கம்யூனிஸ்ட்-ஆர்எஸ்எஸ் மோதல்: கம்யூ பிரமுகர் படுகொலை, பாலக்காட்டில் பந்த்
பாலக்காடு: பாலக்காடு அருகே கம்யூனிஸ்ட் பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதால் இன்று பாலக்காடு முழுவதும் பந்த் அனுசரிக்கப்படுகிறது.
பாலக்காடு அருகேயுள்ள கடுங்காங்குன்னு பகுதியைச் சேர்ந்தவர்கள் கோபாலகிருஷ்ணன்(45) மற்றும் ரவீந்தர்(34). உறவினர்களான இவர்கள் இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள்.
கடந்த சில மாதங்களாக கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்களுக்கும், பாஜக, ஆர்எஸ்எஸ் கட்சியினருக்கும் கடுங்காங்குன்னு பகுதியில் கடும் மோதல் நடந்து வருகிறது.
மோதலை தவிர்ப்பதற்காக கடந்த 3 மாதங்களாக அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு லேசான அமைதி திரும்பியதால் 2 வாரங்களுக்கு முன் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.
இந் நிலையில் நேற்றிரவு கோபாலகிருஷ்ணனும், ரவீந்திரனும் பைக்கில் வந்து கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் இவர்கள் இருவரையும் வழிமறித்து அரிவாளால் கொடூரமாக வெட்டி தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் படுகாயமடைந்த கோபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ரவீந்திரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த கொலை சம்பவம் குறித்து பாலக்காடு மாவட்ட எஸ்பி தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கம்யூனிஸ்ட் பிரமுகர் கோபாலகிருஷ்ணன் படுகொலை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து இன்று பாலக்காடு மாவட்டம் முழுவதும் பந்த நடத்த அக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
இன்று காலை முதல் பாலக்காடு மாவட்டம் முழுவதும் பஸ், லாரி, ஆட்டோ எதுவும் இயங்கவில்லை. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் எதுவும் திறக்கப்படவில்லை.
இந்த பந்த்தால் பாலக்காடு முழுவதும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், தமிழகத்திலிருந்து பாலக்காட்டுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications