For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுரையில் கருணாநிதி, ஜெ, கேப்டன் முற்றுகை

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

முதல்வர் கருணாநிதி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோர்இன்று மதுரை மத்திய தொகுதியில் இடைத் தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளதால் தேர்தல் களம் படுசூடாகியுள்ளது.

மதுரை மத்திய தொகுதிக்கு வருகிற 11ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம்உச்சகட்டத்தை எட்டியுள்ளது. முக்கிய கட்சிகளின் தலைவர்கள் தொகுதிக்குள் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.

இன்று மதுரை வரும் கருணாநிதி, மாலை 6 மணிக்கு திமுக வேட்பாளர் கெளஸ் பாட்ஷாவை ஆதரித்து நடக்கும்பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

வடக்குமாசி வீதி -மேலமாசி வீதி சந்திப்பில நடைபெறும் இந்தப் பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கிருஷ்ணசாமி, பாமக தலைவர் டாக்டர் ராமதாஸ், மார்க்சிஸ்ட் செயலாளர் வரதராஜன், இந்திய கம்யூனிஸ்ட்செயலாளர் தா.பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன், எம்.ஜி.ஆர். கழகதலைவர் ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

மேலும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களும் இந்த கூட்டத்தில்அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.

இக்கூட்டத்திற்குப் பின்னர் இரவு மதுரையில் தங்கும் கருணாநிதி, நாளை காலை திருச்சி செல்கிறார்.

இதேபோல நேற்றே மதுரைக்கு வந்து விட்ட ஜெயலலிதா இன்று மாலை மதுரை மத்திய தொகுதிக்குட்பட்டபகுதிகளில் தீவிர பிரசாரத்தை மேற்கொள்கிறார். தெற்குவாசலில் இருந்து பிரசாரத்தை தொடங்கும் அவர்பல்வேறு பகுதிகளில் தெருத் தெருவாக வேன் மூலம் பிரசாரம் மேற்கொள்கிறார்.

நாளை மாலை வடக்கு மாசி வீசி -மேலமாசி வீதி சந்திப்பில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி ஜெயலலிதா பேசுகிறார்.இக்கூட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்ட கூட்டணித் தலைவர்களும் கலந்துகொள்கின்றனர்.

இந் நிலையில் மதுரை மத்திய தொகுதியில் நேற்றே தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார். அவருக்கு முன்பாக அவரது மனைவி பிரேமலதா மதுரையில் முகாமிட்டு வீடு வீடாக சென்று பிரசாரம்செய்து வருகிறார்.

இன்று காலை ஒத்தக்கடையிலிருந்து பிரசாரத்தைத் தொடங்கும் விஜயகாந்த், மேலூர், திருவாதவூர்,கடச்சனேந்தல், ஆணையூர், மகாத்மா காந்தி நகர், நாகமலை புதுக்கோட்டை, திருமங்கலம், உசிலம்பட்டிஉள்ளிட்ட இடங்களில் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த என முக்கியத் தலைவர்கள் மதுரையில் முற்றுகையிட்டுள்ளதால் நகர்முழுவதும் பரபரப்பாக காணப்படுகிறது.

சம்பந்தப்பட்ட கட்சிகளின் சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்கள், கொடிகள், தோரணங்கள், விளக்குஅலங்காரங்களால் மதுரை நகரம் சித்திரைத் திருவிழா போல படு உற்சாகமாக காணப்படுகிறது.

கருணாநிதி அழகர் கோவில் சாலை சர்க்யூட் ஹவுஸில் தங்குகிறார். அதற்கு அருகே உள்ள சங்கம் ஹோட்டலில்ஜெயலலிதா தங்குகிறார். இதனால் அழகர் கோவில் சாலையில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டுள்ளது.அப்பகுதியில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X