For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தாதாக்கள் அடாவடி அதிகரிப்பு: இந்திய கம்யூ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்குவதற்குப் பதில், ரேஷன் கடைகளில் பல சரக்குப்பொருட்களை குறைந்த விலைக்கு விற்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ரேஷன் கடைகளில் அரசுவழங்கும் 2 ரூபாய்க்கு கிலோ அரிசியை மக்கள் விரும்பவில்லை. அந்த அரிசியைவாங்க அவர்கள் முன்வருவதில்லை. இதற்கு என்ன காரணம்?

அரிசியை குறைத்த விலைக்கு வாங்கினாலும், அதனுடன் சேர்த்து சமையலுக்குப்பயன்படுத்தப்படும் மசாலா பொருட்களின் விலை கடுமையாக உள்ளதால், அரிசியைமட்டும் வாங்கி என்ன பயன் என்பது ஏழை மக்களின் எண்ணம்.

எனவே குறைந்த விலைக்கு அரிசி வழங்குவதை விட மக்களுக்குத் தேவையானபலசரக்குப் பொருட்களையும் ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலைக்கு வழங்கஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் முறையாக நடக்கவில்லை. தமிழகம் முழுக்கவன்முறைச் சம்பவங்கள் நடந்தன. தலைவர் தேர்தலிலும் கூட முறைகேடுகள்நடந்தன. எனவே எதிர்காலத்தில் நேரடித் தேர்தலையே நிடத்த வேண்டும். மறைமுகத்தேர்தலுக்கு இத்தோடு விடை கொடுத்து விட வேண்டும்.

இந்த உள்ளாட்சி மன்றத் தேர்தலைப் பார்த்த மக்களுக்கு ஜனநாயகத்தின் மீதேநம்பிக்கை போய் விட்டது. எந்த அரசு மக்கள் நம்பிக்கையை இழக்கிறதோ, அந்தஅரசு நல்லரசாக இருக்க முடியாது.

சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் தாதாக்கள் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. அங்கு கொலை, வெட்டுக் குத்து, ஆள் கடத்தல் என சகலவிதமானசம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இங்கு சட்டம் ஒழுங்கை நிலை நாட்டகாவல்துறை கடுமையான நிடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கையில் ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவதை நாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது. அங்கே நடக்கும் சம்பவங்கள் வருத்தம் தரக் கூடியவையாகஉள்ளன. மனிதாபிமானம் அங்கே செத்துப் போய் விட்டது. இதற்கு இந்தியாகடுமையான கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும்.

யாழ்ப்பாணத்தில் உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் இல்லாமல் தவிக்கும்மக்களுக்கு உதவ இந்தியா இப்பொருட்களை அனுப்ப வேண்டும். தமிழர்களுக்குஉதவுவதற்கு இந்தியா காலம் தாழ்த்துதல் கூடாது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், எங்களுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை.எந்தக் கட்சி பெரியது என்று கேட்டு அந்தக் கட்சியின் தலைவர் எழுதியுள்ள கட்டுரைதேவையற்றது. அவர் எதற்காக அப்படி எழுதினார் என்பது தெரியவில்லை. எந்தப்பிரச்சினையாக இருந்தாலும் எங்களுடன் அவர்கள் தாராளமாக பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்றார் தா.பாண்டியன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X