For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கரண்ட்டை மிச்சப்படுத்தும் கலாம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:சூரிய ஒளியையே காணாமல் இருந்த தனது அலுவலக அறைக்குள் இப்போது மின்விளக்குகளைப் பயன்படுத்துவதை விட்டு விட்டு சூரிய ஒளியின் வெளிச்சத்திலேயேதான் பணிபுரிவதாக குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.

டெல்லியில் வீட்டு வசதி மற்றும் மின்சாரத்தை சேமிப்பது தொடர்பான முதலாவதுஆசிய பசிபிக் மாநாடு நடந்தது. இதில் கலாம் பேசுகையில் மின்சாரத்தை எப்படிமிச்சப்படுத்துவது, இயற்கையான சூரிய ஒளியை எப்படி பயன்படுத்துவது என்பதுகுறித்து தன்னையே உதாரணம் காட்டி அப்துல் கலாம் பேசியது மாநாட்டுக்குவந்திருந்தவர்களை வெகுவாக கவர்ந்தது.

கலாம் பேசுகையில், நான் குடியரசுத் தலைவர் மாளிகைக்குள் முதன் முதலில்அடியெடுத்து வைத்தபோது கீழ் தளம் மற்றும் முதல் உள்ள இரு அலுவலகஅறைகளின் ஜன்னல்கள் எப்போதும் திரைச் சீலைகளால் மூடப்பட்டிருந்ததைப்பார்த்தேன். மின் விளக்குகளுக்குக் கீழ் அமர்ந்துதான் நான் பணியாற்றவேண்டியிருந்தது.

இதுகுறித்து ராஷ்டிரபதி மாளிகை வளாகத்தில் நான் காலை நடைப்பயிற்சிமேற்கொண்டபோது யோசித்தேன். நம்மைச் சுற்றிலும் அபரிமிதமான சூரியவெளிச்சம் உள்ளது. அப்படி இருக்கையில், ஏன் பகலில் கூட ஜன்னல்களை திரைச்சீலையிட்டு மூடி இருளில் பணியாற்ற வேண்டும் என நான் யோசித்தேன்.

ஒரு வேளை பாதுகாப்பு காரணங்களுக்காக ஜன்னல்களை மூடி வைத்திருக்கிறார்களாஅல்லது சூரிய வெளிச்சத்தை நான் பார்க்கக் கூடாது என்று மூடி வைத்திருக்கிறார்களாஎன நான் யோசித்தேன். பின்னர் இதுகுறித்து நான் அதிகாரிகளுடன் விவாதித்தேன்.அதன் பின்னர் ஜன்னலை மூடியிருந்த திரைச் சீலைகளை அகற்ற நான் முடிவுசெய்தேன்.

இப்போது சூரிய ஒளி எந்தத் தயக்கமும் இல்லாமல் எனது அறைக்குள் போகிறது.அந்த ஒளியே எனக்குப் போதுமானதாக உள்ளது. மின் விளக்குகளை இப்போது நான்பயன்படுத்துவதில்லை. அத்தோடு என்னால் வெளியில் உள்ள இயற்கைக்காட்சிகளையும் ரசிக்க முடிகிறது.

என்னைப் பார்க்க இப்போது வருபவர்கள் இந்த வித்தியாசத்தை உணர முடியும்.ஒவ்வொரு அறையிலும் மின்சாரத்தை மிச்சப்படுத்துவது சாத்தியமானது.

நான் இதன் மூலம் சொல்ல வருவது என்னவென்றால், நாம் கட்டடங்களை கட்டத்திட்டமிடும்போது, இயற்கை தந்த ஒளி, காற்று ஆகியவற்றை அதிக அளவுபயன்படுத்துவதற்கேற்ப திட்டமிட வேண்டும். இதன் மூலம் நாம் மின்சாரத்தைமிச்சப்படுத்த முடியும் என்றார் கலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X