For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோணலான கருணாநிதியின் திட்டங்கள்-ஜெ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல, சிறுபான்மை அரசுக்குத் தலைமைவகிக்கும் கருணாநிதியின் திட்டங்கள், முடிவுகள் எல்லாம் கோணலாகி விட்டன என்றுஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பது போல, சட்டசபைத் தேர்தலில் குறைந்தஎண்ணிக்கையில் வெற்றி பெற்று, கூட்டணிக் கட்சிகளின் தயவில் ஆட்சி நடத்திவரும் திமுக அரசின் முதல்வர் கருணாநிதி எடுத்த முடிவுகள் எல்லாமே,கோணலாகவே முடிந்துள்ளன. எல்லாமே கேலிக் கூத்தாகி விட்டன.

இல்லாத தரிசு நிலம், புழுத்துப் போன அரிசி, செயல்படாத இலவச டிவி எனஅவர்கள் அமல்படுத்திய திட்டங்கள் எல்லாம் தோல்வியில் முடிந்துள்ளன. ஆனால்இவை எல்லாமே வெற்றிகரமான திட்டங்கள் என கருணாநிதியும், அவரதுகுடும்பத்திற்குச் சொந்தமான தகவல் தொடர்பு சாதனங்களும் பொய்யை மட்டுமேபரப்பி வருகின்றனர்.

உள்ளாட்சித் தேர்லில் திமுகவின் தோல்வியை முன்கூட்டியே உணர்ந்து கொண்டகருணாநிதி, தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் என்ற சட்டத்தைக் கொண்டுவந்து நாட்டையே ரணகளப்படுத்தியுள்ளார்.

சென்னையிலும், பிற ஊர்களிலும் திமுக குண்டர்களால் நடந்த தேர்தல் மிகப் பெரும்அவமான நிகழ்ச்சி.

தேர்தல் வன்முறை, இடப் பங்கீடு மீறல் ஆகியவற்றைத் தொடர்ந்து, கூட்டணிக்கட்சியினரை மறு தேர்தல் நடத்தக் கோரி வலியுறுத்தி வருகின்றனர். இதனால் வேறுவழியின்றி இப்போது கருணாநிதி, மறைமுகத் தேர்தலை மறு பரிசீலனைசெய்ய வேண்டும் என்று முனுமுனுக்க ஆரம்பித்துள்ளார். தேர்தல் இப்படித்தான்நடைபெற வேண்டும் என்பதுதான் உண்மையில் கருணாநிதியின் விருப்பம். ஆனால்மற்றவர்கள் சொல்வதற்காக அதை பரிசீலிக்கப் போவதாக கூறி நாடகமாடுகிறார்.

ஆண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்தவேண்டும் என மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டதால், அங்கு காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டனர். தேர்தல் நடந்தால்அதிமுக வெற்றி பெற்று விடும் என்பதால் காலை 10.30 மணிக்கு தேர்தல் அதிகாரிமுருகேசன் உள்ளிட்ட யாரையும் வர விடாமல் போலீஸார் பார்த்துக் கொண்டனர்.

அதன் பின்னர் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதாக அறிவித்தனர். தேனி மாவட்டசெயலாளர் மூக்கையா உத்தரவின் பேரில், அதிமுகவினர் மீது நாட்டு வெடிகுண்டுவீசப்பட்டது. இதிலிருந்து தேனி மாவட்ட அதிமுக செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன்உள்ளிட்ட அதிமுகவினர் மயிரிழையில் உயிர் தப்பினர்.

வன்முறை தூண்டிய திமுக குண்டர்களை கட்டுப்படுத்தாமல் போலீஸார் வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் மீதுகண்ணீர்ப் புகை குண்டை வீசியுள்ளனர்.

தேர்தல் அதிகாரி முருகேசன் திமுகவினரால் கடத்தப்பட்டதைக் கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்ட அதிமுகவினர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.பின்னர் அதிமுக எம்.பி. தங்கதமிழ்ச் செல்வன், அதிமுக எம்.எல்.ஏ.கணேசன்,அதிமுக பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 60 பேரைக் கைது செய்துள்ளனர். இதுதான்ஜனநாயகமா? காட்டாட்சியில்தான் இப்படி நடைபெறும்.

இந்த லட்சணத்தில் கூட்டுறவு அமைப்புகளுக்கு ஜனவரியில் தேர்தல் என கருணாநிதிஅறிவித்திருப்பது கேலிக் கூத்தாக உள்ளது. கூட்டுறவுத் தேர்தலை எப்படிநடத்துவார்கள் என்பதற்கு நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலே சான்றாகும்.

ஏற்கனவே கூட்டுறவு அமைப்புகளை திமுகவினர் நாசப்படுத்தி அழித்து விட்டனர்.1996-2001 ஆட்சியில் திமுகவினர் செய்த கையாடல்களால், இன்று வரை அந்தஅமைப்புகளால் தலை நிமிர முடியவில்லை. அதுதொடர்பான வழக்குகளும் இன்னும்முடியவில்லை.

இந்த நிலையில் கூட்டுறவுத் தேர்தலை எப்படி நடத்தி முடிப்பார்கள்? பேசாமல்கருணாநிதி விருப்பப்படி தங்களுக்கு வேண்டியவர்களை பதவிகளில் அமர்த்திவிடலாம்.

ஜனநாயகத்தை படுகொலை செய்து வரும் கருணாநிதிக்கு மக்கள் தகுந்த பாடம்புகட்ட தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X