For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தீவிரவாதம்: அமெரிக்கா மீது முஷாரப் பாய்ச்சல்

By Staff
Google Oneindia Tamil News

லண்டன்:

பாகிஸ்தான் தீவிரவாதிகளை உருவாக்கவில்லை. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள்தான் தலிபான், அல்கொய்தா உள்ளிட்ட தீவிரவாதிகளை உருவாக்கி, வளர்த்தது என்று பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரப்கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

முஷாரப் சமீபத்தில் அமெரிக்க இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், செப்டம்பர் 11 நியூயார்க் தீவிரவாததாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானை குண்டு வீசி அழிக்கப் போவதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்ஆர்மிடேஜ் மிரட்டியதாக பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து அல்கொய்தா தீவிரவாதிகளை ஒப்படைப்பதற்காக அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ பலகோடி ரூபாய் பணத்தை பாகிஸ்தானுக்குக் கொடுத்ததாக ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.

முஷாரப்பின் அடுத்தடுத்து இந்த தகவல்கள் பரபரப்பை உருவாக்கியுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும்மேற்கத்திய நாடுகள் தான் உலகத்தில் தீவிரவாதம் பரவ முக்கிய காரணம் என இன்னொரு பரபரப்பைஏற்படுத்தியுள்ளார் முஷாரப்.

லண்டன் சென்றுள்ள முஷாரப் அங்கு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உரையாற்றினார். அப்போதுபேசுகையில், பாகிஸ்தான் தான் தீவிரவாதத்தை உருவாக்கி உலகெங்கும் பரப்புவதைப் போல ஒரு கருத்துஉள்ளது. இது மிகவும் தவறானதாகும்.

பாகிஸ்தானுக்கும், தீவிரவாதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த நாட்டில் (பாகிஸ்தானில்) தீவிரவாதத்தைஉருவாக்கி, அதை வளர்த்தது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள்தான். தீவிரவாதம் பெரும் பிரச்சினையாகஇன்று உருவெடுத்திருப்பதற்கு இவர்களைத்தான் குற்றம் சொல்ல வேண்டும்.

தலிபான்களையும், அல் கொய்தாவையும் ஆரம்பத்தில் ஆதரித்து வளர்த்தது அமெரிக்காவும், மேற்கத்தியநாடுகளும் தான். தீவிரவாதம் பாகிஸ்தானுக்கு சொந்தமானதல்ல, இந்த நாட்டுக்கு அது இறக்குமதி செய்யப்பட்டஒன்று.(ஆப்கானிஸ்தானில்) சோவியத் யூனியனுக்கு எதிராக போரிட முஜாஹிதீன்களை உருவாக்கி அவர்களுக்கு பணஉதவி, ஆயுத உதவியை அளித்தது அமெரிக்கா தான்.

சோவியத் படைகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் முஜாஹிதீன்கள் அல் கொய்தா என்ற புதிய அமைப்பைஉருவாக்கினார்கள்.

சோவியத்தின் தோல்விக்குப் பிறகு 30,000க்கும் மேற்பட்ட முஜாஹிதீன்கள், 40 லட்சம் ஆப்கன் அகதிகளைசமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது. அப்போது எங்களுக்கு யார் உதவ முன்வந்தார்கள்?

தீவிரவாதத்தை தடுக்கும் முயற்சிகளில் நாங்களும் தீவிரமாகத்தான் இருக்கிறோம். தீவிரவாதத்தை எதிர்க்கும்மேலை நாடுகள், எங்களது நிலையையும் புரிந்து கொள்ள வேண்டும்.

எங்களது நாட்டிலும் தீவிரவாதப் பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. பாகிஸ்தான் மற்றும் எங்களது புலனாய்வுநிறுவனமான ஐ.எஸ்.ஐ ஆகியவற்றின் உதவி இல்லாமல் அமெரிக்காவாக இருந்தாலும் சரி, அல்லது வேறு எந்தநாடானாலும் சரி தீவிரவாதத்தை அழிக்கவே முடியாது. மண்ணைக் கவ்வத்தான் செய்வார்கள். பாகிஸதானின்துணை இல்லாமல் தீவிரவாதத்தை அழிக்க முடியாது என்பதை அமெரிக்காவும், மேலை நாடுகளும் முதலில்புரிந்து கொள்ள வேண்டும் என்றார் முஷாரப்.

பாகிஸ்தான் உதவியில்லாமல் அமெரிக்கா தீவிரவாதத்தை ஒழிக்க முயன்றால் மண்ணைக் கவ்வும் என்றுமுஷாரப் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

7/11: ஐ.எஸ்.ஐ. காரணமல்ல: பாக்.

இதற்கிடையே, மும்பை ரயில் நிலைய தொடர் குண்டுவெடிப்புக்கு பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.தான் காரணம் என மும்பை போலீஸார் கூறியிருப்பது அப்பட்டமான பொய் என பாகிஸ்தான் மறுத்துள்ளது.

இதுதொடர்பாக மும்பை காவல்துறை ஆணையர் ராய் நேற்று தெரிவித்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துபாகிஸ்தான் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் தஸ்னீம் அஸ்லம் கூறுகையில், இது முழுக்க முழுக்க பொய்யானகுற்றச்சாட்டு. பொறுப்பில்லாத, அடிப்படையில்லாத குற்றச்சாட்டுக்களை மும்பை ஆணையர் வெளியிட்டுள்ளார்.

தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களைக் காத்துக் கொள்ள பாகிஸ்தான் மீது பழியைத் திருப்பும்விதமாக செயல்பட்டிருப்பதாக அறிகிறோம் என்று கூறியுள்ளார் தஸ்னீம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X