சுஷில் ஹரி பள்ளி 6வது ஆண்டு விழா

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச உறைவிடப் பள்ளியின் 6வது ஆண்டு விழாவும்,அதன் நிறுவரான ஸ்ரீ சிவசங்கர் பாபாவின் பிறந்தநாள் விழாவும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

சென்னை அருகே ஸ்ரீ சிவசங்கர் பாபா நிறுவிய சம்ரட்சனா அமைப்பு உள்ளது. இதன் வளாகத்தில் சுஷில்ஹரிசர்வதேச உறைவிடப் பள்ளி உள்ளது.

இந்த வளாகத்தில் ஜனவரி 28ம் தேதி பாபாவின் பிறந்த நாள் விழாவும், பள்ளியின் 6வது ஆண்டு விழாவும்சிறப்பாக கொண்டாடப்பட்டது. தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைசெயலாளர் டாக்டர் என்.கோவிந்தன் விழாவுக்குத் தலைமை தாங்கினார்.

பள்ளியின் நிறுவனரான ஸ்ரீ சிவசங்கர் பாபா வரவேற்புரையாற்றினார். பாபா பேசுகையில், பிளஸ்டூமாணவர்களுக்காக ரூ. 50 லட்சம் அளவிலான உதவித் தொகை திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

10ம் வகுப்பில் 95 சதவீத மதிப்பெண்களைப் பெற்ற, சமூகத்தின் அனைத்துப் பிரிவையும் சேர்ந்த மாணவர்கள்இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

டாக்டர் கோவிந்தன் பேசுகையில், மாணவர்களின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் சுஷில் ஹ>ரிசர்வதேசஉறைவிடப் பள்ளி எடுத்து வரும் நடவடிக்கைகளைப் பாராட்டினார்.

விழாவில் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள், நடனப் போட்டி, நாடகம் ஆகியவைநடைபெற்றன.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற