For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெட்டித்தனமாக பேசுகிறார் விஜயகாந்த்: பாலு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:கல்யாண மண்டபத்தை இடிக்கப் பார்க்கிறார்கள், கட்சியை அழிக்கப் பார்க்கிறார்கள்என வீண் வம்பு பேசிக் கொண்டிருக்கிறார் விஜய்காந்த் என்று மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

தேமுதிகவை அழிக்கும் நோக்கில்தான் தனது கல்யாண மண்டபத்தை திமுக இடிக்கப்பார்க்கிறது என விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.இதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன், என்னை அழிக்கப் பார்க்கும் திமுகவின் எண்ணம் பலிக்காது என்றும்கூறியுள்ளார்.

இந் நிலையில், விஜயகாந்த்தின் பேச்சுக்கு மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு காட்டமாகபதில் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அமைச்சர் தனது திருமண மண்டபத்தைஇடிக்கிறார் என்று புதிதாக அரசியல் கட்சி தொடங்கியுள்ள விஜயகாந்த், வீண்பழிசுமத்தி, மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போட நினைக்கிறார்.

என்னிடம் சினம் கொண்டு சீறிப் பாய்வதை விஜயகாந்த் நிறுத்திக் கொண்டு, மக்கள்நலனுக்கு முன்னுரிமை அளித்து, சிந்தித்துப் பார்த்து உண்மை உணர்வது நல்லது.

கோயம்பேட்டில் விஜயகாந்த் மனைவி பிரமேலதாவுக்கு சொந்தமான இந்த நிலத்தைதேசிய நெடுஞ்சாலை ஆணையகத்தின் தேவையைக் கருதி அரசினால்கையகப்படுத்தப்பட இருக்கிறது என்று 20.12.2005 அன்று வெளியிட்ட முதல்அறிவிக்கையை தெரிவித்தபோது விஜயகாந்த் ஏன் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை?

எவ்வளவு இடத்தை கையகப்படுத்துகிறோம் என்று மத்திய அரசு கூறவில்லை என்றுதெரிவித்துள்ளார். கோயம்பேடு சர்வே எண் 14/2ல் 286 சதுர மீட்டரும், சர்வே எண்14/3ல் 165 சதுர மீட்டரும், சேர்த்து மொத்தம் 451 சதுர மீட்டர் என்பதைபத்திரிக்கைகளில் வெளியிட்ட அறிவிக்கையில் இருப்பதை படித்துப் பார்த்துத்தெரிந்து கொள்வாரா?

விஜயகாந்த் கொடுத்துள்ள மாற்றுத் திட்ட வரைபடத்தில் பாரிமுனையிலிருந்துஅம்பேத்கர் சிலை சந்திப்பில் திரும்பி பாடி பகுதிக்கு செல்ல வழிவகுக்கப்பட்டிருக்கிறதா? பாரிமுனையிலிருந்து கிண்டி செல்வதற்கு தந்துள்ளசாலையில், வட்டப் பகுதியில் உள்ள விட்ட அளவு இந்திய சாலை குழுமத்தின்விதிப்படி உள்ளதா?

இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படும் 164 பேரும் அரசியல் கட்சிகளின் தலைவர்களா?பொதுமக்கள்தானே.

இப்படிப்பட்ட சாலை விரிவாக்கத்தினால் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ வழிபாட்டுத்தலங்கள், திருமண மண்டபங்கள் இடிக்கப்பட்ட சம்பவங்கள் நடைபெற்றதேஇல்லையா?

தாம்பரம் சானட்டோரியத்தில் இருந்த அஷ்டலட்சுமி, ஆஞ்சநேயர், ராமர் கோவில்கள்,காயிதே மில்லத் தொழுது வந்த குரோம்பேட்டை மசூதி, சிங்கபெருமாள் கோவில்கோவில் கட்டடங்களை தேசிய நெடுஞ்சாலைத் துறை பணிகளுக்காககையகப்படுத்தவில்லையா?

கத்திப்பாரா சந்திப்பில் நடைபெறும் பல கோடி ரூபாய் பணிகளுக்காக அரசுத்துறையின் சிட்கோ கட்டடம் இடிக்கப்படவில்லையா?

நேருவின் சிலை கத்திப்பாரா சந்திப்பிலிருந்து இடமாற்றம் செய்யப்படவில்லையா?இந்த கோயம்பேடு சந்திப்பில் உள்ள அம்பேத்கர் சிலை மாற்று இடத்தில் அமைத்திடதலித் இயக்கங்களும், அரசியல் தலைவர்களும் ஒத்துழைப்பு தரவில்லையா?

கோயம்பேடு, மீனம்பாக்கம், கத்திப்பாரா, பாடி ஆகிய இடங்களில் கட்டப்படும்மேம்பாலப் பணிகளை 2005 பிப்ரவரி 1ம் தேதி முதல்வர் கருணாநிதி துவக்கிவைத்துப் பேசினார் என்பதை நாடறியும். மதுரையில் விஜயகாந்த் தேமுதிக என்றகட்சியை 2005ம் ஆண்டு செப்டம்பர் 14ம் தேதியன்றுதான் தொடங்கினார்.

கருணாநிதி கோயம்பேடு திட்டப் பணிகளை துவக்க வைத்த பிறகு 8 மாதம்கழித்துத்தான் விஜயகாந்த் அரசியல் கட்சியைத் தொடங்கினார். இதுதான்வெளிப்படையான உண்மை. சுமார் 8 மாதத்திற்குப் பின்னர் துவக்கப்படவிருந்த ஒருகட்சியை அழிப்பதற்கு முன் கூட்டியே திமுக திட்டமிட்டதா?

57 ஆண்டுகளுக்கு முன்பு அண்ணாவால் துவங்கப்பட்ட அமைப்பு திமுக. இது ஒருலட்சிய அமைப்பு. வீண் வம்பு, வானத்தை வளைத்து வில்லாக்கும் வெட்டிப் பேச்சுஇவைகளுக்கு அப்பாற்பட்ட அமைப்பு என்று கூறியுள்ளார் பாலு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X