For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கொழும்பு: துணைவேந்தரை கடத்திய கருணா குழு

By Staff
Google Oneindia Tamil News

Sivasubramaniam Raveendranath, Vice Chancellor of Eastern Universityகொழும்பு:இலங்கை கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் சுப்ரமணியம் ரவீந்திரநாத்தைகருணா குழுவினர் கடத்திக் கொண்டு போய் விட்டதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.வாகரை அருகே ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 தமிழர்கள் பரிதாபமாகஉயிரிழந்தனர்.

இலங்கை கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தராக இருப்பவர் சுப்ரமணியன்ரவீந்திரநாத். இவர் உடனடியாக தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என கருணாகுழு மிரட்டல் விடுத்திருந்தது.

இதை வலியுறுத்துவதற்காக பல்கலைக்கழக டீன் பாலசுகுமாரை கடந்த செப்டம்பர்30ம் தேதி கருணா குழுவினர் கடத்தினர். பின்னர் அவரை விடுவித்தனர்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30 மணியிலிருந்து ரவீந்திரநாத்தைகாணவில்லை என கொழும்பு டெஹிவாலே காவல் நிலையத்தில் புகார்கொடுக்கப்பட்டுள்ளது.

அதிகபட்ச பாதுகாப்பு உள்ள பெளத்தலோகா மாவத்தை என்ற இடத்திலிருந்துதுணைவேந்தர் காணாமல் போயுள்ளார். எனவே அவரை சிங்களப் படையினரின்துணையுடன் கருணா குழுவினர் கடத்திச் சென்றிருக்கக் கூடும் எனசந்தேகிக்கப்படுகிறது.

கருணா குழுவினரின் மிரட்டலைத் தொடர்ந்து தனது பதவியை ராஜினாமா செய்துவிட்ட ரவீந்திரநாத் அக்கடிதத்தை பல்கலைக்கழக மானியக் குழுவிடம் சமர்ப்பித்துவிட்டு வித்யா மாவத்தை என்ற இடத்தில் நடந்த இலங்கை மேம்பாட்டு அறிவியல்கழக கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தார்.

பின்னர் தனது கார் டிரைவரை அழைத்து கூட்டம் முடியும் நேரமான பிற்பகல் 2மணிக்கு வருமாறு கூறி அனுப்பி வைத்தார். அதன் பின்னர் அவரைக் காணவில்லை.

கொழும்பில் வசித்து வந்த ரவீந்திரநாத்துக்கு மனைவி, 2 மகள்கள் உள்ளனர். கிழக்குப்பல்கலைக்கழகத்தை நிறுவியவரும் இவரே.

கடந்த 2004ம் ஆண்டு இதே பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த பேராசிரியர்குமாரவேல் தம்பையாவைக் கடத்திய கருணா குழு பின்னர் அவரை சுட்டுக் கொன்றதுநினைவிருக்கலாம்.

ராணுவத் தாக்குதலில் 7 தமிழர்கள் பலி:

இதற்கிடையே இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 அப்பாவித் தமிழர்கள்கொல்லப்பட்டனர்.

வாகரை பகுதியில் இலங்கை படைகள் தொடர்ந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளன.இந்த நிலையில் கதிரவேலி என்ற இடத்திலிருந்து வாகரை நோக்கி மோட்டார்வாகனத்தில் சென்று கொண்டிருந்த தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் தாக்குதல்நடத்தியது. இதில் 7 பேரும் பரிதாபமாக இறந்தனர்.

அவர்களது உடல்களை வாகரைக்கு எடுத்துச் செல்ல ராணுவம் அனுமதிக்கவில்லை.இதையடுத்து உடல்களை அங்கேயே புதைத்து விட்டு அவர்களுடன் வந்தமற்றவர்கள் கதிரவேலிக்கே திரும்பிச் சென்றனர்.

இவர்கள் அனைவரும் ராணுவத் தாக்குதலுக்குப் பயந்து கதிரவேலியிலிருந்துவாகரைக்கு செல்ல வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே கல்லார் என்ற இடத்திலிருந்து கதிரவேலியை நோக்கி ராணுவம்தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் கதிரவேலி பகுதியிலிருந்துதமிழர்கள் வேறு இடங்களுக்குச் சென்று வருகின்றனர். இந்தத் தாக்குதலில் பலர்காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் ஏற்கனவே திரிகோணமலை, ஈச்சிலம்பட்டு ஆகியஇடங்களிலிருந்து இடம் பெயர்ந்து இங்கு வந்தவர்கள் என்பது நினைவிருக்கலாம்.

இதற்கிடையே வாகரையில் குழந்தைகள் ஊட்டச் சத்து குறைபாடு காரணமாக பெரும்அவதிக்குள்ளாகியுள்ளதாாக டாக்டர் வரதராஜன் என்பவர் தெரிவித்துள்ளார். எடைக்குறைவாக இரு குழந்தைகள் பிறந்ததாகவும், அதில் ஒரு குழந்தை இறந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X