For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்க உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:சென்னை தி.நகரில் உள்ள பிரபல சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் 4 மாடிகளைஇடித்துத் தள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி.நகர் உஸ்மான் சாலையில் பிரபலமான சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் 7 மாடிக்கட்டடம் உள்ளது. இந்தக்கட்டத்தின் பூமிக்கடியில் உள்ள தரைத் தளம் உள்ளிட்ட 4 தளங்கள் அனுமதியின்றிகட்டப்பட்டதாக சென்னை பெருநகரவளர்ச்சிக் குழுமம் குற்றம் சாட்டியது.

அனுமதியின்றி கட்டப்பட்ட நான்கு தளங்களையும் இடிக்கவும் அது முடிவு செய்தது.இதை எதிர்த்து சென்னைஉயர்நீதிமன்றத்தை அணுகியது சென்னை சில்க்ஸ். வழக்கை விசாரித்தஉயர்நீதிமன்றம், 4 மாடிகளையும் இடிக்கலாம் எனஅனுமதி அளித்தது.

இதைத் தொடர்ந்து சென்னை சில்க்ஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடுசெய்யப்பட்டது. இந்த மனுவைவிசாரித்த நீதிபதிகள், சேமா, பி.கே.பாலசுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்இன்று தீர்ப்பளித்தது.

அதில், சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதே என்று கூறிய நீதிபதிகள்அனுமதியின்றி கட்டப்பட்ட 4 தளங்களையும் இடிக்க உத்தரவிட்டனர்.

ஏற்கனவே இதே கட்டத்திற்கு அருகே புதிதாக கட்டப்பட்டு வந்த சென்னை சில்க்ஸ்நிறுவனத்திலும் அனுமதியின்றி 3தளங்களை கட்டியிருந்தனர் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தார். அந்த தளங்களையும்இடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X