For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குட்டி காஷ்மீராக மாறுகிறது தென்காசிbr/- ராம. கோபாலன் குற்றச்சாட்டு

By Staff
Google Oneindia Tamil News


தென்காசி:

தென்காசி பகுதி குட்டி காஷ்மீராக மாறி வருகிறது. இதை அனுமதிக்க மாட்டாம். தென்காசி நகரைக் காப்போம் என இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம.கோபாலன் கூறியுள்ளார்.

Rama.Goplanதென்காசிக்கு வந்த ராம.கோபாலன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், தென்காசியில் ஓரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனை கோஷ்டி மோதல் என கூறி உண்மை காரணத்தை மூடி மறைக்கின்றனர்.

இது வெட்கக் கேடானது. தென்காசி கலவரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு என்ன நடவடிக்கை தேவையோ அதை செய்ய வேண்டும். உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும்.

இவ்வூர் கொலைகளமாக மாறி வருகிறது. குட்டி காஷ்மீராக மாற்றி வருகின்றனர். இந்துக்களை வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இடத்திற்கு ரூ.25 லட்சம் கொடுக்கின்றனர். இப்படி இந்துக்களை வெளியேற்றும் அபாயகரமான பகுதியாக தென்காசி மாறி வருகிறது. இதனை அனுமதிக்க மாட்டோம். தென்காசி நகரை காப்போம்.

இங்கு அமைதி நிலவுவதாக கூறுகின்றனர். கடந்த முறை 17 இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. ஆனால் இம்முறை ஒரு இடத்தில் மட்டுமே அனுமதி அளித்துள்ளனர். பின்னர் எப்படி அமைதியாக உள்ளதாக கூறமுடியும். தென்காசியில் இந்துகளுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

ரம்ஜான், மொகரம் பண்டிகைகளை கொண்டாட விடாமல் தடுக்க முடியுமா. இந்துகளுக்கு எதிராக செயல்படும் இந்த அரசு மதசார்பின்மை அரசாக நாடகம் ஆடுகிறது.

முஸ்லீம் - கிறிஸ்துவ மதத்தினரிடம் ஓட்டுக்காக மத்திய, மாநில அரசுகள் திட்டம் போட்டு செயல்படுகின்றன. இந்துக்கள் கஷ்டப்பட்டு போராடி தான் வெற்றி பெற வேண்டிய நிலையில் உள்ளனர்.

இங்கு அமைதியான நிலை உள்ளதாக கூறுகின்றனர். இது அமைதியில்லை. மயான அமைதி. இந்துக்களை ஓடுக்குவதற்காக விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட அனுமதிக்கவில்லை. பின் எப்படி அமைதி இருப்பதாக கூற முடியும்.

இந்துக்களின் கரங்கள் கட்டப்பட்டுள்ளது. அவர்களின் உணர்வுகள் தடுக்கப்பட்டிருக்கிறது. சமுதாயத்தில் கை கட்டி, வாய் பொத்தி நிற்பது போன்ற கொடுமையான நிகழ்வுகள் அரங்கேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளது. இதனால் மட்டும் மீண்டும் இங்கு அமைதி திரும்பாது.

காசிவிஸ்வநாதர் கோவில் நிலத்தில் உள்ள தொழுகை பள்ளிவாசலில் பழைய வரலாறுகளை அழித்துள்ளனர். அவர்கள் அக்கிரமித்துள்ள நிலங்களை அரசு மீட்டு தரவேண்டும்.

தமிழக அரசு கோவில் நிலங்களை இலவசமாய் வழங்க முயற்சித்து வருகிறது. இது எதிர்காலத்தில் கோவிலை அழிக்க போடப்பட்ட திட்டமாகவே கருதுகிறோம். அண்ணா அறிவாலாயத்தையும் அப்படி செய்யமுடியுமா. கோவில் நிலங்களை எடுப்பதை எதிர்த்து போராட்டங்களை நடத்த இந்து முன்னணி தயாராகி வருகிறது.

ஹைதராபாத்தில் நடந்த குண்டுவெடிப்பில் தென்காசியை தலைநகராகக் கொண்டு செயல்படும் ஒரு தீவிரவாத இயக்கத்திற்கு தொடர்பு உள்ளதாக ஒரு வடநாட்டு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

ராமர் பாலம் பிரச்சனையில் இந்து அமைப்புகளின் போராட்டத்தின் காரணமாக மாற்று பாதை அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளதை வரவேற்கிறேன்.

அரசியல் லாபத்திற்காக தமிழகத்தில் இஸ்லாமியர்களுக்கும்-கிறிஸ்தவர்களுக்கும் இட ஓதுக்கீடு வழங்கி ஓட்டு வங்கியை தக்க வைத்துக் கொண்டுள்ளனர். பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. மேலும் எதிர்காலத்தில் இந்துக்களை மதமாற்றம் செய்ய இந்த இட ஓதுக்கீடு வழிவகுத்து விடும் என்று அச்சம் ஏற்படுகிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த இட ஓதுக்கீட்டை எதிர்த்து வழக்கு தொடர உள்ளேன்.

தென்காசியில் இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியனை கொலை செய்த குற்றவாளிகளிடம் நடத்திய நார்கோ அனாலிசிஸ் (உண்மை கண்டறியும்) சோதனையில் அவர்கள் வி.டி.எஸ் ரகுமான் பாட்ஷா, ஹாஜி முஸ்தபா கமால் பாட்ஷா ஆகிய இருவர்தான் தூண்டி விட்டதாக கூறி உள்ளனர் என்று தகவல் கிடைத்துள்ளது. அவர்களை ஏன் காப்பாற்றுக்கின்றனர் என்று தெரியவில்லை. அமைதி திரும்ப வேண்டும் என்ற எண்ணம் அதிகாரிகளுக்கு இல்லை என்றார் ராம.கோபாலன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X