For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொல்காப்பிய ஆராய்ச்சி அவசியம்: கலாம்

By Staff
Google Oneindia Tamil News

தஞ்சாவூர்:

தமிழின் தொன்மையான நூல்களை கணிணிமயமாக்க வேண்டும் என்று ஜனாதிபதி அப்துல் கலாம்கோரியுள்ளார்.

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக வெள்ளி விழா ஆண்டு நிறைவு விழாவில் ஜனாதிபதி கலாம் பங்கேற்றார்.பல்கலைக் கழகத்தின் புதிய இணைய தளத்தை துவக்கி வைத்து அவர் பேசுகையில்,

நான் 1952ல் திருச்சி புனித ஜோசப் கல்லூரியில் படித்தபோது பேராசிரியர் அய்யம் பெருமாள் கோனார்ராமாயணத்தின் சுந்தர காண்டத்தை கண் முன் விளக்கினார். அவர் ஆசிரியராக வர நாங்கள் எல்லாம் கொடுத்துவைத்திருந்தோம். இங்குள்ளவர்களும் அதே போல கொடுத்து வைத்தவர்கள். நல்ல ஆசிரியர்கள்கிடைத்துள்ளனர்.

நாடு வளமான நாடாக மாற வேண்டுமானால் முதலில் லட்சியம் தேவை. அதற்கு இளைய சமுதாயத்தினருக்குஆசிரியர்கள் தான் திசை காட்ட வேண்டும். மாணவர்களிடம் தன்னம்பிக்கை வளர்க்கப்பட வேண்டும்.பிரச்சனைகளை துணிந்து எதிர் கொள்ளும் வகையில் அவர்களை ஊக்குவிக்க வேண்டும்.

கடந்த 1964ல் நான் திருவனந்தபுரம் அருகே தும்பா ராக்கெட் ஆய்வு மையத்தில் பணியாற்றியபோதுவிடுமுறையில் எனது சொந்த ஊரான ராமேஸ்வரம் வந்தேன். அப்போது ஆறு மணி நேரம் தாக்கிய புயலில்எங்களுக்கு வாழ்வு தந்த, எனது தந்தையின் படகு அழிந்தது. தனுஷ்கோடியும் அழிந்துவிட்டது.

அப்போது நான் எனது குடும்பத்தாரிடம், நான் வேலை பார்க்கும் திருவனந்தபுரத்துக்கே சென்றுவிடலாம்என்றேன்.

ஆனால், நாம் கடலோடு பிறந்து, வளர்ந்து, அங்கேயே சங்கமிப்போம் என்று என் வீட்டினர் கூறிவிட்டனர்.அவர்களது தன்னம்பிக்கையை நினைத்து பெருமை அடைந்தேன்.

அதே போல கடந்த 1972ல் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் உதிரி பாக தயாரிப்பு பணியில் இருந்தபோது வங்கக்கடலில் கடும் புயல், சுமார் 28 மணி நேரம் புயல் தாக்கியது. அதனால் ஆராய்ச்சிக்கும் தயாரிப்புப் பணிகளுக்கும்பல இடையூறுகள் ஏற்பட்டன. இருந்தும் ரோகிணி ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினோம்.

இப்போது இந்தியா பெரிய விண்வெளி சக்தியாக உருவெடுத்துள்ளது. மேற்சொன்ன இரண்டு சம்பவங்களும்எனக்கு வாழ்க்கை அனுபவத்தை ஏற்படுத்தின. துன்பத்தில் துவளாமல் வெற்றியடைய வேண்டும் என்றநம்பிக்கையை தந்தன.

கம்ப்யூட்டர் மூலம் தொழில் நுட்ப உதவியுடன் பல மொழி நூல்களை ஆங்கிலத்தில் படிக்க முடிகிறது. பிரெஞ்ச்,ஸ்பானிஷ் போன்ற மொழிகள் கூட ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பாகிறது. அதே போல நாம் தமிழ் மொழியிலும்அவற்றை மொழி பெயர்க்கும் (டிரான்ஸ்லிடரேசன்) வகையில் தொழில் நுட்பத்தை உருவாக்க வேண்டும். இதைதமிழ் பல்கலைக் கழகம் செய்ய வேண்டும்.

தமிழ் பல்கலைக்கழகம் தமிழ் கலாசாரம், தமிழ் இலக்கியம், தமிழ் பண்பாடு மூலம் உலகத் தமிழ் மக்களுக்குபாலமாக இருக்க வேண்டும். தொல்காப்பியம் போன்ற பழைய நூல்கள் ஆய்வு செய்யப்பட வேண்டும். இதில்பிஎச்டிக்கள் செய்யப்பட வேண்டும்.

திருக்குறள் குறித்த ஆராய்ச்சியும், திருவள்ளுவர் மைலாப்பூர் அல்லது கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவராஎன்பதையும், திருமறை தோற்றம், ஆதித் திருக்குறள் ஓலைச்சுவடி கிடைக்குமா எனபன போன்ற ஆராய்ச்சிகளும்செய்யப்பட வேண்டும்.

இந்திய மொழிகளில் உள்ள பல நூல்களை பாலகிருஷ்ணன் தலைமையிலான ஆராய்ச்சி மாணவர்கள் கணினிமயமாக்கி உள்ளனர். இதில் 1.30 லட்சம் ஆங்கில நூல்களும், 50,000 பிற மொழி நூல்களும் அடங்கும்.

ஜனாதிபதி மாளிகையில் உள்ள 9,000 நூல்கள் கணினிமயமாக்கப்பட்டுள்ளன. இதே பணியை தமிழ் பல்கலைக்கழகமும் செய்ய வேண்டும்.

தமிழின் தொன்மை, பழமை, மொழிச் செறிவு குறித்த தகவல்களை விளக்கும் பழமையான நூல்களை இணையதளத்தில் ஏற்ற வேண்டும் என்றார் கலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X