For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதிக்கு நெருக்கடி-சொல்கிறார் அச்சு!

By Staff
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்:ஜெயலலிதா மற்றும் வைகோ ஆகியோர் தரும் அரசியல் நெருக்கடி காரணமாகவேமுல்லைப் பெரியாறு பிரச்னையை மீண்டும் உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லமுதல்வர் கருணாநிதி முடிவு செய்துள்ளதாக கேரள முதல்வர் அச்சுதானந்தன்கூறியுள்ளார்.

கேரளத்துடன் பேச்சு நடத்தி எந்தப் பலனும் கிடைக்காததால் இந்த விவகாரத்தில்மீண்டும் உச்ச நீதிமன்றத்தை நாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்துசெய்தியாளர்களிடம் பேசிய அச்சுதானந்தன்,

தமிழகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரின் அரசியல் நெருக்கடி காரணமாக, இப்பிரச்னையைமீண்டும் உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல முதல்வர் கருணாநிதி முடிவுசெய்துள்ளார்.

இந்த பிரச்னையில் உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள கருத்தையும், மத்திய அரசின்தலையீட்டையும் கருத்தில் கொள்ளாமல் எடுக்கப்பட்ட இந்த முடிவுதுரதிர்ஷ்டவசமானது. எங்கள் மாநிலத்திலும் "வைகோக்கள் உள்ளனர். ஆனால்,அவர்கள் அளிக்கும் நெருக்கடிகளுக்காக வளைந்து கொடுக்க மறுத்து விட்டோம்.

அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக மத்திய அமைச்சர்சைபுதீன் சோஸ் குறிப்பிடவில்லை. இந்த பிரச்னை தொடர்பாக மத்திய அரசிடமிருந்துஎந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வராததால், ஒரு தலைபட்சமாக நாங்கள் எந்தமுடிவும் எடுக்க மாட்டோம்.

இரு மாநிலங்களும் அமைதியான முறையில் இந்த பிரச்னையை தீர்க்க வேண்டும்என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்ததால் தான், மத்திய அரசு இதில்தலையிட்டுள்ளது.

தமிழக அரசு ஒருதலைபட்சமாக முடிவு எடுத்திருந்தாலும் கூட, கன்னியாகுமரிமாவட்டத்துக்கு நெய்யாறு அணையிலிருந்து தண்ணீர் விடுவது குறித்த முடிவைகேரளா மறுபரிசீலனை செய்யாது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைஉயர்த்துவதில் கால தாமதம் ஏற்படுவதால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்என்று தமிழக அரசு கூறி வருவது அடிப்படை இல்லாதது.

தற்போது எடுக்கப்பட்ட மதிப்பீட்டின்படி, கடந்த 25 ஆண்டுகளில் இந்த அணையின்நீரைக் கொண்டு, நீர்ப்பாசன வசதி பெறும் விவசாய நிலங்களின் அளவு 1.25 லட்சம்சதுர அடியிலிருந்து, 2.5 லட்சம் சதுர அடியாக அதிகரித்துள்ளது. டெல்லியில் நடந்தஅமைச்சர்கள் மத்தியிலான பேச்சுவார்த்தையின் போது இதை நாங்கள் தெளிவாகதெரிவித்தோம்.

தி111 ஆண்டு கால பழமை வாய்ந்த முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த1979ம் ஆண்டிலிருந்தே 136 அடியாக இருந்து வருகிறது. பூகம்பம் ஏற்படக் கூடியபகுதியில் அணை அமைந்துள்ளது. அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், நான்குமாவட்டங்களைச் சேர்ந்த 35 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவர் என்று பழையபுராணத்தையே பாடினார் அச்சுதானந்தன்.

கிராபிக்ஸ் பீதி சிடியை பறிமுதல் செய்ய உத்தரவு:

இதற்கிடையில் முல்லைப் பெரியாறு அணை உடைந்து லட்சக்கணக்கான கேரள மக்கள் உயிரிழப்பது போல கிராபிக்ஸ் சிடி மூலம் பீதியை ஏற்படுத்தி வந்தசெயலை கேரள அரசு நிறுத்த உத்தரவிட்டுள்ளது. இந்த சிடிக்களைப் பறிமுதல் செய்ய கேரள போலீஸாருக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை உடைவது போலவும், இதனால் வண்டிப் பெரியாறு உள்ளிட்ட சில கேரள கிராமங்கள் நீரில் தத்தளிப்பது போலவும்,லட்சக்கணக்கானோர் பலியாகி தண்ணீரில் உடல்கள் மிதப்பது போலவும் சித்தரித்து கிராபிக்ஸ் சிடி ஒன்று கேரள கிராமங்களில் புழக்கத்தில் விடப்பட்டது.

இதன் மூலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள கிராம மக்களிடையே பெரியாறு அணை உடைந்து விடும், உயிரிழந்து போய் விடுவீர்கள் என பீதிகிளப்பப்பட்டு வந்தது.

கடந்த 20 நாட்களாக இந்த பீதி சிடி கேரள கிராமங்கள்தோறும் காட்டப்பட்டு வந்தது. பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று இந்த சிடியை அடிக்கடிகாட்டி மக்களை பீதியிலும், குழப்பத்திலும் ஆழ்த்தி வந்தது.

கேரள அரசின் இந்த விஷமப் பிரசாரத்திற்கு முதல்வர் கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்தார். உடனடியாக இதை நிறுத்தவும் அவர் கோரிக்கைவிடுத்தார்.

மேலும் டெல்லியில் சமீபத்தில் இரு மாநில அமைச்சர்கள் சந்தித்தபோதும் இந்த சிடி குறித்து தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கேரளநீர்ப்பாசனத் துறை அமைச்சர் பிரேமச்சந்திரனிடம் கண்டனம் தெரிவித்தார்.

மேலும் இந்த சிடியைக் கைப்பற்றி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்து கேரளாவின் குரூர எண்ணத்தை வெட்டவெளிச்சமாக்கவும் தமிழக அரசுதிட்டமிட்டது.

இதையடுத்து கேரள அரசு தற்போது இந்த கிராபிக்ஸ் கிரிமினல் வேலையை நிறுத்திக் கொள்ள உத்தரவிட்டுள்ளது. மேலும், சிடிக்களையும் பறிமுதல் செய்யபோலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்த சிடிக்களைப் பறிமுதல் செய்யும் வேலையில் கேரள போலீஸார் மும்முரமாக ஈடுபட்டுள்ளனராம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X