சுஷில் ஹரி பள்ளியின் கல்வி உதவித் திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:சென்னை அருகே கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச உறைவிடப் பள்ளியின் இலவச கல்வி உதவித் திட்டத்திற்கு விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.

சென்னையை அடுத்த கேளம்பாக்கம், ராமராஜ்ஜியம் வளாகத்தில் உள்ள சுஷில்ஹரி சர்வதேச உறைவிடப் பள்ளி, சிவசங்கர் பாபாவின்வழிகாட்டுதலில் இயங்கி வருகிறது.

இப்பள்ளி 10ம் வகுப்பு வரை மத்திய அரசு பாடத் திட்டம் (சிபிஎஸ்இ) மற்றும் ப்ளஸ் 1, பிளஸ் டூ வகுப்புகளுக்கு தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறையின் அங்கீகாரத்துடன் செயல்பட்டு வருகிறது.

வரும் கல்வி ஆண்டில் சுஷில் ஹரி பள்ளியில் புதிய இலவச கல்வி உதவித் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.

2007-08ம் ஆண்டு நுழைவுத் தேர்வு மூலமாக மாணவர்களை தேர்ந்தெடுத்து, முழு கல்வி உதவித் தொகை வழங்க இப்பள்ளி முடிவு செய்துள்ளது.

இந்த நுழைவுத் தேர்வு சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் இந்த மாதம் நடைபெறுகிறது.

6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மற்ற பள்ளிகளில் நன்கு படிக்கும் மாணவ, மாணவிகள் இந்த நுழைவுத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுஅவர்களின் மேல் படிப்புக்குரிய முழு கல்வி உதவித் தொகையும் வழங்கப்படும்.

உதவி பெற தகுதி என்ன?

இந்த உதவித் தொகையை பெற விரும்புவோர், இந்த கல்வியாண்டின் அரை ஆண்டு தேர்வில் 80% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இதுதவிரசுஷில் ஹரி பள்ளி நடத்தும் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.

இவை இரண்டிலும் தேறுவோருக்கு கல்விக் கட்டணம், தங்கும் வசதி, சீருடை, மருத்துவ வசதி, சீருடை சலவை அனைத்தும் இலவசமாகவழங்கப்படும்.

இதுதவிர 90 சதவீத மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியர் தங்களது ஊருக்கு சென்று வர ஆகும் செலவுகளையும் சுஷில் ஹரி பள்ளியேஇலவசமாக வழங்கும்.

தகுதி மற்றும் விருப்பமுடைய மாணவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

சுஷில்ஹரி சர்வதேச உறைவிடப் பள்ளி,
இராமராஜ்ஜிய வளாகம்,
கேளம்பாக்கம் - 603103.

தொலைபேசி எண்: 044-27474050, 274752223.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற