பஞ்சாப்: வாக்குப் பதிவு தொடங்கியது
சண்டிகர்:பஞ்சாபில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 8 மணிக்குத் தொடங்கியது.
பலத்த மழை மற்றும் வரலாறு காணாத பாதுகாப்புக்கு இடையே வாக்குப் பதிவு நடந்து வருகிறது.
மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 115 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. 1.65 கோடி பேர் வாக்காளிக்க தகுதி பெற்றவர்கள். களத்தில் 1,038வேட்பாளர்கள் உள்ளனர். இதில் 49 பேர் மட்டுமே பெண்கள்.
பஞ்சாபில் இப்போது முதல்வர் அம்ரீந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் கட்சியி ஆட்சியில் இருந்து வருகிறது. இந்தக் கட்சிக்கும் பாஜக-அகாலிதளம்கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. பஞ்சாப் மக்கள் தொகையில் சுமார் 25 சதவீதத்தினர் தலித்துகள் ஆவர். தனித்துப் போட்டியிடும்பகுஜன் சமாஜ் கட்சியால் காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிக்கு பல தொகுதிகளில் பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலுடன் கூடவே அமிர்தசரஸ் எம்பி தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடக்கிறது. கொலை வழக்கில் கைதானதால் மாஜி கிரிக்கெட்வீரரும் பாஜக எம்பியாகவும் இருந்த சித்து தனது பதவியை ராஜினாமா செய்ததால் இந்தத் தேர்தல் நடக்கிறது. இப்போது ஜாமீனில் உள்ள சித்துமீண்டும் போட்டியிடுகிறார்.
மழையால் ஒட்டுப்பதிவு மந்தம்:
கடந்த சில தினங்களாக பஞ்சாப்பில் பலத்த மழை பெய்து வருகிறது. இன்றும் மழை பெய்தது. இதனால் ஓட்டுப்பதிவில் விறுவிறுப்பு இல்லை. மாறாக மந்தமாக ஓட்டுப்பதிவு நடைபெற்றது.ஓட்டுப்பதிவு தொடங்கிய முதல் இரண்டு மணி நேரத்தில் மொத்தம் 5 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications