For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நடுவர் மன்றத்தில் மறு ஆய்வு மனு-தமிழகம் முடிவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து நடுவர் மன்றத்திலேயே மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய முதல்வர்கருணாநிதி தலைமையில் நடந்த தமிழக அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

காவிரி தீர்ப்பு குறித்து இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சிக்கூட்டம் நடந்தது. அமைச்சரவைக் கூட்ட அரங்கில் நடந்த இதில் அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி,ஸ்டாலின், துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tamil Nadu Chief Minister M Karunanidhi and all-party meeting

அதிமுக சார்பில் ஓ.பன்னீர் செல்வம், ஜோதி, பாமக சார்பில் ஜி.கே.மணி, மூர்த்தி, காங்கிரஸ் சார்பில்கிருஷ்ணசாமி, சுதர்சனம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வரதராஜன், ரெங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட்சார்பில் தா.பாண்டியன், துரைமாணிக்கம், பாஜக சார்பில் இல.கணேசன், கண்ணன், மதிமுக சார்பில்ராதாகிருஷ்ணன், சத்யா (இந்த இருவரும் வெளிநடப்பு செய்துவிட்டனர்)

போட்டி மதிமுக சார்பில் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், தேமுதிக சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன்,கு.ப.கிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் திருமாவளவன், செல்வப்பெருந்தகை, இந்திய யூனியன்முஸ்லீம் லீக் சார்பில் காதர் மொகிதீன், சையத் சத்தார்,

திராவிடர் கழகம் சார்பில் கி.வீரமணி, அறிவுக்கரசு, எம்ஜிஆர் கழகம் சார்பில் ஆர்.எம்.வீரப்பன், ராஜ்குமார்,தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் ஜவாஹிருல்லா, ஹைசர் அலி, புதிய தமிழகம் சார்பில் டாக்டர்கிருஷ்ணசாமி,

உழவர் உழைப்பாளர் கட்சி சார்பில் செல்லமுத்து, தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி சார்பில் குமார்,அகில இந்திய பார்வர்ட் பிளாக் சார்பில் கதிரவன், இந்திய சமூக நீதி இயக்கம் சார்பில் எஸ்றா சற்குணம், காவிரிடெல்டா பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் ரங்கநாதன் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இக் கூட்டத்தில் நடுவர் மன்றத்தின் தீர்ப்பின் சாதக-பாதக அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.பின்னர் தமிழகத்துக்கு பாதகமான விஷயங்களுக்கு எதிராக மறு ஆய்வு மனு தாக்கல் செய்வது என்று தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.

மாநிலங்களுக்கு இடையிலான நீர் பகிர்வு தாவா சட்டத்தின் 5(3)வது பிரிவின் கீழ் இந்த மனு தாக்கல்செய்யப்படவுள்ளது. இந்த மனு தாக்கல் செய்யப்படும் முன் சட்ட, பாசன நிபுணர்களுடன் அரசு ஆலோசனைநடத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X