For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக அமைச்சரை முற்றுகையிட்ட கேரளம்

By Staff
Google Oneindia Tamil News

Duraimurugan
தேக்கடி:முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிடச் சென்ற தமிழக பொதுப் பணித்துறைஅமைச்சர் துரைமுருகனை கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்ததொண்டர்கள் முற்றுகையிட்டு திரும்பிப் போ என கோஷமிட்டதால் அங்கு பரபரப்புஏற்பட்டது.

முதல்வர் கருணாநிதியின் உத்தரவுப்படி முல்லைப் பெரியாறு அணையை நேரில்பார்வையிட்டார் துரைமுருகன். இதற்காக கேரள மாநிலம் தேக்கடிக்கு வந்ததுரைமுருகன் அங்கிருந்து படகு மூலம் முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்றார்.

தேக்கடி படகு குழாமுக்கு அவர் வந்தபோது அங்கே நின்றிருந்த கேரள மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் தொண்டர்கள் துரைமுருகனை சூழ்ந்து கோஷமிட ஆரம்பித்தனர்.அவர்களைத் தடுக்கவோ, அப்புறப்படுத்தவோ கேரள போலீஸார் நடவடிக்கைஎடுக்காமல் அமைதியாக இருந்தனர்.

ஆனால் துரைமுருகனுடன் வந்திருந்த திமுக தொண்டர்கள் அவரை சுற்றிலும் அரண்போல நின்று கொண்டனர். மேலும், தமிழக முதல்வர் கருணாநிதியையும், அமைச்சர்ஸ்டாலினையும் வாழ்த்தி சரமாரியாக கோஷமிட ஆரம்பித்தனர். இதனால் அங்குபரபரப்பு நிலவியது.

Mullai Periyar Dam
தமிழக அரசுக்கு எதிராகவும், துரைமுருகனே திரும்பிப் போ என்றும் கேரளகம்யூனிஸ்ட் கட்சியினர் கோஷம் எழுப்பியபடி இருந்தனர். பதிலுக்கு திமுகவினரும்கோஷமிடவே பதற்றம் அதிகரித்தது.

இதனால் துரைமுருகன் படகில் ஏறிச் செல்ல முடியாத நிலை நிலவியது. இதைத்தொடர்ந்து போலீஸார் தலையிட்டு கம்யூனிஸ்ட் கட்சியினரை அங்கிருந்து மெதுவாகஅகற்றினர்.

அதன் பின்னர் துரைமுருகன் அணையைப் பார்வையிட கிளம்பிச் சென்றார்.அவருடன் தேனி திமுக எம்.எல்.ஏ. லட்சுமணனும் செல்வதற்காக படகில் ஏறப்போனார். ஆனால் அவரை அனுமதிக்க முடியாது என்று கேரள போலீஸார் முரண்டுபிடித்தனர். இதனால் கோபமடைந்த திமுகவினரும், தமிழக பொதுப்பணித்துறைஅதிகாரிகளும் கேரள போலீஸாருடன் கடும் வாக்குவாதம் செய்தனர்.

அதன் பின்னரே லட்சுமணனை போலீஸார் படகில் ஏற அனுமதித்தனர்.

அதே நேரத்தில் அணையை அடைந்த துரைமுருகனுக்கு எதிர்பாராத வரவேற்பும்கிடைத்தது. கேரளாவைச் சேர்ந்தவரும், பல்வேறு தமிழ்ப் படங்களில்நடித்துள்ளவரும் அரசியல் கட்சி தொடங்கியுள்ளவருமான நடிகர் தேவன்துரைமுருகனையும் தமிழக அதிகாரிகளையும் படகு குழாமில் வரவேற்றார்.

Devan
அவர் தற்போது கேரள மக்கள் கட்சி என்ற கட்சியின் தலைவராக உள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.

அணை விவகாரம் தொடர்பாக தமிழக, கேரள அரசுகளிடையே மத்தியஸ்தம் செய்யதான் தயாராக இருப்பதாக தேவன் தெரிவித்தார். இதனால் தேவனுக்கு எதிராகவும்கேரள கம்யூனிஸ்ட் கட்சியினர் கோஷம் எழுப்பினர்.

அவர்களுடன் வாதாடிய தேவன், அணையின் உயரத்தை 142 அடி வரை உயர்த்தமுடியும். அந்த அளவுக்கு அணை வலுவாகவே உள்ளது. ஆனால், இதை வைத்துஅரசியல் செய்ய கேரள கட்சிகள் நினைக்கின்றன. இதனால் தான் அணை உயரத்தைகூட்ட வேண்டும் என்ற தமிழகத்தின் கோரிக்கையை எதிர்க்கின்றன என்றார்.

அப்போது தேவனை சூழ்ந்து கொண்டு மார்க்சிஸ்ட் கட்சியினர் கோஷமிடவே,அவருடன் வந்தவர்கள் மார்க்சிஸ்டுகளை சூழ்ந்து கொண்டு கத்தினர். இதனால் பெரும்பரபரப்பு நிலவியது.

கேரளத்தில் பெருவாரியான நிலத்தில் ரப்பர், மிளகு, ஏலம் ஆகிய பணப் பயிர்கள்தான் பயிரிடப்படுகின்றன. காய்கறியில் ஆரம்பித்து அரிசி வரை தமிழக விவசாயிகள்தான் உற்பத்தி செய்து தருகின்றனர்.

கேரளத்தில் இறைச்சிக்கான கோழி, ஆடு, மாடு வளர்ப்பது கூட இல்லை. முட்டைமுதல் மாமிசத்துக்கான விலங்குகள் வரை தமிழக விவசாயிகளிடம் இருந்து தான்செல்கிறது.

ஆனால், முடிந்த வரை தமிழகத்தை யூஸ் செய்துவிட்டு தமிழக விவசாயிகளுக்கேஆப்பு வைக்கும் வேலையை கேரளம் செய்து வருகிறது.

முல்லைப் பெரியாறு மற்றும் குமரி மாவட்டம் நெய்யாற்று பிரச்சினையில் தமிழகமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பெருத்த அமைதி காத்து வருவதும்குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு தமிழக நலனை விட கேரள ஆட்சியும் அதிகாரமும்முக்கியமாய் படுகிறது போலும்.

துரைமுருகன் பேட்டி:

பின்னர் தேக்கடி-குமுளி சாலையில் இறைச்சல் பாலம் அருகில் சாலை அரிப்பை பார்வையிட்ட துரைமுருகன்செய்தியாளர்களிடம் பேசுகையில்,

பெரியாறு அணைப் பிரச்னை தொடர்பாக பிரதமர் முன்னிலையில் டெல்லியில் தமிழக-கேரள முதல்வர்கள் மற்றும்அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. பெரியாறு அணையில் நீர்மட்டம் 138 அடியை கடந்துள்ளது.அணைப்பகுதியில் உள்ள ஷட்டர்கள் திறந்தே உள்ளது. இந்த ஷட்டர்கள் வழியாக தற்போது உபரி நீர் கேரளா வழியாகச் சென்றுவீணாக அரபிக் கடலில் கலக்கிறது. இங்கு நேரில் கண்ட அனைத்தையும் தமிழக முதல்வரிடம் கூற உள்ளேன்.

இரு முதல்வர்கள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தியேதீருவோம் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X