ராஜ் வழியில் சன்....-கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்புகிறது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:இதுவரை கிரிக்கெட் நேரடி ஒளிபரப்பு போன்றவற்றை நினைத்துக் கூட பார்த்திராத சன் டிவி, அயர்லாந்து அணியுடன் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்ப நிம்பஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து அணிகளுடன் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இங்கிலாந்துடன் நான்கு டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்கிறது.

இதில் அயர்லாந்து தொடரில் இடம் பெறும் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்புச் செய்யும் உரிமையை நிம்பஸ் டிவி மூலம் சன் டிவி குழுமம் பெற்றுள்ளது.

இதுதொடர்பான ஒப்பந்தம் சன் குழுமத்திற்கும் நிம்பஸ் நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் சன் நியூஸ், உதயா வார்த்தகளு (கன்னடத்தில்), ஜெமினி நியூஸ் (தெலுங்கு), சூர்யா (மலையாளம்) ஆகிய சேனல்களில் அந்தந்த மொழி வர்ணனையுடன் அயர்லாந்து தொடர் போட்டிகள் ஒளிபரப்பாகும்.

இதுதவிர மேற்கண்ட நான்கு மொழிகளிலும் 2010ம் ஆண்டு வரை நிம்பஸ் ஒளிபரப்பும் கிரிக்கெட் போட்டிகளையும் சன் குழும சேனல்கள் ஒளிபரப்பும்.

தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் இந்தியா பங்கேற்கும் போட்டிகளை பிராந்திய மொழிகளில் கிரிக்கெட் ரசிகர்கள் காண முடியும். அயர்லாந்து கிரிக்கெட் தொடர் ஜூன் 23ம் தேதி தொடங்குகிறது.

சமீபத்தில் வங்கதேசத்தில் இந்தியா பங்கேற்ற போட்டிகளை ராஜ் டிவி தமிழ் வர்ணனையுடன் நேரடியாக ஒளிபரப்பியது. இந்த நிலையில் சன் டிவி அயர்லாந்து தொடரை ஒளிபரப்பும் உரிமையை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+