For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உபி: தொடங்கியது பாஜக செயற்குழு கூட்டம்

By Staff
Google Oneindia Tamil News

லக்னோ:வாஜ்பாய், அத்வானி மோதல், உத்தரப் பிரதேச மாநில மாநில சட்டசபைத் தேர்தல்ஆகிய விவகாரங்களின் பாஜகவின் 3 நாள் தேசிய செயற்குழுக் கூட்டம் உ.பி.தலைநகர் லக்னோவில் இன்று தொடங்கியது.

உ.பி., உத்தராஞ்சல், பஞ்சாப், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டுதொடக்கத்தில் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. மத்தியில் ஆளும் காங்கிரஸ்கூட்டணி மீது இதுவரை பெரிய அளவில் அதிருப்தி அலை ஏதும் இல்லாத நிலையில்,இந்த மாநிலங்களிந் தேர்தலில் கடும் போட்டியை சந்திக்கும் நிலைக்கு பாஜகதள்ளப்பட்டுள்ளது.

இதனால் இந்த மாநிலங்களில் கட்சியின் செயல்பாடுகளை மேம்படுத்துவது உள்ளிட்டவிஷயங்கள் குறித்து கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படுகிறது.

நாடு முழுவதிலுமிருந்து 3,000க்கும் மேற்பட்ட கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில்கலந்து கொள்கின்றனர். 22 ஆண்டுகளுக்குப் பின்னர் லக்னோவில் இக் கூட்டம்நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கூட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்,

மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அனைத்து வகையிலும் தோல்வி அடைந்து விட்டது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது. அதற்குள் கட்சி மீதான அரசியல்நம்பகத்தன்மையை அதிகரிக்கும் வகையில் தொண்டர்கள் தீவிரமாக செயல்பட வேண்டும். உ.பியில் தற்போதுசட்டம் ஒழுங்கு பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. மாபியா கும்பல்கள் கையில் மாநிலம் சிக்கிக் கொண்டுள்ளது.இப்படிப்பட்ட ஒரு மாநிலத்தில், தேர்தலை நடத்தும் மிகப் பெரிய சவால் தேர்தல் ஆணையம் முன் உள்ளதுஎன்றார்.

சமாஜ்வாடியுடன் கூட்டு இல்லை: ஜேட்லி

பாஜக செய்தித் தொடர்பாளர் அருண் ஜேட்லி செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசியலை முதிர்ச்சியில்லாதபார்வையுடன் அனுகுபவர்களுக்குத்தான் பாஜகவுக்கும், சமாஜ்வாடிக் கட்சிக்கும் இடையே ரகசிய உறவுஉள்ளதாக தோன்றும்.

வாஜ்பாய்க்கும், அத்வானிக்கும் இன்று லக்னோவில் மாநில அரசின் சார்பில் (முலாயம் சிங் அரசு) வரவேற்புகொடுக்கப்பட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை. வாஜ்பாய் முன்னாள் பிரதமர், அத்வானி லோக்சபாஎதிர்க்கட்சித் தலைவர். அதிகார வ>சைப்படி இருவருக்கும் வரவேற்பு கொடுக்கப்பட வேண்டும். அதன்படியேஉ.பி. அரசு இரு தலைவர்களையும் வரவேற்றுள்ளது.

இதை அரசியலுடன் கலப்பது சரியல்ல. அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் பாஜகவும், சமாஜ்வாடிக்கட்சியும் இரு துருவங்கள் என்றார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், அயோத்தி பிரச்சினை அரசியல்பிரச்சினை அல்ல. அது சமூக, கலாச்சாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. அங்கு ராமர்கோவிலை கட்டுவதில் பாஜக உறுதியாக உள்ளது. முழுப் பெரும்பான்மையுடன்மத்தியில் ஆட்சியைப் பிடித்தால் நிச்சயம் நாங்கள் கோவிலைக் கட்டுவோம்.

இந்தப் பிரச்சினை தொடர்பாக சுமூகத் தீர்வுக்கு பாஜக தயாராக உள்ளது. அதேசமயம்,நீதிமன்றத் தீர்ப்பையும் எதிர்பார்த்து காத்திருக்க நாங்கள் தயார். ஆனால் ஆனால்இரண்டில் எதுவும் நடக்கவில்லை என்றால் பாஜக ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தால்நிச்சயம் கோவில் கட்டும் பணியை நாங்கள் மேற்கொள்வோம் என்றார்.

மூத்த பாஜக தலைவரான வினய் கத்தியார் கூறுகையில், தேவைப்பட்டால் ராமர்கோவில் கட்டுவதை வலியுறுத்தி இயக்கம் ஒன்றை ஆரம்பிப்பேன். அயோத்தியில்ராமர் கோவில் உள்ளது. அதை சிறந்த முறையில் வடிவமைக்க வேண்டியதுஅவசியமாகிறது. அதைத்தான் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

அயோத்திப் பிரச்சினையை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. நாட்டில் உள்ளகோவில்கள் சிறப்பான முறையில் இயங்குவதை உறுதி செய்ய வேண்டிய கடமைமத்திய அரசுக்கு உண்டு என்றார் கத்தியார்.

அயோத்தியை விட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு சிறுபான்மையினருக்குகுறிப்பாக முஸ்லீம்களுக்கு பரிவு காட்டும் வகையில் நடந்து கொள்வது குறித்து பாஜகசெயற்குழுவில் முக்கியமாக விவாதிக்கப்படவுள்ளது.

கட்சியின் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கூறுகையில், காங்கிரஸ் கட்சியின்மறைமுகக் கொள்கைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவோம். நாடாளுமன்றத்தைத்தகர்க்க முயன்று தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முகம்மது அப்சலுடன்காங்கிரஸ் கட்சி கைகுலுக்கிக் கொண்டுள்ளது என்றார்.

இந்தக் கூட்டத்தில் இன்னொரு முக்கிய விஷயம் குறித்தும் பேசப்படும் எனத்தெரிகிறது. அது வாஜ்பாய்க்கும், அத்வானிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மனக்கசப்பு.இரு தலைவர்களும் அடுத்த பிரதமர் பதவிக்குத் தாங்கள் தயாராக இருப்பதாககூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

செயற் குழு கூட்டத்தை ஒட்டி பாஜகவின் பலத்தைக் காட்டும் வகையில் மாபெரும்பேரணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X