For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆண்டிப்பட்டியில் திமுக-அதிமுக பயங்கர மோதல்50 பேர் காயம்-பஸ்கள் உடைப்பு-துப்பாக்கி சூடு-

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதையடுத்து திமுகவினரும்அதிமுகவினரும் பயங்கரமாக மோதிக்கொண்டனர். இரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்களுடன் மோதலில்ஈடுபட்டதால் அவர்களைக் கலைக்க போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்.

உள்ளாட்சி தேர்தலில் ஒத்திவைக்கப்பட்ட 21 தலைவர், 69 துணைத் தலைவர்களுக்கான தேர்தல் இன்றுநடைபெற்றது. கவுன்சிலர்கள் வாக்களித்து தலைவர்களைத் தேர்வு செய்யும் இந்தத் தேர்தலில் ஆண்டிப்பட்டிஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கும் இன்று காலை தேர்தல் நடைபெற இருந்தது.

இங்கு மொத்தம் 19 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் அதிமுகவுக்கு 9 உறுப்பினர்களும் திமுக 9உறுப்பினர்களும் உள்ளனர். ஒருவர் சுயேச்சையாவார். இந்த சுயேச்சை உறுப்பினரின் ஆதரவை அதிமுகபெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் பதவியை திமுகவால் பிடிக்க முடியாத சூழல் நிலவியது.

இந் நிலையில் தேர்தலை நடத்த வேண்டிய அதிகாரி திடீரென விடுப்பு போட்டுவிட்டுச் சென்றுவிட்டார். இதனால்தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. திமுக ஜெயிக்க வாய்ப்பில்லை என்று தெரிந்ததால் தான் அதிகாரியை லீவு போடவைத்துவிட்டு தேர்தலை ஒத்தி வைத்துள்ளனர் என புகார் கூறிய அதிமுகவினர், வேறு அதிகாரியைக் கொண்டுதேர்தலை நடத்த வேண்டும் என்று கோரினர்.

இது தொடர்பாக அதிமுக எம்பி தங்கத்தமிழ்ச் செல்வன் தலைமையிலான அதிமுகவினருக்கும் திமுக மாவட்டச்செயலாளர் மூக்கையா, ஒன்றிய செயலாளர் வைகை சேகர் ஆகியோர் தலைமையிலான திமுகவினருக்கும்இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வா போவில் ஆரம்பித்து வாடா போடா என்று நாறத் தொடங்கியது வாய் வார்த்தை. இந் நிலையில் இருதரப்பினரும் திடீரென அடிதடியில் இறங்கினர். திமுகவினரும் அதிமுகவினரும் ஒருவர் மீது ஒருவர் பாய்ந்துஅடித்துக் கொண்டு உருண்டனர்.

பலரது வேட்டிகள் உருவப்பட்டன, சட்டைகள் கிழித்து வீசப்பட்டன. பலருக்கு வாய், மண்டை உடைந்து ரத்தம்கொட்டியது. இவர்களைத் தடுக்க முயன்ற போலீசார் மீது கற்களை வீசித் தாக்கினர். இதையடுத்து போலீசார்தடியடி நடத்தினார். ஆனாலும் கலைந்து செல்லாமல் தொடர்ந்து தாக்கிக் கொண்டனர்.

இந் நிலையில் இரு தரப்பினரும் ஆயுதங்களையும் திரட்டிக் கொண்டு வந்து மோதலில் ஈடுபட்டனர்.இதையடுத்து போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அந்த புகை மூட்டம், கண் எரிச்சலையும் தாங்கிக்கொண்டு இரு தரப்பினரும் தொடர்ந்து தெருவில் கட்டி உருண்டு சண்டை போட்டனர். இதில் இரு கட்சிகளையும்சேர்ந்த 50 பேர் காயமடைந்தனர்.

இதையடுத்து போலீசார் வானத்தை நோக்கி 5 முறை துப்பாக்கியால் சுட்டனர். தொடர்ந்து தடியடியும் நடத்தினர்.துப்பாக்கிச் சத்தம் கேட்ட பின்னர் தான் இரு தரப்பினரும் உயிருக்கு பயந்து கலைந்து ஓட ஆரம்பித்தனர்.

ஆனால், போலீசாரிடம் அடி வாங்கி கலைந்து ஓடிய அதிமுகவினர் தமிழ்ச்செல்வன் தலைமையில் பஸ் மறியலில்ஈடுபட்டனர். அதிமுக எம்பிஉள்பட 30 அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

பஸ்களின் கண்ணாடிகளை உடைத்து நொறுக்கினர். எஸ்பி நஜ்மல் போடோவின் காரையும் அதிமுகவினர்விடவில்லை. அதன் மீதும் தாக்குதல் நடத்தி கண்ணாடியை உடைத்தனர். இதையடுத்து போலீசார் மீண்டும் தடியடிநடத்தி கூட்டத்தைக் கலைத்ததோடு மறியலில் ஈடுபட்ட தங்க தமிழ் செல்வன் எம்பி உள்பட 100 அதிமுகவினரைகைது செய்தனர்.

கைது செய்யப்பட்டு தேனி ஆயுதப்படை மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது தங்க தமிழ்செல்வன்நிருபர்களிடம் கூறுகையில்,

ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் தேர்தல் இன்று நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுஇருந்தது. ஆனால் சுயேச்சை உறுப்பினர் அதிமுகவை ஆதரித்ததால் திமுக வெல்ல முடியாத நிலை இருந்தது.இந் நிலையில் இன்று காலை தேர்தல் அதிகாரி லீவு போட்டுவிட்டதாகச் சொல்லி தேர்தலை ஒத்திவைத்துவிட்டனர். உண்மையில் தேர்தல் நடத்த இருந்த அதிகாரிகளை திமுகவினர் கடத்திச் சென்று விட்டனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மறியலில் ஈடுபட்டோம். அப்போது பாதுகாப்புக்கு நின்று இருந்த போலீசார் எங்கள்மீது தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். 100 அதிமுகவினரை கைது செய்துள்ளனர். போலீசாரின் அராஜகம்அத்துமீறி நடக்கிறது. நியாயம் கேட்டால் கைது செய்கிறார்கள் என்றார்.

ஆனால், தேர்தல் அதிகாரி யாரும் கடத்தப்படவில்லை என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மீண்டும் நடந்த தேர்தல்கள்: திமுக வெற்றி

இந் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்ட 90 உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவர்பதவிகளுக்கு இன்று நடந்த தேர்தலில் பெரும்பாலான இடங்களில் திமுகவே வெற்றி பெற்றது.

சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின்னர் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்குதேர்தல் நடந்தது. இதில் 21 ஊராட்சி அமைப்புகளின் தலைவர் மற்றும் 69 ஊராட்சி அமைப்புகளின் துணைத்தலைவர் தேர்தல் பல காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது.

இந்த பதவிகளுக்கு இன்று தேர்தல் நடந்தது. கவுன்சிலர்கள் வாக்களித்த இந்தத் தேர்தலில் பெரும்பாலானஇடங்களில் திமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றனர்.

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கு திமுகவைச் சேர்ந்த ராஜேஸ்வரி வெற்றி பெற்றார். கடந்தமுறை நடந்த தேர்தலில் அதிமுக தான் இந்தத் தலைவர் பதவியை பிடித்தது. அதைத் தொடர்ந்து திமுகவைச்சேர்ந்த எம்.எல்.ஏ. மூர்த்தி உள்ளே புகுந்து பெரும் ரகளையில் ஈடுபட்டார். இதையடுத்து தேர்தல்ஒத்திவைக்கப்பட்டது. இந் நிலையில் இன்று நடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

மேச்சேரி நகராட்சித் தலைவர் பதவியை சுயேச்சை வேட்பாளர் வென்றார். மொடக்குறிச்சி பேரூராட்சித் தலைவர்பதவியை காங்கிரஸ் கட்சியின் ரஜினி கைப்பற்றினார்.

முத்துப்பேட்டை நகராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலை நடத்த வந்த தேர்தல் அதிகாரி சுந்தரத்திற்கு திடீர்நெஞ்சு வலி ஏற்பட்டதால் தேர்தல் மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதேபோல காஞ்சிபுரம்ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கான தேர்தலில் ஒரு உறுப்பினர் கலந்து கொள்ளாததால் தேர்தல்ஒத்திவைக்கப்பட்டது. இச் சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. அங்கு ஏராளமாள போலீசார்குவிக்கப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X