For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னைக் கொல்ல சதி: விஜய்காந்த் புது குண்டு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கூட்டணி கட்சிகளிடம் கெஞ்சி நிற்பதற்குப் பதில் பேசாமல் தூக்குப் போட்டுத்தொங்கலாம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் படு ஆவேசமாக கூறியுள்ளார்.

சென்னை மாநகராட்சி வார்டு தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களைஆதரித்து விஜயகாந்த் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். வேனில் நின்றபடி பேசிவாக்கு சேகரித்த விஜயகாந்த் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் சூறாவளிபயணம் மேற்கொண்டார்.

பிரசாரத்தின்போது விஜயகாந்த் பேசுகையில்,

கடந்த சட்டசபைத் தேர்தலில் நான் தனியாக நிற்கிறேன், நீங்களும் அப்படி நிற்கத்தயாரா என்று முக்கியமான கட்சிகளுக்கு சவால் விடுத்தேன். ஆனால் யாரும் தனியாகநிற்க முன்வரவில்லை.

ஆனால் நான் தனியாகத்தான் நின்றேன். யாருடனும் கூட்டணி வைக்காமல்மக்களுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டேன்.

இதுவரை திமுக, அதிமுகவுக்கு மாற்றி மாற்றி ஓட்டுப் போட்டு விட்டீர்கள். இந்தமுறை எங்களுக்குப் போடுங்கள் என்றுதான் நான் மக்களிடம் கேட்டு வருகிறேன்.சட்டசபைத் தேர்தலிலும் அந்தக் கோரிக்கையைத்தான் வைத்தேன். இந்த உள்ளாட்சித்தேர்தலிலும் அதே கோரிக்கையைத்தான் வைக்கிறேன்.

சிக்குன்குனியா மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கொசுக்களை ஒழிக்க ஒருஉருப்படியான திட்டமும் இல்லை. கொசு ஒழிப்பு என்ற பெயரில் பல கோடி பணத்தைசுருட்டுகின்றனர். கொசுவை ஒழிக்க அடிக்கப்படும் மருந்தில் வீரியமே இல்லை.மருந்து அடிக்கப்பட்ட கொசுக்கள், ஏதோ நல்லெண்ணையில் தேய்த்து விட்ட மாதிரி,புத்துணர்ச்சியுடன்தான் வெளியே வருகின்றன.

ஆனால் ஆட்சியாளர்கள் மக்கள் பிரச்சினையில் கவனம் செலுத்தாமல்சம்பாத்தியத்தில்தான் கவனம் செலுத்துகின்றனர். அவர்கள் நடத்தும்பத்திரிகைகளைத்தான் படிக்க வேண்டும். அவர்கள் நடத்தும் டிவியைத்தான் பார்க்கவேண்டும். ரேடியோவைத்தான் கேட்க வேண்டும்.

எனக்கு நியாயம் முக்கியம். தப்பு என்றால் அது தப்புதான். தவறு என்றால் அதைஏற்றுக் கொள்வேன். எனக்கு எல்லோரும் ஒன்றுதான். அண்ணன், தம்பிகள்தான்.ஜாதி, மதம் எனக்குக் கிடையாது, தெரியாது.

சிங்கார சென்னை என்று முன்பு கூறினார்கள். ஆனால் நலைமை என்ன? குடிசைப்பகுதிகளில் சுகாதாரம் இல்லை. சாக்கடை தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. கொசுத்தொல்லை அதிகம். குப்பை கூளம் நிறைய. இப்படி இருக்கிறது இவர்களின் சிங்காரசென்னைத் திட்டம்.

எனக்கு வாய்ப்பு கொடுத்துப் பாருங்கள். ஒரே வருடத்தில் சென்னையில் கொசுக்களைஒழித்துக் கட்டுகிறேன். மாநகராட்சி பள்ளிகளை தனியார் பள்ளிகளைப் போல தரம்வாய்ந்ததாக மாற்றுவேன்.

பணத்துக்காக ஓட்டுப் போடாதீர்கள். அவர்கள் தரும் பொய்யான வாக்குறுதிகளைநம்பி விடாதீர்கள். அவர்கள் கொடுக்கும் பணத்தை நிராகரித்து விடுங்கள். நூற்றுக்குநூறு சாதனை என்று அவர்களது டிவியில் விளம்பரம் செய்கிறார்கள்.

மக்கள் அப்படியா சொல்கிறார்கள்? மக்கள் வரிப்பணத்தை செலவழித்து நீங்களாகஇப்படி ஒரு விளம்பரம் கொடுத்துக் கொள்கிறீர்கள். மக்கள் கட்டும் வரிப்பணம் ஒரேஒரு குடும்பத்திற்கு வருமானமாக போகிறது.

இலவச டிவி தருகிறீர்கள். ஆனால் கேபிள் கட்டணமாக மாதம் ரூ. 100 பணத்தை யார்தருவது? அதற்கு முன்பணமாக ரூ. 250 யார் தருவது.? இதனால் ஏழைக்குடும்பங்களின் மாத பட்ஜெட் கூடுகிறது. ஒரு நேரம் மட்டுமே கஞ்சிகுடிப்பவர்களால் எப்படி இப்படி செலவழிக்க முடியும்.

எனவே கவர்ச்சிகரமான திட்டங்களை சொல்லாதீர்கள். அதற்குப் பதில் வளர்ச்சிப்பணிகளை அறிவியுங்கள். குடும்பத்தில் ஒருவருக்கு வேலை கொடுத்திருந்தால்எத்தனையோ குடும்பங்கள் வளர்ந்திருக்கும்.

விஜயகாந்த்தை என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள். எங்களுக்கு முரசு சின்னம்கிடையாது என்கிறீர்கள். காட்டு யானையைத் தான் நாம் பார்க்க வேண்டும். சின்னமுயலைப் பற்றி சிந்திக்கக் கூடாது என்கிறீர்கள்.

நீங்களும் ஒரு காலத்தில் முயலாகவும், எலியாகவும், பூனையாகவும் இருந்ததைமறந்து விடாதீர்கள். சின்னத்தை முடக்கிய பின்னரும் நாங்கள் தனியாக நிற்கிறோம்.நீங்கள் சின்னம் இல்லாமல் நிற்கத் தயாரா?

எனது கட்சிக்கு அங்கீகாரம் வேண்டும். கிடைக்கவில்லை என்றால் குட்பை என்றுசொல்லி விட்டு நான் பாட்டுக்குப் போய்க் கொண்டிருப்பேன். மக்களுக்காகபோராடுகிற என்னைப் போன்றவர்களுக்காகப் போராட 40 பேர் பின்னால்வருவார்கள்.

கூட்டணிக் கட்சிகளிடம் நான் கை கட்டி ஜால்ரா அடிக்க முடியாது. அதை விட தூக்குப்போட்டு சாகலாம். ஆனால் மக்கள் முன்பு கை கட்டி நிற்பேன். எனக்கு மக்கள்தான்முதலாளிகள்.

உண்மையைப் பேசினால் என்னை கொலை செய்து விடுவார்கள் என்கிறார்கள். நான் மரணத்தைக் கண்டுஅஞ்சவில்லை. ஆறிலும் சாவு, நூறிலும் சாவு. எனவே உண்மையைப் பேச தயங்க மாட்டேன். செத்த பிறகும்மனிதனை இடுப்பில் கட்டியுள்ள அரைஞான் கயிற்றை அறுத்து விட்டுத்தான் எடுத்துச்செல்கின்றனர் என்றார் விஜயகாந்த்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X