• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அசைக்க முடியாத சக்தியாகும் விஜய்காந்த்

By Staff
|

சென்னை:தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு அடுத்த பலம் வாய்ந்த அரசியல் சக்தி தேமுதிகதான் என்பதை உள்ளாட்சித்தேர்தல் முடிவுகள் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார் விஜயகாந்த்.

மதுரையில் கட்சியைத் தொடங்கிய சில மாதங்களிலேயே சட்டசபைத் தேர்தலை சந்தித்தது விஜயகாந்த்தின்தேமுதிக. அதிமுக தரப்பு பல ரூபங்களில் கூட்டணிக்காக முயற்சித்தும் கூட கொஞ்சமும் பிடி கொடுக்காமல்நழுவித் தப்பித்த விஜயகாந்த், அனைத்துத் தொகுதிகளிலும் தனித்தே போட்டி என்று அதிரடியாக அறிவித்தார்.

கடைசி வரை தனது முடிவில் சற்றும் பின்வாங்காமல் அத்தனை தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தினார்.விஜயகாந்த் மட்டுமே இத்தேர்தலில் வெற்றி பெற்றாலும் கூட அக்கட்சிக்கு 28 லட்சம் ஓட்டுக்கள் கிடைத்தபோது,அத்தனை கட்சிகளும் சற்றே ஆடித்தான் போயின.

சரி, புதுக் கட்சிதானே, ஒரு ஆர்வத்தில் வாக்களித்திருப்பார்கள் மக்கள் என்ற அரசியல் நிபுணர்களின் கணிப்பைபொய் என்று மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் நிரூபித்தார் விஜயகாந்த்.

இந்த இடைத் தேர்தலில் தேமுதிக வேட்பாளருக்கு, பொதுத் தேர்தலை விட கூடுதலாக 5,000 ஓட்டுக்கள்கிடைத்ததும், அதிமுகவுக்கு படு கேவலமான தோல்வி கிடைத்ததும், அத்தனை அரசியல் கட்சிகளுக்கும் கிலியைஏற்படுத்தியுள்ளது.

விஜயகாந்த் குறித்துப் பேசினாலே கடுப்பாகி விடும் முதல்வர் கருணாநிதியே வாய் விட்டு, பாராட்டத்தக்கமுன்னேற்றம் என்று தேமுதிகவுக்கு வாழ்த்து தெரிக்கும் நிலைக்குத் தள்ளப்படும் அளவுக்கு விஜயகாந்த்தின்வளர்ச்சி பிரமாதமாக உள்ளது.

இப்போது உள்ளாட்சித் தேர்தலிலும் தான் ஒரு தனி சக்தி, அரசியலில் இனிமேல் அசைக்க முடியாத சக்திஎன்பதை நிரூபித்துள்ளார் விஜயகாந்த். கிட்டத்தட்ட ஒன்னே கால் லட்சம் வேட்பாளர்களை இத்தேர்தலில்நிறுத்தியிருந்தார் விஜயகாந்த்.

மளிகைக் கடைக்காரர்கள்:

இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அரசியல் களம் ரொம்பப் புதிது. உள்ளூரில் செல்வாக்கு பெற்ற மிகச்சாதாரணர்களையே வேட்பாளர்களாக நிறுத்தியது தேமுதிக. உதாரணத்திற்கு பல வார்டுகளில் அந்தந்தபகுதிகளில் பிரபலமான மளிகைக் கடைக்காரர்களையே வேட்பாளர்களாக நிறுத்தியிருந்தார் விஜயகாந்த். அவரதுஇந்தப் பாணி முக்கிய கட்சிகளுக்கு பெரும் அடியைக் கொடுத்தது.

அந்தப் பகுதி மக்களோடு, குறிப்பாக பெண்களோடு தினந்தோறும் தொடர்பில் இருக்கும் மளிகைக்கடைக்காரர்களால் வாக்குகளை அள்ள முடிந்திருக்கிறது.

நெல்லை தவிர மற்ற மாநகராட்சிகள் அனைத்திலும் தனது கணக்கைத் தொடங்கிவிட்டார் விஜய்காந்த்.

நகராட்சிகளில் விஜயகாந்த் கட்சிக்கு 94 வார்டுகள் கிடைத்துள்ளன. இதுவும் பிரமாதமான வளர்ச்சியாகும்.பேரூராட்சி வார்டுகளில் 174 இடங்களில் தேமுதிக வெற்றி பெற்றுள்ளது. ஊராட்சி ஒன்றிய வார்டுகளிலும் கூட67 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

மொத்தத்தில் எந்த ஊராட்சி அமைப்பிலும் இல்லை என்ற சொல்ல இல்லாத அளவுக்கு அனைத்துஅமைப்புகளிலும் கணிசமான பிரதிநிதித்துவத்தை தேமுதிக பெற்றுள்ளது. பெரிய கட்சிகளுடன் ஒப்பிடுகையில்,இது சாதாரண எண்ணிக்கைதான்.

ஆனால், எந்த ஆதாரவும், பண பலமும் இல்லாமல் மக்களை மட்டுமே நம்பி நின்று இந்த வெற்றியை தேமுதிகபெற்றுள்ளது.

அதிமுக ஓட்டு வங்கியில் ஓட்டை:

இந்தத் தேர்தல் முடிவுகள் மூலம் ஒரு விஷயம் தெளிவாகிவிட்டது. திமுகவை விட அதிமுக ஓட்டுக்களையேவிஜய்காந்த் அதிகமாக தன் பக்கம் இழுத்துள்ளார். இந்தச் செய்தி அதிமுகவுக்கு இடி விழுந்த மாதிரிஅமைந்துள்ளது.

அதிமுகவின் ஓட்டு வங்கியில் விளையாடியதோடு மட்டுமல்லாமல் மதிமுக ஓட்டு வங்கியையும் நாறடித்துள்ளார்விஜய்காந்த்.

இதற்கு மதுரையையே உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இது எம்ஜிஆரின் கோட்டை. அதிமுகவுக்குஅசைக்க முடியாத பலம் தந்த ஏரியா.

ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவை விட அதிக இடங்களைப் பிடித்து மாநகராட்சியில் எதிர்க் கட்சிஅந்தஸ்தை பிடித்துள்ளது தேமுதி. இங்கு அதிமுக 3வது இடத்துக்குப் போய்விட்டது.

இது அதிமுகவுக்கு பேரிடியான விஷயமாகும்.

மத்திய தொகுதி இடைத் தேர்தலிலும் கூட அதிமுகவுக்கும், தேமுதிகவுக்கும் இடையிலான ஓட்டு வித்தியாசம்வெறும் 2,500தான். இப்போது மாநகராட்சித் தேர்தலில் 35 வயது அதிமுகவுக்கு இணையான அந்தஸ்தைதேமுதிக என்ற ஒரு வயது குழந்தை பெற்றிருப்பது அதிமுகவை மிரட்சியில் ஆழ்த்திவிட்டது.

அதேபோல அதிகவின் கோட்டையாக கருதப்படுவது கோவை. இங்கும் கூட அதிமுகவை (4) விட இரண்டுவார்டுகளே குறைவாக பெற்றுள்ளது தேமுதிக (2). இவை தவிர பல நகராட்சி, பேரூராட்சிகளிலும் அதிமுகவுக்குஇணையாக அல்லது அதை விட சற்றே குறைவான வார்டுகளைப் பெற்று அதிமுகவின் இடத்தை நோக்கிதேமுதிக நகர்ந்து வருவது உறுதியாகியுள்ளது.

ஒட்டுமொத்தமாக தேர்தல் டிவுகளைப் பார்க்கும்போது தமிழகத்தின் அடுத்த பெரிய அரசியல் சக்தி தேமுதிகதான்என்பது தெளிவாகும். அதேசமயம், அதிமுகவின் ஆணி வேரைப் பிடுங்கவும் ஆரம்பித்துள்ளது என்பதும் தெரியவருகிறது.

இப்படியே நிலைமை போனால் அதிமுகவை விட பலம் வாய்ந்த கட்சியாக தேமுதிக உருவெடுக்கக் கூடியவாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

திராவிடக் கட்சிகள் யாருடனாவது ஒட்டிக் கொண்டு ஒட்டுண்ணி கட்சியாகவே வாழ்ந்து கொண்டிருக்கும்காங்கிரஸை விட தேமுதிக வலுவானது என்று தைரியமாக சொல்லக் கூடிய வகையில், வட மாவட்டங்களில்மட்டுமே குறிப்பிட்ட வாக்கு வங்கியை வைத்துக் கொண்டு மிரட்டல் அரசியலை நடத்திக் கொண்டிருக்கும்பாமகவை விட வலுவான கட்சியாக தேமுதிக மாறி விட்டதை யாரும் மறுக்க முடியாது.

இத்தனைக்கும் திமுகவைத் தான் அதிகமாக தாக்கி வருகிறார் விஜய்காந்த். அதிமுகவை மறைமுகமாக அவர்ஆதரித்தே வருகிறார். ஆனால், அவர் திமுகவை தாக்க தாக்க, அதிமுகவினருக்கு விஜய்காந்தை மிகவும்பிடித்துப் போய்விட்டது என்று தெரிகிறது.

இதனால் தங்கள் கட்சியை விட்டுவிட்டு விஜய்காந்துக்கு ஓட்டு போட்டுள்ளதும் உறுதியாகியுள்ளது.

இதன்மூலம் விஜய்காந்த்தின் திட்டு உதவியோடு பெரும் வெற்றி பெற்றுவிட்டது திமுக.

குறிப்பாக அதிமுக ஆதரவு மிகுந்த கிராமப் பகுதிகளில் விஜய்காந்துக்கு ஆதரவு கணிசமாக அதிகரித்துள்ளது.இதனால் அதிமுகவின் ஓட்டுக்கள் கரைய ஆரம்பித்துள்ளன.

அதே நேரத்தில் நகர்ப் புறங்களில் தனக்கிருக்கும் வழக்கமான ஆதரவை மீண்டும் இந்தத் தேர்தல் மூலம்,குறிப்பாக மாநகராட்சித் தேர்தல்கள் மூலம், நிரூபித்துவிட்டது திமுக. மதுரை தவிர்த்து நகர்ப் பகுதிகளில்விஜய்காந்த் இன்னும் வலுவாக காலுன்றவில்லை. எனவே விஜய்காந்த் உடனடியாக கவனிக்க வேண்டியதுகட்சியை நகர்ப் பகுதிகளில் வலுப்படுத்தும் வேலையை.

விஜய்காந்தின் ஒவ்வொரு கட்ட வளர்ச்சியும் அதிமுகவுக்கு அடியாக அமைந்து வருவதால் ஜெயலலிதாஉடனடியாக கவனிக்க வேண்டிய கட்சி திமுக அல்ல, தேமுதிக தான்.

இப்போதைக்கு திமுகவின் கவலையெல்லாம் ஜெயலலிதாவும் விஜய்காந்தும் கூட்டணி சேர்ந்துவிடக் கூடாதுஎன்பதாகத் தான் இருக்கும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X