிந்திராவேன் ஒரு மெக்கானிக் கடையில் நின்றிருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது ராஜா என்ற டிரைவர் வண்டியில் கலரை மாற்ற சொல்லி வண்டியை விட்டுச் சென்றதாகக் கூறினார்.

Arthi

இதையடுத்து ராஜாவிடம் போலீசார் விசாரித்த போது, எனக்கு ஒன்றும் தெரியாது, வண்டியின் உரிமையாளர்மீனா தான் கலரை மாற்ற சொன்னார் என்று கூறவே மீனாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது தான் மீனாவும் அலெக்சாண்டரின் பெரியப்பா தம்பிதுரையும் நண்பர்கள் என்று தெரியவந்தது.

வேனை தம்பிதுரை கடத்தலுக்கு பயன்படுத்தியதும், அலெக்சாண்டரை மீனா தனது வீட்டில் அடைத்து வைத்ததும்உறுதியானது. இதற்காக மீனாவுக்கு ரூ. 1 லட்சம் தருவதாகவும் தம்பிதுரை கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து தம்பிதுரை, மீனா, கடத்தலுக்கு உதவிய பிரதீப், ஜெயராமன், ராஜா ஆகிய 5 பேரையும்போலீசார் கைது செய்தனார். மேலும் கடத்தலில் சம்பந்தப்பட்ட தம்பிதுரையின் மனைவி ராணியை போலீசார்தேடி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X