For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரை இடைத் தேர்தல்-வெல்ல போவது யார்?

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

மதுரை மத்திய தொகுதியில் மூன்று முக்கிய கட்சிகளும் மூன்று முக்கிய சமூகத்தினரைகுறி வைத்து வேட்பாளர்களை களத்தில் இறக்கியுள்ளன.

மதுரை மத்திய தொகுதிக்கு அடுத்த மாதம் 11ம் தேதி இடைத் தேர்தல்நடைபெறுகிறது.

இந்தத் தொகுதியில் முக்குலத்தோர் வாக்குகள் 24,000மும், முஸ்லீம்களின் ஓட்டுக்கள் 20,000மும் யாதவர்களின்ஓட்டுக்கள் 17,000மும் உள்ளன.

இந்த மூன்று சமூகத்தினரும் தான் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கக் கூடியவர்கள். முக்குலத்தோரின் அதீதஆதரவு பெற்ற அதிமுக, அந்த சமூகத்தைச் சேர்ந்த ராஜன் செல்லப்பாவை களமிறக்கியுள்ளது.

கடந்த முறை அதிமுக சார்பில் ஜக்கையன் நிறுத்தப்பட்டு தோல்வியைத் தழுவினார்.இதனால் இம்முறை மாவட்டச் செயலாளரான, முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்தராஜன் செல்லப்பா நிறுத்தப்பட்டுள்ளார்.

Rajan Chellappa - ADMK

திமுகவின் சார்பில் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவரும் தீவிரமான அழகிரி ஆதரவாளருமான மாநகராட்சிதுணை மேயர் கவுஸ் பாட்சா நிறுத்தப்பட்டுள்ளார்.

திமுக சார்பில் மறைந்த பி.டி.ஆர்.மனைவி ருக்மணி நிறுத்தப்படக் கூடும் என்றுகூறப்பட்டது. பிடிஆரின் மகன் தியாகராஜனை நிறுத்தலாம் என ஸ்டாலின் யோசனைகூறினார். ஆனால், தனது அமெரிக்க வியாபாரங்களை கவனிக்க வேண்டியுள்ளதால்இப்போதைக்கு அரசியல் வேண்டாம் என்று கூறிவிட்டார் தியாகராஜன்.

இதையடுத்து அழகிரியின் பரிந்துரைப்படி சீட் வாங்கிவிட்டார் கவுஸ் பாட்சா பாய்.

இவ்வாறு இரு முக்கிய கட்சிகளும் அந்தத் தொகுதியில் உள்ள முக்கிய சமூகத்தினரின்வாக்குகளை குறி வைத்து வேட்பாளர்களை நிறுத்த, நான் ஜாதியெல்லாம் பார்க்கமாட்டேன் என்று கூறிக் கொண்டிருக்கும் விஜய்காந்த் தனது கட்சியின் சார்பில் யாதவர்சமூகத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வத்தை நிறுத்தியுள்ளார்.

முக்குலத்தோர், இஸ்லாமியர் வேட்பாளர்களை எதிர்கொள்ள அந்தத் தொகுதியில்அதிக அளவில் வசிக்கும் யாதவ சமூக வாக்குகளைப் பெற அச் சமூகத்தைச் சேர்ந்தவேட்பாளரை நிறுத்தியுள்ளார்.

ஆனால், பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர். இவர்தனது வேட்பு மனுவுடன் திருப்புத்தூர் தொகுதி தேர்தல் அதிகாரியின் ஒப்புதல் சான்றை தரவில்லை.இதையடுத்து வேட்பு மனு பரிசீலனைக்குள் அந்த சான்றிதழை கொடுக்க வேண்டும் என தேர்தல் அதிகாரிஉத்தரவிட்டுள்ளார்.

Gous Batcha - DMK

இந்த சான்றிதழ் தருவதில் ஏதாவது சிக்கல் வரலாம் என எதிர்பார்க்கும் விஜய்காந்த்தரப்பு மாற்று வேட்பாளராக முஸ்லீம் இளைஞர் ஒருவரை மனு தாக்கல் செய்யவைத்துள்ளது.

இதனால் திமுக தரப்பு அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. பன்னீர்செல்வத்தின் வேட்பு மனுதள்ளுபடியானால் விஜய்காந்த் கட்சியின் சார்பில் நிறுத்தப்படும் முஸ்லீம் வேட்பாளர்இஸ்லாமியர்களின் வாக்குகளைப் பிரிக்கக் கூடும் என்ற அச்சம் திமுகவிடம்ஏற்பட்டுள்ளது.அதே நேரத்தில் இத்தொகுதியில் முன்பு செல்வாக்குடன் திகழ்ந்தவரும், யாதவசமூகத்தைச் சேர்ந்தவருமான முன்னாள் துணை மேயர் நவநீதகிருஷ்ணன்அதிமுகவிலிருந்து திமுகவுக்கு இழுத்து ஷாக் தந்துள்ளார் அழகிரி.

அதே போல அதிமுக எம்எல்ஏவும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவருமானஎஸ்.வி.சண்முகமும் திமுக பக்கம் இழுக்கப்பட்டுள்ளார். இந்த இருவரும்முக்குலத்தோர், யாதவர் சமூக வாக்குகளை திமுக பக்கம் திருப்புவதில் முக்கிய பங்குவகிப்பார்கள் என திமுக தரப்பு கருதுகிறது.

அதிமுகவின் ராஜன் செல்லப்பா இந்த தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாதவர்.திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்டவர். ஆனாலும் மதுரை அதிமுக வட்டாரத்தில்படு பவர்ஃபுல்லானவர்.

Pannerselvam -DMDK

ஆள் பலம், பண பலம் படைத்தவர். தீவிரமாக செயல்படக் கூடியவர். இந்த வகையில்அதிமுக தரப்பு படு தெம்புடன் காணப்படுகிறது.

கவுஸ் பாட்சாவைப் பொறுத்த வரை அவர் இந்தத் தொகுதிக்காரர். லோக்கல்ஆட்களுக்கு பரிச்சயமானவர். எளிமையான ஆசாமி. ஆள் பலத்துக்கும் பணபலத்துக்கும் அழகிரி பின் புலத்தில் நிற்கிறார். இதனால் தைரியமாக இருக்கிறார்பாட்சா.

ஆனால் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் கலக்கத்தைக் கொடுத்திருப்பதுதேமுதிகதான். கடந்த தேர்தலில் இக்கட்சிக்கு இங்கு 13,000 ஓட்டுக்கள் கிடைத்தன.

திமுக வேட்பாளரான பி.டி.ஆர். மிக சொற்ப வாக்குகளிலேயே வெற்றி பெற்றதற்குதேமுதிகவின் ஓட்டுப் பிரிப்புதான் முக்கிய காரணமாக இருந்தது.

இதனால் இம்முறை தனது சொந்த ஊரான மதுரையில் பிரளயத்தை ஏற்படுத்ததீவிரமாக உள்ளார் விஜய்காந்த்.

விஜயகாந்த்தின் வீடு இத்தொகுதிக்குள்தான் வருகிறது. தங்களது கேப்டன் உருண்டு,புரண்டு, விளையாடிய தொகுதியை கைப்பற்றி கேப்டனின் கரத்தை வலுப்படுத்தமதுரை மத்திய தொகுதி தேமுதிக நிர்வாகிகள் தீவிரமாக உள்ளனர்.

பன்னீர்செல்வத்தின் மனு ஏற்கப்பட்டால் யாதவ சமூக வேட்பாளர் இல்லாவிட்டால்இஸ்லாமிய சமூக வேட்பாளர் என்ற கணக்குடன் அதிமுக-திமுகவை சமூக,ஜாதிரீதியிலும் எதிர்கொள்ள பக்கவாக பிளான் போட்டுள்ளார் விஜய்காந்த்.

பணத்தையும் கவலைப்படாமல் செலவிடத் தயாராக இருக்கிறாராம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X