For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாங்கள் தான் உண்மையான மதிமுக: செஞ்சி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:வைகோவின் பிடியிலிருந்து மதிமுகவை மீட்போம், நாங்கள்தான் உண்மையானமதிமுக என்று செஞ்சி ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

சென்னையில் பாலிசங்கம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நடந்த கூட்டத்தில் செஞ்சிராமச்சந்திரன் எம்.பி கலந்து கொண்டு பேசியதாவது,

தமிழ்நாட்டில் இப்போது அரசியல் மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. தமிழ் ஈழத்துக்காக தான் தான் குரல்கொடுப்பதாக சிலர் (வைகோ) பேசுகிறார்கள். செயலாளருக்கு (கட்சியின் பொதுச் செயலாளருக்கு) பேச்சுமுக்கியமல்ல, செயல்பாடுதான் முக்கியம். பேச்சாளர்தான் பேச வேண்டும். கொள்கைகளுக்காகத்தான் இயக்கம்இருக்க வேண்டும். கொள்கையை விட்டு விட்டுச் சென்றால் இயக்கத்தை பழுது பார்ப்போம்.

அப்படி இல்லையென்றால் அதை தூக்கி எறிவோம். இயக்கத்தில் கொள்கை சார்ந்துதான் முடிவெடுக்க வேண்டும்.அப்படி இல்லாவிட்டார்ல நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

பிரபாகரனை கொண்டு வந்து தூக்கில் போடு என்று சட்டசபையில் தீர்மானம் போட்டார் ஜெயலலிதா. அதை நீ(வைகோ) செய்வாயா? ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலையை வைக்கக் கூடாது என்று அந்த அம்மையார் சொன்னார்.அப்படி நீ சொல்வாயா?

இந்த நேரத்தில் திமுக அரசின் செயல்பாடுகள் மனதை நெகிழ வைக்கிறது. இதை நான் பாராட்டுக்காகசொல்லவில்லை. இலங்கையில் இருந்து வந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிக்கள் சென்னையில் முதல்வர்கருணாநிதியை சந்தித்துப் பேசினார்கள்.

எம்பிக்கள் கூறியதை முதல்வர் பரிவோடு கேட்டுக் கொண்டார். அப்போதே பிரதமரை தொலைபேசியில்தொடர்பு கொண்டு, இலங்கை நிலவரங்களை முதல்வர் எடுத்துக் கூறினார். உடனே பிரதமரும் அவர்களைஅனுப்புங்கள், சந்திக்கிறேன் என்று பதில் கூறினார்.

இப்போது பிரதமரை சந்திப்பதற்காக அந்த எம்பிக்கள் டெல்லி சென்றிருக்கிறார்கள். இதற்கு யார் காரணம்? தான்ஆடா விட்டாலும் தன் சதையாடும் என்பார்களே, அதைப் போல முதல்வர் தன்னுடைய கடமை செய்திருக்கிறார்.

நான் தான் எல்லாம் செய்கிறேன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளக் கூடாது. அரசியிலில் எதிரும்புதிருமானவர்கள் கூட்டணி சேர்வது சகஜம். அதே சமயம், எந்த நிலையிலும் அவரவர் கொள்கையை விட்டுவிலகக் கூடாது என்றார் ராமச்சந்திரன்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நாங்கள்தான் உண்மையான மதிமுககட்சியை சீரமைக்கும் நடவடிக்கையில் இறங்கப் போகிறோம். நாங்கள்கட்சியிலிருந்து விலகவில்லை, விலகவும் மாட்டோம். வருகிற 25ம் தேதிநடைபெறும் பொதுக் குழுக் கூட்டத்தில் கண்டிப்பாக நாங்களும் கலந்துகொள்கிறோம்.

19 மாதங்கள் பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விடுதலைப் புலிகளைஆதரித்தார் என்பதற்காக சிறையில் அடைக்கப்பட்ட வைகோ, விடுதலைப் புலிகள்தலைவர் பிரபாகரனை பிடித்து வந்து தூக்கில் போட வேண்டும் என்று சட்டசபையில்தீர்மானம் நிறைவேற்றி இன்று வரை அதில் உறுதியாக இருக்கும் ஜெயலலிதாவோடு;

திராவிடர் இயக்க கொள்கைக்கு எதிராக இருக்கும் ஜெயலலிதாவோடு, வைகோகூட்டு சேர்ந்தது மக்கள் மத்தியில் மிகப் பெரிய நம்பகத் தன்மையை இழக்க நேரிட்டுவிட்டது. இதனால் வைகோவின் உழைப்பும், தியாகமும் கூட வீணாகிப் போய்விட்டது.

அடுத்த தேர்தலில் ஜெயலலிதாவை மீண்டும் முதல்வராக்குவேன் என்று வைகோ பேசிவருவது மக்கள் மத்தியில் கோபக் கனலை உருவாக்கியுள்ளது. ஆகவே இந்த முடிவில்இருந்து, வைகோவின் பிடிலிருந்து மதிமுகவை மீட்பதுதான் எங்கள் கடமை என்றார்செஞ்சி ராமச்சந்திரன்.

இதற்கிடையில் எல்.கணேசன் இன்று சென்னையில் மதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை தனித்தனியாக அழைத்துபேசினார். இதே போல செஞ்சி ராமச்சந்திரனும், மதிமுக நிர்வாகிகளை தனித்தனியாக அழைத்து பேசினார்.அப்போது சிலர் எல்.கணேசனின் புதிய முயற்சிக்கு ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X