For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆட்டம் கண்ட அதிமுக- மீளப் போவது எப்படி?

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:கோட்டைகள் என்று அதிமுகவினரால் சொல்லப்பட்டு வந்த மாநகராட்சிகளும், நகராட்சிகளும் விஜயகாந்த்கட்சியின் புண்ணியத்தால் அதிமுகவின் கைகளிலிருந்து நழுவிப் போயுள்ளது.

அதிமுகவின் வாக்கு வங்கியில் தேமுதிக பெரும் அடியைக் கொடுத்துள்ளது அக்கட்சியினருக்கு பேரதிர்ச்சியாகஅமைந்துள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளைப் பார்க்கும் யாருக்குமே அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை மிகப் பெரியஅதிர்ச்சியையே கொடுக்கும். அந்த அளவுக்கு பெரும் சரிவைச் சந்தித்துள்ளது அதிமுக.

தன் வசம் இருந்த கோவை, சேலம், நெல்லை என மூன்று மாநகராட்சிகளையும் இழந்துவிட்டு நிற்கிறது அதிமுக.மதுரையில் தேமுதிகவை விட குறைவான வார்டுகளைப் பெற்று கேலவமான தோல்வியைச் சந்தித்துள்ளது.திருச்சியிலும் தேய்பிறையாகி விட்டது. இப்படி ஐந்து மாநகராட்சிகளிலும் பெரும் அடியை வாங்கிஅவமானத்தை சந்தித்தள்ளது அதிமுக.

நகராட்சித் தேர்தலிலும் அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சிதான் கிடைத்துள்ளது. வெறும் ஐந்து நகராட்சிகளில்மட்டுமே அதிமுகவின் கை ஓங்கியுள்ளது. இந்த அளவுக்கு பெரும் தோல்வியை எப்படி அதிமு சந்தித்ததுஎன்பதை பார்த்தால் பல காரணங்கள் விடையாக கிடைக்கின்றன.

முதலில் அதிமுகவின் வாக்கு வங்கி. எம்ஜிஆர் காலத்தில் முக்குலத்தோர் சமுதாயத்தினரின் வாக்குகளையும்தலித் சமூகத்தினரின் வாக்குகளையும் தன் வசம் வைத்திருந்தார். சமூகரீதியில் எதிரெதிராய் இருக்கும் இருதரப்பினரை தன் வசம் மெஸ்மரிஸம் செய்து வைத்திருந்தார் எம்ஜிஆர். அதே நேரத்தில் கட்சியில் எல்லாசமூகத்தினருக்கும் பிரதிநிதித்துவம் தந்தார்.

எம்ஜிஆருக்குப் பின் முக்குலத்தோர்-தலித் வாக்குகளை அதிமுக பக்கமே கட்டிப் போட்டு வைத்திருக்கஜெயலலிதாவாலும் சில காலம் முடிந்தது. எம்ஜிஆர் மாயாஜாலத்தை தன்னாலும் செய்ய முடியும் என்றுநிரூபித்துக் காட்டினார் ஜெயலலிதா.

ஆனால், கட்சியில் சசிகலாவின் செல்வாக்கு அதிகரிக்க அதிகரிக்க அதிமுகவே முக்குலத்தோர் கட்சியாக சுருங்கஆரம்பித்தது. அதிலும் கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூன்று பிரிவினரில் சசிகலா சார்ந்த கள்ளர்சமூகத்தினரே கட்சியின் முக்கிய பதவிகளை இப்போது ஆக்கிரமித்துள்ளனர்.

இதனால் மற்ற இரு பிரிவினரும் அதிமுகவை விட்டு விலக ஆரம்பித்துள்ளனர். மேலும் அதிமுக சசிகலாவேஆட்களுக்கு உரிய கட்சி என்ற பிரமை உருவாகி வருவதால் தலித் வகுப்பினரும் அதிமுகவை விட்டு விலகஆரம்பித்துவிட்டனர். இது தான் கடந்த சட்டசபைத் தேர்தலில் எதிரொலித்தது.

முக்குலத்தோர் அதிகம் உள்ள தென் மாவட்டங்களில் அதிமுக பெரும் தோல்வியை சந்தித்ததும்முக்குலத்தோரின் வாக்குகளை திமுக வென்றதும் இச் சமூக மக்களின் வாக்களிக்கும் முறையில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றத்தை தெளிவாக்கியது.

மேலும் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனை தன் பக்கம் சேர்த்ததால், ஜெயலலிதா மீது கள்ளர்பிரிவினருக்கும் கூட அதிருப்தி கிளம்பியது. இதை உணர்ந்தே சட்டசபைத் தேர்தலின்போது திருமாவளவனுடன்சேர்ந்து தென் தமிழகத்தில் ஜெயலலிதா பிரசாரம் செய்யவில்லை.

இதை திருமாவளவன் ஜீரணித்துக் கொண்டாலும் பெரும்பாலான தலித்களும் விடுதலை சிறுத்தைகள்கட்சியினரும் அவமானமாகக் கருதினர். இதனால் அவர்களும் அதிமுகவுக்கு வாக்களிக்கவில்லை.

இவ்வாறாக அதிமுகவின் மிக முக்கிய வாக்கு வங்கியான முக்குலத்தோர்-தலித் வாக்குகள் அதிமுகவை விட்டுவிலகிச் சென்றுவிட்டன.

இந் நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் கூட்டணியை விட்டு திருமா. விலகியது அதிமுகவுக்கு பெரும்பாதிப்பை ஏற்படுத்தி விட்டது. தலித் வாக்குகள் சுத்தமாக கிடைக்காமல் போயுள்ளது.

அதே போல கள்ளர் பிரிவினர் தவிர முக்குலத்தோரின் பிற பிரிவினரும் அதிமுகவை இம்முறையும்கைவிட்டுவிட்டனர். இதனால் தான் தென் மாவட்டங்களில் அதிமுக பெரும் தோல்வியை சந்தித்துள்ளது.

இது சாதிரீதியிலான காரணம். அதிமுகவின் வீழ்ச்சிக்கு இன்னொரு மெகா காரணம் விஜயகாந்த்தின் தேமுதிக.எம்.ஜி.ஆர் உருவாக்கி வைத்துவிட்டுப் போன ஓட்டு வங்கியில் புகுந்து விளையாடி விட்டார் விஜயகாந்த்.குறிப்பாக ஜெயலலிதாவால் புறக்கணிக்கப்பட்ட எம்.ஜி.ஆர். விசுவாசிகளை தன் பக்கம் திரும்ப வைத்துள்ளார்விஜயகாந்த்.

அதிமுகவிலிருந்து ஓரம் கட்டப்பட்ட பலரும் விஜயகாந்துக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோஆதரவு தெரிவித்து வருகின்றனர். இது அதிமுக பலவீனப்பட ஒரு காரணம்.

ஆனால் விஜயகாந்த்தின் அணுகுமுறை வேறாக இருந்தது. திமுகவை கடுமையாக சாடிய அவர் அதிமுகவையோஅல்லது ஜெயலிலதாவையோ கடுமையாக பேசியதில்லை, விமர்சித்ததில்லை.

திமுகவை கடுமையாக எதிர்ப்பதன் மூலம் தனக்கோ அல்லது அதிமுகவுக்கோ கூடுதல் பலம் கிடைக்கும் என்றஎண்ணம்தான் அது. ஆனால் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விட்டது.

திமுகவை எதிர்க்கும் விஜய்காந்தை மாற்று சக்தி என்பது போல மக்கள் பார்க்க ஆரம்பித்து விட்டதால்,அதிமுகவுக்குப் போயிருக்க வேண்டிய வாக்குகள் விஜயகாந்த் பக்கம் வந்து விட்டது.

அதே நேரத்தில் விஜய்காந்தால் திமுகவின் வாக்கு வங்கியில் பெரிய அளவில் பிளவு ஏற்படவில்லை என்பதும்தெளிவாகியுள்ளது. கூட்டணி பலம், எப்போதும் போல உள்ள வாக்கு வங்கி ஆகியவற்றை வைத்துக் கொண்டுதிமுக கடந்த சட்டசபைத் தேர்தலிலும், இந்தத் தேர்தலிலும் கரையேறிவிட்டது.

ஆனால் அதிமுக வாக்கு வங்கியில்தான் விஜய்காந்த் ஏற்படுத்திய பெரும் பிளவு திமுகவின் சாதாரணவெற்றியை பிரமாண்ட வெற்றியாக்கிவிட்டது.

அதிமுகவின் தோல்விக்கு இன்னொரு முக்கியக் காரணம் ஜெயலலிதாவின் பிரசாரம் எடுபடாமல் போனது.முதலில் சிக்குன் குனியா. தமிழகம் ழுவதும் நூற்றுக்கணக்கானோர் சிக்குன் குனியாவால் இறந்து போய்விட்டதாக ஜெயலலிதாவும், அதிமுகவும், வைகோவும், ஜெயா டிவியும் பிரசாரம் செய்தன.

ஆனால் சிக்குன் குனியாவுக்கு பலியானவர்கள் என ஜெயலலிதா வெளியிட்ட லிஸ்டில் தற்கொலை செய்தவர்கள்,விபத்தில் இறந்தவர்கள், உயிரோடு இருப்பவர்களின் பெயர்கள் எல்லாம் இருப்பது வெட்ட வெளிச்சமானது. இதுசிக்குன் குனியா பிரச்சாரத்தை நாறடித்துவிட்டது.

அதேபோல, உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின்னர் இலவசத் திட்டங்கள் அத்தனையையும் திமுக அரசு நிறுத்திவிடும் என்ற ஜெயலலிதாவின் பிரசாரத்தையும் மக்கள் நம்பவில்லை, ஏற்கவில்லை. காரணம் முதலில் 30,000டிவிகளை முதல் கட்டமாக கொடுத்த திமுக அரசு அடுத்து 25 லட்சம் டிவிகள் வழங்க டெண்டர் விட்டு அதைபெரிய அளவில் விளம்பரப்படுத்தியது. இதனால் நமக்கும் டிவி கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்களிடையேஏற்படுத்தியது திமுக.

இன்னொரு முக்கியமான விஷயம், நகர்ப்புற வாக்காளர்களை தன் பக்கம் முழுமையாகத் திருப்பியுள்ளது திமுக.இதுவரை பெரிய அளவில் ஊழல் ஏதும் இல்லாதது, இதுவரை இல்லாத அளவுக்கு சிறந்த ஆட்சியை கருணாநிதிதந்து வருவதாக பேசப்படுவது ஆகியவை படித்தவர்களை திமுக பக்கம் இழுத்துள்ளது.

முதல்வர் என்றும் பார்க்காமல் கருணாநிதியை மூன்றாம் தர வார்த்தைகளால் ஜெயலலிதா விமர்சித்து வருவது,சட்டசபையில் கருணாநிதியை அதிமுக எம்எல்ஏக்கள் அடிக்கப் பாய்ந்தது போன்றவற்றை மக்கள் ரசிக்கவில்லைஎன்பதும் தெளிவாகியுள்ளது.

அதே நேரத்தில் ஜெயலலிதாவை கருணாநிதி அம்மையார் என்றே மரியாதையோடு விளிப்பது, அன்னியமுதலீட்டை இழுப்பது, தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய நிறுவனங்களை தமிழகத்துக்கு கொண்டுவருவதில் திமுக காட்டி வரும் ஆர்வம் ஆகியவை நகர்ப் புற படித்தவர்கள் மத்தியில் நல்ல தாக்கத்தைஏற்படுத்தியுள்ளது.

இதனால்தான் மாநகராட்சிகளையும், நகராட்சிகளையும் அள்ளிக் கொண்டுள்ளது திமுக. கிராமப்புற வாக்குவங்கியை மட்டுமே ஓரளவுக்கு அதிகவால் தக்க வைத்துக் கொள்ள முடிந்துள்ளது. இதனால்தான் கொஞ்சமாவதுமுகத்தை காப்பாற்றிக் கொள்ள முடிந்திருக்கிறது.

1996ல் இதை விட மிகப் பெரிய தோல்வியை சந்தித்தவர் ஜெயலலிதா. ஆனால் அதன் பின்னர் 2001ல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார். ஆனால் அப்போதெல்லாம் கூட்டணிகளே முக்கியப் பங்கு வகித்தன.

இப்போதும் சரியான கூட்டணி இல்லாமல் அவதிப்படுகிறது அதிமுக. அதேசமயம், வலுவான கூட்டணியுடன்வசதியான முறையில் அரசியல் சவாரியை செய்து வருகிறது திமுக.

போராட்டத்துக்குப் பேர் போனவர் ஜெயலலிதா. அதிமுகவை முதலில் விஜய்காந்திடம் இருந்து அவர் எப்படிக்காப்பாற்றப் போகிறார் என்பது தான் இப்போதைய கேள்வி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X