உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் ஆனார் முகேஷ் அம்பானி
மும்பை: மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் பில் கேட்ஸ், வாரன் பபெட் உள்ளிட்ட உலக மகா கோடீஸ்வரர்களை பின்னுக்குத் தள்ளி விட்டு உலகின் மிகப் பெரிய பணக்காரராக மாறியுள்ளார், ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி.
உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இதுவரை இந்தியர்கள் யாரும் முதலிடத்தைப் பிடித்ததில்லை. அமெரிக்கர்களே தொடர்ந்து முன்னணியில் இருந்து வந்தனர்.
ஆனால் முதல் முறையாக முகேஷ் அம்பானி முதலிடத்தைப் பிடித்து பெரும் சாதனை படைத்துள்ளார்.
இந்தியப் பங்குச் சந்தையில் ஏற்பட்ட அபரிமிதமான ஏற்றத்தின் காரணமாக அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு எட்ட முடியாத உயரத்திற்குச் சென்று விட்டது.
நேற்று மும்பை பங்குச் சந்தை 20,000 புள்ளிகளை எட்டியது. இதனால் பங்குகளின் விலைகள் தாறுமாறாக உயர்ந்தன. இதில் அம்பானி சகோதரர்களின் பங்குகள் பெரும் விலையை எட்டின. இதன் மூலம் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.
இதன் விளைவாக பில் கேட்ஸ், வாரன் பப்பெட், மெக்சிகோ தொழிலதிபர் கார்லோஸ் ஸ்லிம் ஹெலு ஆகியோரை பின்னுக்குத் தள்ளி விட்டு முகேஷ் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் பெட்ரோலியம் அண்ட் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரியல் இன்பிராஸ்டிரக்சர் லிமிட்டெட் ஆகியவற்றின் சொத்து மதிப்பு 63.2 பில்லியன் டாலராக அதாவது இந்திய மதிப்பில் ரூ. 2,49,108 கோடியாக உயர்ந்துள்ளது.
இதன் மூலம் இதுவரை முதலிடத்தில் இருந்து வந்த பில் கேட்ஸும், அதற்கு அடுத்த இடத்தில் இருந்த கார்லோஸையும் முகேஷ் பின்னுக்குத் தள்ளியுள்ளார்.
தற்போது முகேஷுக்கும், பில் கேட்ஸுக்கும் இடையிலான சொத்து மதிப்பு வித்தியாசம் ரூ. 15,000 கோடியாகும்.
2வது இடத்தில் இருந்த கார்லோஸ் தற்போது 3வது இடத்திற்கும், 3வது இடத்தில் இருந்த வாரன் பப்பெட் 4வது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளனர்.
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில், ரிலையன்ஸ் நிறுவனத்தின் மதிப்பு மட்டும் ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் கோடியாகும்.
ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் மதிப்பு ரூ. 37 ஆயிரத்து 500 கோடியாகும். ரிலையன்ஸ் அடிப்படைக் கட்டமைப்பு நிறுவனத்தின் மதிப்பு ரூ. 2,100 கோடியாகும்.
கடந்த செப்டம்பர் 26ம் தேதி இந்தியாவின் லட்சுமி மிட்டலை முகேஷ் அம்பானி முந்தினார். உலகின் பணக்கார இந்தியர் என்ற பெருமையை அப்போது அவர் பெற்றார். மிட்டல் உலகின் 5வது பெரும் பணக்காரராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications