ராஜபக்ஷேவுக்கு விஜயகாந்த் கடும் கண்டனம்
சென்னை:தமிழர்களை அழித்து வரும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் அட்டூழியத்தைஇந்திய அரசு தட்டிக் கேட்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த்கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
சொந்த நாட்டு மக்களையே வதைக்கும் வகையில், யாழ்ப்பாணத்தில் இலங்கை அரசுமுற்றுகையிட்டு நெடுஞ்சாலையை மூடியுள்ளது வேதனைக்குரியது.
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் மக்கள் உணவு, மருந்து கிடைக்காமல்அவதிப்படுகின்றனர். தமிழர் பகுதிகளில் முப்படைத் தாக்குதலை நடத்தி வருகிறதுஇலங்கை அரசு. இதனால் உணவுப் பொருட்களை செல்ல விடாமல் தடுப்பதாலும்,இலங்கை அரசு தமிழ் இனப் படுகொலையை செய்து வருகிறது.
இச் சூழ்நிலையில் ராஜபக்ஷே இந்தியா வருகிறார். பிரதமரை அவர் சந்திக்கும்போதுஇலங்கை அரசு செய்து வரும் இனப் படுகொலையை தட்டிக் கேட்க வேண்டும்.ராஜபக்ஷேவிடம் தனது கண்டனத்தை இந்தியா தெரிவிக்க வேண்டும்.
இலங்கை அரசின் செயல் காட்டுமிராண்டித்தனமான போக்கு ஆகும். இதைத் தடுத்துநிறுத்த இந்திய அரசு மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டும்.
தமிழர் வாழும் பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து இலங்கை அரசுராணுவத்தைத் திரும்பப் பெற இந்தியா வற்புறுத்த வேண்டும். தமிழர்கள் பகுதிகளில்அமைதி நிலவ வேண்டும். அதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தரத்தீர்வுக்கு முயற்சிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் விஜயகாந்த்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications