For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சதாமுக்கு தூக்கு: பல்வேறு நாடுகள் கடும் எதிர்ப்பு

By Staff
Google Oneindia Tamil News

Saddam Husseinமாஸ்கோ:ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதற்கு பல்வேறு உலக நாடுகள்கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

துஜைல் நகரில் ஷியா முஸ்லீம்களை படுகொலை செய்த வழக்கில் சதாம், அவரது தம்பி உள்ளிட்ட 3 பேருக்குதூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்புக்கு உலக நாடுகள் மத்தியில் இரு வேறு கருத்துக்களைஏற்படுத்தியுள்ளது.

பெரும்பாலான நாடுகள் இந்தத் தண்டனையை எதிர்த்து கருத்து வெளியிட்டுள்ளன. ஐரோப்பிய யூனியன்நாடுகள் கூட்டமைப்பு இத்தண்டனை அவசியமற்றது, இதனால் ஈராக்கில் அமைதியற்ற நிலை நிரந்தரமாகும்அபாயம் உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளது.

இதேபோல ரஷியாவும் சதாமுக்கு விதிக்கப்பட்ட தண்டனைய கடுமையாக எதிர்த்துள்ளது. இந்தத் தண்டனைகண்டனத்துக்குரியது என்று அது விமர்சித்துள்ளது.

இதேபோல ஆப்கானிஸ்தான் அரசும், சதாமுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கண்டித்துள்ளது.

இந்தியாவும் சதாம் உசேனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை அந்நாட்டு மக்களுக்கும் உடன்பாடானதாக இருக்கவேண்டும் என கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிவெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் தீர்ப்பு ஈராக்கிய மக்களும், சர்வதேச சமூகம் ஏற்கும் வகையில் இருக்கவேண்டும்.

வெற்றி பெற்றவர் வழங்கிய தீர்ப்பாக இருந்து விடக் கூடாது. ஒருவரின் வாழ்வையும், சாவையும் தீர்மானிக்கும்முடிவுகள், உரிய சட்டப்பூர்வ விசாரணைக்குப் பிறகு எடுக்கப்பட வேண்டும்.

ஈராக் பிரச்சினைகளுக்கு அமைதியான தீர்வு காண வேண்டும் என்பதே எப்போதும் இந்தியாவின் நிலையாகஇருந்து வருகிறது. இந்தத் தீர்ப்பு ஈராக் மக்களின் துயரங்களை அதிகப்படுத்துவதாக இருந்து விடக் கூடாது.

இத்தீர்ப்புக்கு எதிராக அப்பீல் செய்யும் உரிமை உள்ளது என்பது கவனிக்கத்தக்கது என்று கூறியுள்ளார் பிரணாப்.

ஈராக்கில் வன்முறை:

இதற்கிடையே, சதாமுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து ஈராக்கின் பல பகுதிகளிலும்கலவரம் வெடித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவை மீறி தலைநகர் பாக்தாத்தில் ஏராளமான பேர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதேபோலசதாமின் சொந்த ஊரான திக்ரித்திலும் ஏராளமான பேர் பேராட்டம் நடத்தினர்.

பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. இதேபோல சதாமுக்கு ஆதரவாக பாலஸ்தீனம், சிரியா, எகிப்து,ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் பெரும் திரளானோர் போராட்டம் நடத்தினர்.

இந்தியாவிலும் சதாமுக்கு ஆதரவாக சில இடங்களில ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கேரள மாநிலம் மலப்புரம்மாவட்டத்தைச் சேர்ந்த புத்தாண்டகுப்பம் என்ற கிராமத்தில் சதாம் ஆதரவாளர்கள் ஏராளமான பேர் உள்ளனர்.சதாம் மீதான தங்களது அன்பினால் இக்கிராமத்தில் உள்ள கடற்கரைக்கு சதாம் கடற்கரை என்று இவர்கள் பெயர்சூட்டியுள்ளனர்.

சதாம் உசேனுக்கு தண்டனை விதிக்கப்பட்டதைக் கண்டித்து இக்கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள்கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காங்., இடது சாரிக் கட்சிகள் கண்டனம்:

சதாம் உசேனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் மற்றும் இடது சாரிக் கட்சிகள் கண்டனம்தெரிவித்துள்ளன.

இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்க்வி கூறுகையில், இந்தத் தீர்ப்பு ஈராக்மக்களையும், அந்நாட்டு அமைதி, ஜனநாயகத்தைப் பாதிக்காது என்று நம்புகிறோம்.மக்களுக்குத் திருப்திகரமான வகையில், நம்பகத் தன்மையுடன் இதுகுறித்து முடிவு செய்யப்பட வேண்டும்என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் அதிகாரக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வழக்குவிசாரணை முறையாக நடக்கவில்லை. சதாமின் வழக்கறிஞர்கள் கொல்லப்பட்டனர். தலைமை நீதிபதிகள் 2 முறைமாற்றப்பட்டனர். இப்படிப்பட்ட கேலிக்கூத்தான நிலையில், முறைகேடான ஒரு தீர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதை நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். மத்திய அரசு உடனடியாக தலையிட்டு கண்டனம் தெரிவிக்கவேண்டும். இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டால் அது நீதித்துறைக்கு மிகப் பெரிய தலைக்குனிவாகஅமையும். இதை அமெரிக்காவும், இங்கிலாந்தும் உணர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

சிபிஐ தேசிய செயலாளர் ராஜா கூறுகையில், பேரழிவு ஆயுதங்கள் ஈராக்கில் இருப்பதாக கூறித்தான் அமெரிக்காபடையெடுத்தது. ஆனால் ஒரு ஆயுதத்தைதக் கூட அமெரிக்கா தலைமையிலான படைகள் கண்டுபிடிக்கவில்லை.ஈராக்கை ஆக்கிரமிக்கவே அந்நாட்டின் மீது அமெரிக்கா படையெடுத்தது. இந்த விசாரணையே கேலிக்கூத்தானஒன்று என்றார்.

அகில இந்திய பார்வர்ட் பிளாக் தலைர் பிஸ்வாஸ் கூறுகையில், இது கேலிக்கூத்தான விசாரணை, தீர்ப்பு.விசாரணை முழுமையாக நடைபெறவில்லை என்றார்.

சதாமுக்கு தண்டனை வழங்கப்பட்டதற்கு ஷியா பிரிவு முஸ்லீம் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. ஆனால்சன்னி பிரிவு முஸ்லீம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X