For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வருமான வரித்துறைக்கே அல்வா: ஏலத்தை குழப்பிவிட்ட பிரேமானந்தா?!

By Staff
Google Oneindia Tamil News

Premanandhaதிருச்சி:போலிச் சாமியார் பிரேமானந்தாவின் சொத்துக்களை ஏலத்தில் எடுத்தவர் சொத்துக்கள் மீதான வழக்குகளை வாபஸ்பெற்றால்தான் முழுத் தொகையைத் தர முடியும் என்று நிபந்தனை விதித்ததால் ஏலம் ரத்து செய்யப்பட்டது.

திருச்சி எடமலைப்பட்டி புதூர் பாத்திமா நகரில் உள்ளது செக்ஸ் சாமியார்பிரேமானந்தாவின் ஆசிரமம்.

இலங்கையைப் பூர்வீமாகக் கொண்ட பிரேம்ஸ் வாயிலிருந்து லிங்கம் எடுப்பது உள்ளிட்ட சித்து வேலைகளால் வெளிநாட்டினர்உள்பட பலரையும் கவர்ந்தார். இதனால் ஆசிரமம் விரிவடைந்து சுமார் 160 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட ஆசிரமமாகமாறியது. பஜனை அரங்கம், ஓய்வு இல்லம், குடில்கள் என பெரிய ஆசிரமமாக மாற்றினார் பிரேமானந்தா.

அதன் பின்னர் தனது சேஷ்டைகளை ஆரம்பித்தார். தனது சிஷ்யைகளாக இருந்த லலிதாகுமாரி, லதா ஆகியோரை அவர்கற்பழித்தார். மேலும் இதைத் தட்டிக் கேட்ட ரவி என்ற என்ஜீனியரையும் அவர் கொலை செய்து ஆசிரமத்திற்குள் புதைத்தார்.

மேலும் அங்குள்ள அனாதை ஆசிரமப் பள்ளியைச் சேர்ந்த 13க்கும் மேற்பட்டசிறுமியருடன் செக்ஸ் வைத்துக் கொண்டார். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் போலீஸில் புகார்கொடுக்கவே தமிழகமே பரபரப்பில் ஆழ்ந்தது.

இதையடுத்து பிரேமானந்தா 1994ல் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார்.

அவருக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த கோடிக்கணக்கான பணத்துக்கு கணக்கு,வழக்கு தாக்கல் செய்யாததாலும் ரூ. 1.5 கோடி அளவுக்கு வருமான வரி மோசடிசெய்ததாலும் அவரது ஆசிரமம் உள்ளிட்ட சொத்துக்களை வருமானவரித் துறையினர்கைப்பற்றினர்.

இதில் 26 கட்டடங்கள் மற்றும் 106 ஏக்கர் நிலம் ஆகியவை அடங்கும். வரி பாக்கிமற்றும் வட்டியாக ரூ. 9.62 லட்சத்தை வசூல் செய்ய இப்போது கடலூர் மத்தியசிறையில் உள்ள பிரேமானந்தாவின் சொத்துக்களை ஏலம் விட வருமான வரித்துறைமுடிவு செய்தது.

இதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில், பிரேமானந்தா அறக்கட்டளை வழக்கு போட்டது. இந்த வழக்கில் இதுவரைதீர்ப்பு அளிக்கப்படவில்லை.இந் நிலையில் திருச்சி வருமான வரி அலுவலகத்தில் நேற்று சொத்துக்கள் ஏலம் நடந்தது.குறைந்தபட்ச ஏலத் தொகையாக ரூ. 2.21 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ரூ. 10,000 செலுத்தி 36 பேர் ஏலத்தில் கலந்து கொண்டனர். அப்போதுதிருச்செங்கோடு ஏமாப்பள்ளியைச் சேர்ந்த விஜயகுமார் இந்த சொத்துக்களை ரூ. 4.7கோடிக்கு எடுக்க முன் வந்தார். அதைத் தாண்டி யாரும் கேட்கவில்லை. இதையடுத்து அவருக்கே சொத்துக்கள்ஏலத்தில் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

25 சதவீத தொகையை செலுத்த ஒரு மணி நேரம் அவகாசம் கேட்டுச் சென்றவிஜய்குமார், திரும்பி வந்தபோது மனம் மாறியிருந்தார்.

ஏலத்தில் விடப்பட்ட சொத்துக்களில் பல ஏக்கர் நிலங்கள் தமிழக அரசால்கையகப்படுத்தப்பட்டுள்ளது, சில கட்டடங்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது,இது குறித்து முன்பே தெரிவிக்காமல் ஏலம் விட்டுள்ளீர்கள் என்றார். மேலும் சொத்துக்கள்மீதுள்ள வழக்குகளை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுத்தால் பணம் கட்டத் தயார் என நிபந்தனை விதித்தார்.

இதற்கு அதிகாரிகள், அப்படியெல்லாம் நாங்கள் உறுதிமொழி தர முடியாது. தமிழக அரசு கையகப்படுத்தும்முன்பே நாங்கள் ஜப்தி செய்துவிட்டோம். இதனால் மாநில அரசின் நடவடிக்கைஎங்களை கட்டுப்படுத்தாது என வருமான வரித்துறையினர் கூறினர்.

ஆனால், இந்த விளக்கத்தை ஏற்க மறுத்துவிட்ட விஜய்குமார் பணம் கட்ட மறுத்துஏலத்தில் இருந்து விலகிக் கொண்டார். எனக்கு இந்த ஏலம் வேண்டாம் என்று கூறி விட்டு காரில் ஏறிச் சென்றுவிட்டார். அவரது காரில் பிரேமானந்தா ஆசிரமத்தில் காணப்படும் வாசகமான பிரேம சாந்தி என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.இதனால் அவர் பிரேமானந்தாவின் ஆளாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. ஏலத்தை குழப்பிவிட பிரேம்ஸ் தரப்வேஅவரை அனுப்பியதாகத் தெரிகிறது.

இதையடுத்து மாலை 5 மணியளவில் மீண்டும் ஏலம் நடத்தப்பட்டது. அப்போது மணப்பாறையைச் சேர்ந்த கணேஷ் என்பவர்அதிகபட்சமாக ரூ. 3.42 கோடிக்கு ஏலம் கேட்டார். ஆனால் அந்தத் தொகை எதிர்பார்த்ததை விட மிகவும் குறைவாகஇருப்பதாக கருதிய வருமான வரித்துறை அதிகாரிகள் தனி அறையில் நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர்.

பின்னர் வெளியே வந்த அதிகாரிகள், விஜய்குமார் கேட்ட ரூ. 4.7 கோடிக்கும்குறைவாக கணேஷ் கேட்பதால் ஏலம் தர முடியாது என மறுத்தனர். ஆனால், இதற்குமேல் விலை தர முடியாது என ஏலதாரர்கள் கூறியதால், மறு தேதி குறிப்பிடாமல்ஏலம் ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர் அனைவருக்கும் முன் பணம் ரூ. 10,000 திரும்பத் தரப்பட்டது.

பிரேமானந்தாவின் ஆட்கள்தான் சொத்துக்கள் ஏலம் போவதைத் தடுக்க இப்படி ஆட்களை அனுப்பி குழப்பி விட்டதாகநிஜமாகவே ஏலம் எடுக்க வந்தவர்கள் முனுமுனுத்ததைக் கேட்க முடிந்தது.

நேற்று ஏலத்திற்கு வந்த பிரேமானந்தா ஆசிரம சொத்துக்கள்:

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே உள்ள மேல பச்சாங்குடி கிராமத்தில் உள்ள பாத்திமா நகரில் 104 ஏக்கர் 98சென்ட் அளவில் உள்ள அசையா சொத்துக்கள்.

ஆசிரமம் அமைந்துள்ள நிலம், அங்குள்ள தோட்டம், விருந்தினர் இல்லம், பள்ளிக்கூடம், ஆசிரியர்கள் தங்கும் விடுதி,மருத்துவமனை, டாக்டர்கள் தங்கும் விடுதி, வெளிநாட்டினர் தங்கும் விருந்தினர் இல்லம், தியான கூடம், பம்புசெட்டுடன் கூடியகட்டடம் உள்ளிட்டவை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X