For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிபுசோரனுக்கு ஆயுள்-ரூ. 5 லட்சம் அபராதம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:கொலை வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிபு சோரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 லட்சம் அபராதமும்விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவரான சிபு சோரனிடம் உதவியாளராக இருந்தவர் சசிநாத் ஜா. கடந்த 1994ம்ஆண்டு டெல்லியில் உள்ள இவரது வீட்டிலிருந்து கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ, கொலையில் சிபு சோரனுக்கும் தொடர்பு இருப்பதைக் கண்டுபிடித்தது.இதையடுத்து சிபு சோரன் மற்றும் பசுபதிநாத் மேத்தா, நந்து என்கிற நந்தகிஷோர் மேத்தா, சைலேந்திரபட்டச்சார்யா, அஜய்குமார் மேத்தா ஆகியோர் மீது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் கடந்த 28ம் தேதி சிபுசோரன் குற்றவாளி என அறிவித்தது. இதையடுத்து சிபுகைது செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக தனது அமைச்சர் பதவியை சிபு ராஜினாமா செய்தார்.

கைது செய்யப்பட்டவுடன் நெஞ்சு வலி என்று சிபு கூறியதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதனால் அவருக்கான தண்டனையை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் அவர் திகார் சிறையில்அடைக்கப்பட்டார்.

நேற்று சிபுசோரன் நீதிபதி கேடியா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிமன்றத்தில் தண்டனைகுறித்து சிபிஐ தரப்பு மற்றும் சோரன் தரப்பு வழக்கறிஞர்கள் கடுமையாக வாதாடினர். ஜார்க்கண்ட் மாநிலத்தைஉருவாக்க பாடுபட்டவர் சிபு. பழங்குடி மக்கள் வாழ்க்கைகாக பாடுபட்டவர். அவர் சமூகத்துக்கு அச்சுறுத்தலாகஇருக்க மாட்டார். எனவே தண்டனையை அறிவிக்கும்போது இதை மனதில் கொள்ள வேண்டும் என சிபுவின்சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்த் வாதிட்டார்.

இதற்கு சிபிஐ வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சிபு சொல்லித்தான் இந்தக் கொலை செய்யப்பட்டதாகநந்து தெளிவாக கூறியுள்ளார். எதேச்சையாக நடந்த கொலை அல்ல இது, திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை.தன் மீது சசிநாத் ஜா வைத்திருந்த நம்பிக்கையை சிபு குலைத்து விட்டார்.

ராஜீவ் காந்தி கொலை, நாடாளுமன்றத் தாக்குதல் வழக்குகளில் சதித் திட்டம் தீட்டியவர்களுக்கு அதிகபட்சதண்டனையான மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே சிபுவுக்கும் மரண தண்டனை வழங்கப்படவேண்டும் என்று வாதாடினார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் மாலை 5.30 மணிக்கு நீதிபதி தனது தீர்ப்பை அறிவித்தார். அதன்படிசிபுசோரன் உள்ளிட்ட 3 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்குவதாக நீதிபதி அறிவித்தார். சிபுவுக்கு ரூ. 5 லட்சம்அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த்த தொகையில் ரூ. 1 லட்சத்தை சசிநாத் ஜாவின் தாயாருக்கும், தலா ரூ. 2லட்சத்தை ஜாவின் 2 மகள்களுக்கும் பிரித்து அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மற்ற நான்கு பேரும் தலா ரூ. 15,000 அபராதம் செலுத்த வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில்தெரிவித்தார். தீர்ப்பை எதிர்த்து 3 மாதத்திற்குள் மேல் முறையீடு செய்யலாம் எனவும் நீதிபதி அறிவித்தார்.

சிபு சோரனுக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டதற்கு சசிநாத் ஜாவின் குடும்பத்தினர் வரவேற்புதெரிவித்துள்ளனர். ஆனால் தனது தந்தை எப்படிக் கொல்லப்பட்டாரோ அதேபோல சிபுவையும தூக்கிலிட்டுக்கொல்ல வேண்டும் என சசிநாத் ஜாவின் மகள்களில் ஒருவர் ஆவேசமாக கூறினார்.

இதற்கிடையே, சிபுவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து அவரது கட்சியினர் ஜார்க்கண்ட் மாநிலத்தின்பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. இதையடுத்து போலீஸார் அங்கு அதிக அளவில்குவிக்கப்பட்டுள்ளனர். இன்று முழு அடைப்பு நடத்தவும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா நிர்வாகிகள் அழைப்புவிடுத்துள்ளனர்.

எம்.பி. பதவி ராஜினாமா கிடையாது:

இந்த நிலையில், சிபு சோரன் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யவுள்ளார்.எனவே தனது எம்.பி. பதவியை அவர் ராஜினாமா செய்ய மாட்டார் என சிபுவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

ஆனால் சிபு சோரனின் எம்.பி. பதவியை பறிக்க வேண்டும் என பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கோரிக்கைவிடுத்துள்ளன.

வி.ஐ.பி. அறையில் சிபு:

தண்டனை அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிபுவும் மற்ற நால்வரும் திகார் சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு ஏ கிளாஸ் (முக்கியப் பிரமுகர்களுக்கானது) பிரிவு அறையில் சிபுவும் மற்றவர்களும்அடைக்கப்பட்டனர்.

அந்த அறை வெள்ளை அடித்து சுத்தப்படுத்தப்பட்டிருந்தது. இதே பகுதியில்தான் லாலு பிரசாத் யாதவின் மச்சான்பப்பு யாதவும் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X