For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஈழ பட்டினி சாவுகள்-பிரதமருக்கு வைகோ கடிதம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:இலங்கையில் தமிழர்களை படுகொலை செய்து வரும் இலங்கை அரசின் இனப் படுகொலையை உடனடியாகமத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோகோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியுள்ளார்.

வைகோ அனுப்பியுள்ள கடிதத்தில், இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மிகப் பெரிய இனப் படுகொலைக்குஅந்நாட்டு அரசு தயாராகி வருகிறது. எனவே இலங்கைக்கு எந்த வகையான ராணுவ உதவியையும் இந்திய அரசுசெய்யக் கூடாது.

தமிழர் வாழும் பகுதிகளில் தொடர்ந்து விமானம் மூலம் குண்டுகளை வீசித் தாக்கி வருகிறது இலங்கை அரசுப்படை. பட்டினிச் சாவு அங்கே பல தமிழ் உயிர்களைப் பறித்து வருகிறது. கடந்த 14.8.2006ல் இலங்கை ராணுவம்நடத்திய தாக்குதலில் 61 அப்பாவி மாணவிகள் கொல்லப்பட்டனர். 170 குழந்தைகள் காயமடைந்தனர்.

இலங்கைத் தமிழர்கள் படும் அவதிகளைக் கண்டு தமிழகத்தில் வாழும் தமிழர்களும், உலகெங்கிலும் உள்ளதமிழர்களும் கவலை அடைந்துள்ளனர். தமிழர்களுக்கு எதிரான ராணுவத் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறுஇலங்கை அரசை இந்தியா கண்டிப்பாக கேட்டுக் கொள்ள வேண்டும்.

இலங்கை அரசின் பிடிவாதப் போக்கு காரணமாகவே ஜெனீவா அமைதிப் பேச்சுவார்த்தை எந்தவித முடிவும்ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது.

யாழ்ப்பாணத்தையும், நாட்டின் பிற பகுதிகளையும் இணைக்கும் நெடுஞ்சாலை கடந்த 3 மாதமாகமூடப்பட்டிருப்பதால் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தமிழர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மக்கள்நடமாட்டம் முற்றிலும் தடைபட்டுள்ளது.

தமிழர்களுக்காக அனுப்பபடும் உணவு மற்றும் மருந்து ஆகியவை முறையாக சென்று சேர்வதில்லை. அவைதடுக்கப்படுகின்றன. தமிழர்கள் பட்டினியால் சாகட்டும் என்ற உள்நோக்கத்தோடு இலங்கை அரசு இவ்வாறுசெயல்படுகிறது. பச்சிளம் குழந்தைகள் பால் பவுடர் கிடைக்காமல் பசியால் இறந்து கொண்டிருக்கின்றனர்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு உணவு, மருந்துப் பொருட்கைளவினியோகிக்க இந்தியா முன்வர வேண்டும். தமிழர்களைக் காக்க இந்தியா முன்வர வேண்டும்.

தமிழர்களின் நலன் கருதியும், இனப் படுகொலைக்குத் திட்டமிடும் இலங்கை அரசின் நோக்கத்தைத் தடுக்கும்வகையிலும் அந்நாட்டுக்கு ராணுவ உதவிகளை இந்தியா செய்யக் கூடாது என்று கோரியுள்ளார் வைகோ.

விடுதலைச் சிறுத்தைகள் போராட்டம்:

இதற்கிடையே, இலங்கை இனப் படுகொலையைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் சார்பிலும் போராட்டம்நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சிங்கள இனவெறி ஆட்சியாளர்கள் நடத்தி வரும் ஈவிரக்கமற்ற கொலை வெறியாட்டம் மென்மேலும்கொடூரமான முறையில் தொடர்கிறது. யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் சாலையை அடைத்து உணவு, மருந்துஉள்ளிட்ட தேவைகளைத் தடுத்து வருகிறது இலங்கை அரசு. இதனால் யாழ்ப்பாணத்தில் கடுமையான உணவுப்பஞ்சம் ஏற்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் உடனடியாக இந்திய அரசு தலையிட்டு ஈழத் தமிழர்களுக்கு நேரடியாக உணவும், மருந்தும்செல்ல வழி செய்ய வேண்டும்.

நவம்பர் 17ம் தேதி ராஜபக்ஷே இந்தியா வரவுள்ளார். இதை இந்தியா அனுமதிக்கக் கூடாது. அவரது வருகைக்குஎதிர்ப்பு தெரிவித்து சென்னையில் 17ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்நடத்தப்படும் என்று கூறியுள்ளார் திருமா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X