சில்லறைத் தட்டுப்பாடு: சென்னை ரிசர்வ் வங்கிக்கு ரூ. 6 கோடி நாணயங்கள்!
சென்னை: தமிழகத்தில் பெரும் சில்லறைத் தட்டுப்பாடு நிலவுவதால் அதை சமாளிக்க சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக் கிளைக்கு மத்திய ரிசர்வ் வங்கி ரூ. 6 கோடி மதிப்பிலான நாணயங்களை அனுப்பி வைத்துள்ளது.
தமிழகத்தில் ெபரும் சில்லறைத் தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக 50 பைசா, ஒரு ரூபாய், 2 ரூபாய் நாணயங்களுக்கு தட்டுப்பாடு உள்ளது. இதனால் பொதுமக்களும், வியாபாரிகளும், மற்றவர்களும் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.
50 பைசா மற்றும் 25 பைசா நாணயங்களை பார்க்கவே முடியவில்லை. அந்த அளவுக்கு அது மாயமாகியுள்ளது. அதேபோல ஒரு ரூபாய் நாணயமும் கூட பற்றாக்குறையாகி வருகிறது.
இந்த நிலையைப் போக்க மத்திய ரிசர்வ் வங்கி, சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக் கிளைக்கு ரூ. 6 கோடி மதிப்பிலான சில்லறை நாணயங்களை அனுப்பி வைத்துள்ளது. இந்த நாணயங்கள் புழக்கத்திற்கு விடப்பட்டு விட்டன.
இவை 1, 2 மற்றும் 5 ரூபாய் நாணயங்கள் ஆகும். இந்த நாணயங்கள் வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
25 பைசா நாணயங்கள் எங்குமே இல்லை என்பதால் அது செல்லாது என்ற கருத்து மக்களிடையே நிலவுகிறது. ஆனால் இதை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது. கடந்த 3 வருடங்களாக ஐந்து ரூபாய் தாள்கள் அச்சிடுவது நிறுத்தப்பட்டு நாணயங்களாக வெளியாகிக் கொண்டிருப்பதால், ஐந்து ரூபாய் தாள்கள் குறைந்து விட்டதாகவும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
சென்னையில் உள்ள தலைமைத் தபால் நிலையம், அண்ணா சாலை தலைமைத் தபால் நிலையம் உள்ளிட்ட சில முக்கிய தபால் நிலையங்களில் ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்து நாணயங்களாக பெற்றுக் கொள்ளலாம் எனவும் பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
ரிசர்வ் வங்கி அலுவலகத்திலும் கூட சில்லறைகளைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications