For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காங்.கில் உள்ளாட்சி சண்டை-டெல்லிக்கு காவடி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

உள்ளாட்சி தேர்தலுக்கான மாவட்டக் குழுக்கள் அமைப்பதில் தமிழக காங்கிரசுக்குள் கடும் கோஷ்டி மோதல்ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து கோஷ்டிகளின் தலைவர்கள் டெல்லிக்கு காவடி தூக்கியுள்ளனர்.

தமிழக உள்ளாட்சி தேர்தலில், தொகுதி பங்கீடு குறித்து திமுகவுடன் காங்கிரஸ் பேச்சு நடத்தியது. காங்கிரஸ்சார்பில் மாநிலத் தலைவர் கிருஷ்ணசாமி, மத்திய அமைச்சர் இளங்கோவன், ஜெயந்தி நடராஜன் ஆகியோர்கலந்து கொண்டனர். ஆனால், வாசன் தரப்பில் யாரும் இடம் பெறவில்லை.

இதையடுத்து தன்னை தவிர்த்துவிட்டு பேச்சு நடத்தப்பட்டுள்ளதாக வாசன் தரப்பில் டெல்லியில் புகார்செய்யப்பட்டது. இதை தொடர்ந்து கிருஷ்ணசாமிக்கு டெல்லி தலைமை டோஸ் விட்டது. கிருஷ்ணசாமிதலைமையில் நடந்த பேச்சுவார்த்தை செல்லாது என்று மேலிடம் கூறிவிட்டது.

இதையடுத்து கிருஷ்ணசாமி, வாசன் கோஷ்டியைச் சேர்ந்த சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் டி.சுதர்சனம்இருவரையும் கொண்ட பணிக் குழுவை காங்கிரஸ் தலைமை நியமித்தது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான எல்லாமுடிவுகளையும் இக்குழு தான் எடுக்க வேண்டும் என்றும் மேலிடம் உத்தரவிட்டது.

மேலும் மாவட்ட அளவில் தோழமைக் கட்சிகளுடன் பேசுவதற்கும், போட்டியிடும் இடங்களை முடிவுசெய்வதற்கும், தேர்தல் பணிகளை மேற்பார்வையிடவும் மாவட்ட குழுக்கள் அமைப்பது குறித்த வழிகாட்டுதல்குறிப்புகளையும் மேலிடம் அனுப்பியது.

இதையடுத்து கிருஷ்ணசாமி, சுதர்தனம் ஆகியோர் திமுகவுடன் மீண்டும் தொகுதி பங்கீடு குறித்து பேசினர்.அப்போது கிருஷ்ணசாமிக்கும் சுதர்சனத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. கிருஷ்ணசாமி தனதுஆதரவாளர்கள் பலமாக உள்ள பகுதிகளை காங்கிரசுக்கு ஒதுக்கக் கோரவே, வாசன் கோஷ்டியை சேர்ந்தசுதர்சனம் வேறு இடங்களைக் கேட்டார்.

இதனால் திமுக தரப்பில் பேச்சு நடத்திய ஆற்காடு வீராசாமிக்கு தலை சுற்றலே வந்துவிட்டகாம்.

திமுகவுடன் பேச்சு நடத்திய பிறகு, தேர்தல் பணிகளை கவனிக்க மாவட்டக் குழுக்களை தலைவர் கிருஷ்ணாசமிதிடீரென்று அறிவித்தார். இதில் வாசன் கோஷ்டிக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை.

இப்போது கட்சியில் உள்ள காங்கிரஸ் கவுன்சிலர்கள், நகராட்சித் தலைவர்கள் பெரும்பாலானோர் வாசன்ஆதரவாளர்கள். ஆனால், அவர்களை ஒதுக்கிவிட்டு மாவட்ட பணி குழுக்களில் பெரும்பாலும் தனதுஆதரவாளர்களையே கிருஷ்ணசாமி நியமித்துள்ளதாக வாசன் தரப்பு குற்றம் சாட்சியுள்ளது.

இதனால் உள்ளாட்சித் தேர்தலில் தனது ஆதரவாளர்களுக்கு இடம் கிடைக்காமல் போய்விடும் என்று வாசன்தரப்பு நினைக்கிறது. மாவட்டக் குழக்களை தன்னிச்சையாக அறிவித்ததை எதிர்த்து, கிருஷ்ணசாமிக்கு சுதர்சனம்காட்டமான கடிதமும் அனுப்பியுள்ளார்.

அதில்,தி

பேச்சுவார்த்தை நடந்த நாம் இருவரும் திமுக தலைமை அலுவலகம் சென்ற போது, எனக்கு தகவல் ஏதுவும்தராமல் தன்னிச்சையாக மாவட்டக் குழுக்களை அமைத்து அறிவித்துள்ளீர்கள். இது காங்கிரஸ் மேலிடத்தில்தேர்தல் வரைமுகைளுக்கு முரணானது. ஒரு தலைப்பட்சமாக மாவட்டக் குழுக்களை நியமித்ததை ஏற்க முடியாது.

உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் போது கட்சி மேலிடத்துக்கு எதிரான அணுகுமுறையை தொடர்ந்துபின்பிற்றி வருகிறீர்கள். இது துரதிருஷ்டவசமானது, வேதனைக்குரியது. கட்சி மேலிட விரோத போக்கை நீங்கள்கைவிட வேண்டும். நீங்கள் அறிவித்துள்ள மாவட்ட தேர்தல் குழுக்களை உடனே மாற்றிவிட்டு, கட்சி மேலிடவழிகாட்டுதலின் படி என்னையும், கலந்து பேசி முறையான மாவட்டக் குழுக்களை அமைக்க வேண்டும் என்றுஅவர் கோரியுள்ளார்.

இதையடுத்து காங்கிரசுக்குள் மோதல் தீவிரமாகியுள்ளது. வாசன் வீட்டில் அவரது ஆதரவாளர்கள் ஆலோசனைநடத்திவிட்டு கிருஷ்ணசாமி மீது டெல்லியில் மீண்டும் புகார் தந்துள்ளனர்.

இதையடுத்து வாசனுக்கு எதிராக கிருஷ்ணசாமியும் காங்கிரஸ் தலைமையிடம் புகார் தந்துள்ளார்.

திமுகவுடன் காங்கிரஸ் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தது. ஆனால் தலைவர்களுக்குள்நடக்கும் மோதலால் அந்தப் பேச்சுவார்த்தை நடக்கவில்லை. இரு தரப்பினருக்கும் இடையே மோதல் முற்றியநிலையில், டெல்லிக்கு வருமாறு கிருஷ்ணசாமிக்கும், சுதர்சனத்துக்கும் அவசர உத்தரவு வந்துள்ளது.

இதையடுத்து இருவரும் டெல்லி விரைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து பிற கோஷ்டித் தலைவர்களும் டெல்லிக்குபிளைட் பிடித்துள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X