For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதிமுக தலைமை பதவிக்கு வைகோ குறி: எல்.ஜி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:லட்சக்கணக்கான தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இயக்கத்தை முதலீடாக்கி அதிமுக தலைமை இடத்தைப்பிடிக்க தீராப் பசியுடன் வைகோ வலம் வலந்து கொண்டிருக்கிறார் என எல்.கணேசனும் செஞ்சியும் கூறியுள்ளனர்.

மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன், துணைப் பொதுச் செயலாளர் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர்விடுத்துள்ள கூட்டறிக்கை விவரம்:

Vaikoகடந்த 13 வருடமாக எந்த சுக துக்கங்களையும் பொருட்படுத்தாமல், இயக்கத்தின் முன்னேற்றமே லட்சியமாகக்கொண்டு பணியாற்றினோம். உங்களால் அவைத் தலைவராகவும் துணைப் பொதுச் செயலாளராகவும் மகுடம்சூட்டப்பட்டோம்.

ஜெயலலிதா அரசால் 19 மாதம் வைகோ மட்டுமல்ல, கழகத்தின் வைரத் தூண்களான 8 பேர் சிறையில்அடைபட்டுக் கிடந்தனர். அப்போது என் (எல்.ஜி) உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் 54 முறை சிறைக்குப்போய் வைகோவை சந்தித்தேன்.

ஆனால், வைகோ தொண்டர்களின் விருப்பத்துக்கு மாறாக தான்தோன்றித்தனமாக முடிவுகளை எடுத்தார். தன்நடிப்பால், கண்ணீரால் எங்களை மறு பேச்சு பேச முடியாமல் தடுத்தார். அல்லது எங்களை சந்திப்பதையேதவிர்த்தார்.

கூட்டணி அறிவிப்புகளைக் கூட அவரது பத்திரிக்கை பேட்டிகள மூலமாகவே தெரிந்து கொள்ளும் நிலையில்இருந்தோம். அதை வெட்கத்தை விட்டு சொல்லியாக வேண்டும்.

ஆனால், கட்சியை கோமா நிலைக்கு கொண்டு வந்துவிட்டார் வைகோ. இதனால் தான் இனியும் பொறுக்கமுடியாது வைகோவை நிராகரித்தோம்.

அரசியலில் நேர்மை, பொது வாழ்வில் தூய்மை, லட்சியத்தில் உறுதி என நமக்கு நாமே வரையறைகள் போட்டுக்கொண்டோம். ஆனால், 13 ஆண்டுகள் கழிந்த பின்னால் இந்த மூன்றில் எதையும் உச்சரிக்கும் யோக்கியதை கூடஇல்லாதவராகிவிட்டார் வைகோ.

அதிமுக கூட்டணியில் சேர்ந்து பாஜக ஆட்சியை ஆதரித்தார். ஆனால், ஜெயலலிதாவுக்கே தெரியாமல்வாஜ்பாய்க்கு ஆதரவு கடிதத்தை அனுப்பிய வைகோவுக்கு நேர்மை பற்றி பேச அருகதை உண்டா?

ஜெயலலிதாவை சந்தித்து புதுக் கூட்டணி அமைந்தபோது பண பட்டுவாடா பற்றி பக்கம் பக்கமாக செய்திகள்வந்தன. பிரச்சார மேடையில் அதை தொண்டர்களே கேட்டபோது பொது வாழ்வில் தூய்மை காற்றில் பறந்தது.

லட்சியத்தில் உறுதியைப் பற்றி கேட்கவே வேண்டாம். வைகோவுக்கு முகமாகவும் முகவரியாகவும் அமைந்ததுஇலங்கைத் தமிழர் பிரச்சனை. கடல் கடந்து பிரபாகரனை சந்தித்ததை இப்போது சொல்ல முடியுமா?

புலிகளை நேற்றும் ஆதரித்தேன், இன்றும் ஆதரிக்கிறேன், நாளையும் ஆதரிப்பேன் என்று சொன்ன வைகோவால்ஜெயலலிதாவை மேடையில் வைத்துக் கொண்டு அதைச் சொல்ல முதுகெலும்பு உண்டா?

இந்தியாவில் தங்கி சிகிச்சை பெற்றிருந்தால் பாலசிங்கம் சில ஆண்டுகள் வாழ்ந்திருப்பார். ஆனால், அவரின்சாவை துரிதப்படுத்திய ஜெயலலிதாவின் அதிமுகவோடு கூட்டணி வைத்துக் கொண்ட வைகோவுக்கு லட்சியம்என்ன வேண்டிக் கிடக்கிறது?

ஒன்றரை ஆண்டு வேலூர் சிறையில் வெந்ததைக் கூட வெளியில் சொல்ல முடியாத துர்பாக்கியம் வைகோவுக்கு.கொள்கையை முழங்க முடியவில்லை. செய்த தியாகத்தை சொல்ல முடியவில்லை. பண பட்டுவாடா லஞ்சகுற்றச்சாட்டால் தலை நிமிர்ந்து நிற்கக் கூட முடியவில்லை.

இனி மதிமுகவை வைகோவோல் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல முடியாது. முதுமக்கள் தாழியில் வ்ைததுபரணில் தூக்கி வைக்கப்பட வேண்டிய செல்லாக்காசாகிவிட்டார்.

காந்தம் போல் ஈர்த்த வார்த்தைகள், கிழடு தட்டிப் போன வறட்டுக் கத்தல்களாகிவிட்டன. உலக வரலாறு முதல்உள்ளூர் கதைகள் வரை அவர் சொல்லும் கதைகள் அனைத்தும் தன்னைத் தானே சுயபுராணம் பாடிக் கொள்ளும்பாசுரங்களாகிவிட்டன.

சீமாட்டிகளைப் போல சிரித்துக் கெடுப்பதும், கையிேயைப் போல கண்ணீர் விட்டு கழுத்தறுப்பதும் வைகோவின்வாடிக்கையாகிவிட்டன.

சிலரின் (ஜெயலலிதா?) தீய நட்பால் திராவிடம் என்ற வார்த்தையே அவருக்கு கசக்க ஆரம்பித்துவிட்டது. சுய நலஎண்ணங்கள் தலை தூக்கிவிட்டதால் குடும்ப வளர்ச்சியே அவருக்கு முக்கியமாகிவிட்டது.

லட்சக்கணக்கான தொண்டர்களின் தியாகத்தால் வளர்ந்த இயக்கத்தை முதலீடாக்கி அதிமுக தலைமை இடத்தைப்பிடிக்க தீராப் பசியுடன் வைகோ வலம் வலந்து கொண்டிருக்கிறார் என்று கூறியுள்ளனர்.

எல்ஜி ஆதரவு மா.செ நீக்கம்-வைகோ அதிரடி

இந் நிலையில் எல்.கணேசன் ஆதரவாளான திருவாரூர் மாவட்ட செயலாளர் தியாக பாரிகட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக மதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளஅறிக்கையில்,கட்சியின் ஒழுங்கை மீறும் வகையில் தியாக பாரி நடந்து கொண்டதால்,அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அவர்நீக்கப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்ட பொருளாளராக முப்பால் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியைபலப்படும் பணியில் அவர் ஈடுபடுவார் என்று தெரிவித்துள்ளார் வைகோ.

கையெழுத்து வேட்டை:

இதற்கிடையை மதிமுக பொதுக் குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வேட்டைதொடங்கியுள்ளது.

அவைத் தலைவர் பொறுப்பிலிருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து சென்னைஉயர்நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை உத்தரவைப் பெற்றுள்ளார் எல்.கணேசன்.இதைத் தொடர்ந்து சேலத்தில் 29ம் தேதி பொதுக் குழு கூடும் எனவும்அறிவித்துள்ளார்.

இதேபோல மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் ஜனவரி 10ம் தேதி கோவையில்நடைபெறும் என்று வைகோ அறிவித்துள்ளார்.

தான் கூட்டியுள்ள பொதுக் குழுக் கூட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையிலும், எல்.ஜி.கணேசன் பக்கம் பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் இல்லைஎன்பதையும் நிரூபிக்க பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வேட்டையைமேற்கொள்ள அவர் உத்தரவிட்டுள்ளார்.

வரும் 28ம் தேதி மாவட்டங்களில் கூட்டப்படவுள்ள மாவட்ட செயல் வீரர்கள்கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து பெறப்படவுள்ளது.

கட்சிக்கு விசுவாசமாக இருப்போம். வைகோ எடுக்கும் முயற்சிகளுக்கு துணைநிற்போம், எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரனுக்கு எதிராக எடுக்கப்படும்நடவடிக்கைக்கு துணையாக இருப்போம், கட்சிக்கு களங்கம் ஏற்படும் வகையில்நடந்து கொள்ள மாட்டோம் என்று உறுதியளித்து அதில் கையெழுத்திடுமாறுபொதுக்குழு உறுப்பினர்களிடம் கூறப்படவுள்ளது.

இந்தக் கையெழுத்துக்களை எல்.ஜி, செஞ்சிக்கு எதிராக உயர்நீதிமன்றத்திலும் தாக்கல்செய்ய மதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

கண்ணப்பனிடம் கணக்கு கேட்டு வழக்கு?:

இதற்கிடையே, மதிமுக பொருளாளர் கண்ணப்பனிடம் கணக்கு கேட்டு தென்சென்னை மாவட்ட பொருளாளர் ரவி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரதிட்டமிட்டுள்ளார்.

எல்.ஜி. ஆதரவாளரான ரவி, கட்சியின் வரவு செலவுக் கணக்கை கண்ணப்பன் காட்டவேண்டும் என்று கோரி விரைவில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளார்.

எல்ஜி-கோ.சி மணி சந்திப்பு:

இந் நிலையில் சஸ்பெண்ட் மதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன் நேற்று காலை கும்பகோணத்தில் கூட்டுறவுத்துறைஅமைச்சர் கோ.சி.மணியை சந்தித்து ரகசிய ஆலோசனை நடத்தினார்.

கும்பகோணத்தில் உள்ள தனது எம்.எல்.ஏ. அலுவலகத்தில் வைத்து கணேசனை சந்தித்தார் மணி. ஒரு காலத்தில் தஞ்சாவூர்மாவட்ட திமுகவில் ஒருவருக்கு எதிராக ஒருவர் கோஷ்டி அரசியல் நடத்தியவர்கள் இந்த இருவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X