வீடு கட்டி தருவதாக கோடி கோடியாய்மோசடி- புறம்போக்கு கண்டக்டர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை புறநகர் பகுதிகளில் வீடு கட்டித் தருவதாகக் கூறி பொது மக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த நபர் கைது செய்யப்பட்டார்.

அரசு போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி மோசடி செய்து டிஸ்மிஸ் செய்யப்பட்டவர் மதன் குமார் (52). இதையடுத்து ரியல்எஸ்டேட் பிசினஸில் இறங்கினார். அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி விற்க ஆரம்பித்தார்.

Madhan kumar

இந் நிலையில் குரோம்பேட்டை அஸ்தினாபுரம் பகுதியில் வீடுகள் கட்டித் தருவதாகவும், நிலம் வாங்கித் தருவதாகவும் விளம்பரங்கள் செய்தார்.தனக்கு சொந்தமான 2 கிரவுண்டு நிலத்தில் 22 அடுக்கு மாடி வீடுகள் கட்டித் தருவதாக அறிவித்தார்.

இதையடுத்து வீடுகளை புக் செய்ய இவரிடம் பலர் லட்சக்கணக்கில் அட்வான்ஸ் தந்தனர். ஆனால், வீடே கட்டித் தரவில்லை.

இதே போல இன்னொரு 3 கிரவுண்டு நிலத்தில் பிளாட்கள் கட்டித் தருவதாக விளம்பம் செய்தும் லட்சக்கணக்கில் பணம் வசூலித்தார். ஆனால்,அவர்களையும் ஏமாற்றினார்.

மேலும் பலருக்கு வீடுகளை தந்தாலும் அதை ரிஜிஸ்தர் செய்து தராமல் இருந்து வந்தார். காரணம், வீடு கட்டப்பட்ட இடம் மோசடியாகமதன்குமாரால் சுருட்டப்பட்டது என்பதே.

இதையடுத்து பணம் கொடுத்தவர்கள் மதன்குமாரை நெருக்க ஆரம்பிக்கவே ஆள் தலைமறைவாகிவிட்டார். இதையடுத்து இவரிடம் ஏமாந்த 16பேர் மாநகர கமிஷ்னர் லத்திகா சரணை சந்தித்து புகார் கொடுத்தனர்.

இதையடுத்து துணை கமிஷ்னர் தர்மராஜன் தலைமையில் தனி போலீஸ் படை மதன் குமாரை கைது செய்தது. அவரிடம் இருந்து பல கார்கள்பறிமுதல் செய்யப்பட்டன.

இவருக்கு சீதாகுமாரி, பெரியவதனா, மாலா என 3 மனைவிகளாம். முதல் மனைவி ஓடிப் போய்விட்டார். இரண்டாவது மனைவி விவாகரத்துவாங்கிச் சென்றுவிட்டார். 3வது மனைவி தி.நகர் பள்ளியொன்றில் ஆசிரியையாக உள்ளார்.

பொது மக்களிடம் இவர் வசூலித்த கோடிக்கணக்கான ரூபாயை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அதிமுகவைச் சேர்ந்த மதன் குமார் இத்தனை நாட்களாக தனது அரசியல் செல்வாக்கை வைத்து தப்பி வந்தார். கண்டக்டராக பணியாற்றியபோதுஅண்ணா தொழிற்சங்கத்தில் மிகத் தீவிரமாக இருந்தார்.

அப்போதே அரசு புறம்போக்கு நிலத்தை வளைத்துப் போட்டு வந்தார். டிஸ்மிஸ் ஆன பின் தான் வளைத்துப் போட்ட புறம்போக்கு நிலங்களையேமுதலீடாகக் கொண்டு ரியல் எஸ்டேட் பிஸினசில் இறங்கிவிட்டார்.

பல்லாவரம் பகுதியில் புறம்போக்கு நிலத்தை சுருட்டுவதில் திமுகவைச் சேர்ந்த நந்து என்ற பிரமுகருக்கும் இவருக்கும் தான் கடும் போட்டியாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற