For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒரே மேடையில் சாய் பாபா- கருணாநிதி!!!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:முதல்வர் கருணாநிதியும், புட்டபர்த்தி சாய்பாபாவும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிசென்னையில் வருகிற 21ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இருவரும் ஒரேமேடையில் அமரப் போவது இதுவே முதல் முறையாகும்.

Saibaba

சென்னை நகர மக்களின் குடிநீர்த் தேவைக்காக ஆந்திர மாநிலத்திலிருந்து கிருஷ்ணாநீரை பெறுவதற்காக கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் ஒப்பந்தம் போடப்பட்டது.

அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி முன்னிலையில் தமிழக முதல்வர்எம்.ஜி.ஆரும், ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவும் இதற்கான ஒப்பந்தத்தில்கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தில் கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களும் சேர்க்கப்பட்டன.தெலுங்கு கங்கா திட்டம் என அழைக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம்கைலாசம் அணையிலிருந்து சோமசீலா அணைக்கு கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டுஅங்கிருந்து கண்டலேறு அணைக்கு தண்ணீர் விடப்படும்.

karunanidhi

பின்னர் அந்தத் தண்ணீர், சென்னைக்கு அருகே உள்ள பூண்டி நீர்த் தேக்கத்திற்குஅனுப்பப்படும். இந்த ஒப்பந்தத்தின்படி ஆந்திரா, கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிராஆகிய மூன்று மாநிலங்களும் சென்னைக்கு ஆண்டுக்கு தலா 5 டிஎம்சி தண்ணீரைவழங்க வேண்டும்.

கடந்த 1996ம் ஆண்டு முதல் இந்தத் தண்ணீர் முறைப்படி வந்திருக்க வேண்டும்.ஆனால் அப்படி வரவில்லை. கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து தமிழக எல்லைவரையிலான கால்வாய் பராமரிப்பின்றி இருந்ததால் ஆந்திரா தண்ணீர் தரவில்லை.

மேலும் கால்வாயின் இருபுறக் கரைகளும் பலமின்றி இருந்ததால் கிருஷ்ணா நீர் வரும்வழியிலேயே வீணாகப் போனது. இதனால் சென்னைக்கு தண்ணீர் வரவில்லை.

இதையடுத்து கால்வாய்க் கரையை பலப்படுத்தி, கால்வாயை சரி செய்யும் பொறுப்பைசாய்பாபா ஏற்றுக் கொண்டார். ஸ்ரீசத்ய சாயி சேவா அமைப்பின் மூலம் ரூ. 200 கோடிசெலவில் கால்வாய் பலப்படுத்தப்பட்டது.

இதையடுத்து சாய்பாபாவுக்கு நன்றி தெரிவித்து பாராட்டு விழா நடத்த முடிவுசெய்யப்பட்டது. இந்த பாராட்டு விழா வருகிற 21ம் தேதி காலை 11 மணிக்குசென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.

இதில் முதல்வர் கருணாநிதி கலந்து கொண்டு தலைமை தாங்கி பேசுகிறார். ஆளுனர்பர்னாலா, மகாராஷ்டிர மாநில ஆளுநர் எஸ்.எம்.கிருஷ்ணா, ஆந்திர முதல்வர்ராஜசேகர ரெட்டி, மகாராஷ்டிர மாநில முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்.க், கர்நாடகமுதல்வர் குமாரசாமி, மத்திய அமைச்சர்கள் சிவராஜ் பாட்டீல், லாலு பிரசாத் யாதவ்,தயாநிதி மாறன், தமிழக அமைச்சர்கள் ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்டோர்பங்கேற்கின்றனர்.

சென்னை மக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கும் வகையில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சிகுறித்து ஸ்ரீசத்ய சாய் அமைப்பின் அகில இந்தியத் தலைவர் சீனிவாசன், மாநிலத்தலைவர் ரமணி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

10 வருடங்களுக்குப் பிறகு சாய்பாபா 19ம் தேதி சென்னை வருகிறார்.

சென்னை நகர மக்களின் தாகத்தை தீர்க்க உதவும் வகையில் கண்டலேறு அணை முதல்பூண்டி நீர்த் தேக்கம் வரையிலான கால்வாயை சரி செய்யும் பணிமேற்கொள்ளப்பட்டது. 2004ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பணி 18 மாதங்கள்நடந்தது.

பாபா டிரஸ்ட் மூலம் இந்தப் பொதுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தப்பணிக்காக யாரிடமிருந்தும் நன்கொடை பெறவில்லை. சாய் பாபாவின் இந்த அற்புதச்சேவைக்கு சென்னை மக்கள் நன்றி தெரிவிக்கும் வகையில் இவ்விழா முதல்வர்கருணாநிதி தலைமையில் நடைபெறவுள்ளது.

மேலும் உலக மக்கள் மன்றாக இருக்க வேண்டி திருவான்மியூ>ல் 10 நாட்களுக்குயாகம் நடத்தப்படுகிறது. இதிலும் சாய்பாபா கலந்து கொள்கிறார்.

20ம் தேதி தொடங்கும் இந்த யாகம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையும்,பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையிலும் நடைபெறும்.அதிருத்ரயக்னம், அதிருத்ர அபிஷேகம் ஆகியவை நடைபெறும் என்றார்.

இந்த நிலையில் கிருஷ்ணா நதி நீர்த் திட்டம் குறித்து தமிழக அரசு விடுத்துள்ளசெய்திக் குறிப்பில்,

சென்னை நகரில் கடும் குடிநீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டதால், கிருஷ்ணா நதியிலிருந்துதண்ணீர் கொண்டு வரத் திட்டமிடப்பட்டது. இதுதொடர்பாக அப்போதைய பிரதமர்இந்திரா காந்தி, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிர மாநில முதல்வர்கள் கூட்டத்தைக்கூட்டி கிருஷ்ணா நீரை சென்னைக்கு வழங்க வேண்டியது குறித்து வலியுறுத்தினார்.

இந்திராவின் முயற்சியால், 3 மாநில பிரதிநிதிகள் கூட்டம் நடத்தப்பட்டு, சென்னைநகருக்கு மூன்று மாநிலங்களும் தலா 5 டிஎம்சி என மொத்தம் 15 டிஎம்சி தண்ணீர்வழங்க ஒத்துக் கொள்ளப்பட்டது.

இதன் பின்னர் கிருஷ்ணா நதி நீர்த் திட்ட ஒப்பந்தத்தில் அப்போதைய முதல்வர்எம்.ஜி.ஆரும், ஆந்திர முதல்வர் என்.டி.ஆரும் 1983ம் ஆண்டு கையெழுத்திட்டனர்.

ஒப்பந்தத்தில், கிருஷ்ணா நீரில் ஒரு பகுதியாக, ஆந்திர மாநிலத்தில் வறட்சியால்பாதிக்கப்பட்ட கர்னூர், கடப்பா, சித்தூர், நெல்லூர் மாவட்டத்துக்கு அனுப்புவது,அதன் மூலம் 5 லட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் பாசன வசதி செய்வது, வீணாகும்3 டிஎம்சி நீரை கழித்து 12 டிஎம்சி தண்ணீரை தமிழக எல்லைக்கு அனுப்புவது எனமுடிவெடுக்கப்பட்டது.

அதன்படி ஜூலையில் இருந்து அக்டோபர் மாதம் வரை 4 மாதத்துக்கு 8 டிஎம்சிதண்ணீரையும், ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை 4 மாதத்துக்கு 4 டிஎம்சி தண்ணீரைஆந்திரா அனுப்ப வேண்டும்.

தண்ணீரை அனுப்புவதற்கான செலவை இரு மாநிலங்களும் ஏற்பது என முடிவுசெய்யப்பட்டது. 1983ல் இரு மாநிலத்திலும் ஒரே நேரத்தில் திட்டம்தொடங்கப்பட்டது. 1996 செப்டம்பரில் சென்னைக்கு கிருஷ்ணா நீர் வந்தது. அன்றுமுதல் இதுவரை தமிழ்நாட்டுக்கு 27.07 டிஎம்சி தண்ணீர் வந்துள்ளது.

இத்திட்டத்துக்காக ஆந்திர அரசுக்கு தமிழக அரசு ரூ. 512 கோடி வழங்கியுள்ளது.தமிழகத்தின் உட் பகுதிகளில் ரூ. 214 கோடியை செலவிட்டுள்ளோம் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது ஆந்திராவில் கண்டலேறு நீர்த்தேக்கத்திலிருந்து தமிழக எல்லைவரையிலான கால்வாய் சாய்பாபாவின் உதவியால் ரூ.200 கோடியில்பலப்படுத்தப்பட்டுள்ளதால் தடையின்றி தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X