For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பஞ். தலைவர் மீது குண்டு வீச்சு-அரிவாள் வெட்டு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:சென்னை அருகே சிறுகளத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் அரிகிருஷ்ணன் மீது நாட்டு வெடிகுண்டு வீசி,அரிவாளால் வெட்டி பயங்கர தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அவர் படுகாயமடைந்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம் கலட்டிப் பேட்டையைச் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். திமுகவைச் சேர்ந்த இவர், குன்றத்தூர்அருகே உள்ள சிறுகளத்தூர் ஊராட்சித் தலைவராக உள்ளார்.

விழுப்புரத்தில் நடந்த 2வது கட்ட இலவச நில விநியோகத் திட்டத்தில் கலந்து கொள்வதற்காக முதல்வர்கருணாநிதி ஹெலிகாப்டர் மூலம் விழுப்புரம் சென்றார். இதையொட்டி அவரை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் திமுகவினர் வழியனுப்புவதற்குத் திரண்டனர்.

இதற்காக அரிகிருஷ்ணனும் அவரது ஆதரவாளர்களும் வந்திருந்தனர். வழியனுப்பு நிகழ்ச்சியை முடித்து விட்டுசொந்த ஊருக்கு காரில் திரும்பினார் அரிகிருஷ்ணன். குமார் என்பவர் காரை ஓட்டினார். அதில், அரிகிருஷ்ணன்தவிர 5 பேர் இருந்தனர்.

கார் பல்லாவரத்தை அடுத்த ஆண்டார்குப்பம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு கும்பல்இரண்டு கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் அரிகிருஷ்ணனின் காரை துரத்த ஆரம்பித்தது.

இதைப் பார்த்த அரிகிருஷ்ணன், தன்னைத் தாக்கத்தான் அக்கும்பல் வருகிறது என்பதை அறிந்து காரைபின்னோக்கி எடுத்து வேறு பாதையில் செல்லக் கூறினார். இதையடுத்து குமாரும் காரை பின்னோக்கி எடுத்தார்.அப்போது, அரிகிருஷ்ணனின் காரை, பின்னால் துரத்தி வந்த கும்பலின் ஒரு கார் இடித்து நிறுத்தியது.

இருப்பினும் குமார் சுதாரித்துக் கொண்டு காரை எடுத்து வேகமாக ஓட்டத் தொடங்கினார். இதைப் பார்த்தமோட்டார் சைக்கிளில் இருந்த நபர்கள், கார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி எறிந்தனர். இதனால்அரிகிருஷ்ணனின் கார் நிலை தடுமாறி ஓடி சாலையோரம் இருந்த மரத்தில் மோதி நின்றது.

இதையடுத்து அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் காரிலிருந்து இறங்கி ஓடினர். அவர்களை விடாமல் துரத்தியஅக்கும்பல் அரிகிருஷ்ணனை பிடித்து அரிவாளால் வெட்டியது. இதில் அரிகிருஷ்ணனின் முதுகில் பலத்த காயம்ஏற்பட்டது. ரத்தம் கொட்டத் தொடங்கியதால் மயக்கமடைந்த அரிகிருஷ்ணன் சாலையிலேயே விழுந்து விட்டார்.

இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து அங்கு ஓடி வந்தனர். மக்கள் கூட்டம் கூடுவதைப் பார்த்தஅந்தக் கும்பல், கொலை முயற்சியைக் கைவிட்டு விட்டு தங்களது வாகனங்களில் ஏறித் தப்பினர்.

உடனடியாக கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அரிகிருஷ்ணன் அனுமதிக்கப்பட்டார். அங்குஅவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்து சம்பவஇடத்திலிருந்து மர்ம கும்பல் விட்டுச் சென்ற ஒரு கார், அரிவாள், 7 நாட்டு வெடிகுண்டுகள், பயங்கர பட்டாக்கத்திகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

முன்விரோதம் காரணமாக இந்த கொலை முயற்சி நடந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாகமதன், பாபு, அசோக் உள்ளிட்ட 10 பேரை போலீஸார் வலை வீசித் தேடி வருகின்றனர்.

மதனின் தாயார் ரஞ்சிதம். அதிமுகவைச் சேர்ந்த இவரது கணவர் பெயர் அன்பு. இவர் 3 ஆண்டுகளுக்கு முன்புவெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில், அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு பின்னர்ஜாமீனில் வெளியே வந்தனர். இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் இருந்து வந்தது.

சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் சிறுகளத்தூர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு ரஞ்சிதமும்,அரிகிருஷ்ணனும் போட்டியிட்டனர். இதில் அரிகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.

இதனால் முன்விரோதம் முற்றியது. கொலை ஆபத்து இருப்பதால் எப்போதும் நான்கு, ஐந்து பேர் புடைசூழத்தான் அரிகிருஷ்ணன் எங்கும் செல்வது வழக்கம். இந்த நிலையில் இந்த கொலை முயற்சி நடந்துள்ளது.

இத்தகவல் பரவியதும், சிறுகளத்தூர் மற்றும் கலட்டிப்பேட்டை ஆகிய இடங்களில் பதட்டம் எழுந்தது.கலட்டிப்பேட்டையில் உள்ள ரஞ்சிதத்தின் தாயார் வீடு தீவைத்து எரிக்கப்பட்டது. இதில் ஒரு மாடு இறந்தது. இருகிராமங்களிலும் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X