திருவோடு ஏந்தி திமுக கவுன்சிலர் நூதன போராட்டம்
பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் திருவோடு ஏந்தி திமுக கவுன்சிலர் நூதன போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய குழுவில் திட்டக்குடி, சூராங்காடு, எட்டுபுலிகாடு குழுவின் உறுப்பினராக இருப்பவர் கோவிந்தராஜ். இவர் ஊராட்சி ஒன்றிய கூட்டத்திற்கு காவி உடை அணிந்து, திருவோடு ஏந்தி வந்தார். அவர் வருகையை கண்டு திடுக்கிட்ட உறுப்பினர்களும் பொது மக்களும் அங்கு குவிந்தனர்.
அப்போது கோவிந்தராஜ் நிருபர்களிடம் கூறியதாவது, நான் திமுகவில் கடந்த 35 வருடங்களாக உள்ளேன். மாவட்டச் செயலாளர் பாராட்டும் வகையில் செயல்பட்டு வந்துள்ளேன். திமுகவைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தலைவர் ரஞ்சனா தேவி, துணைத் தலைவர் பாலமுருகன் ஆகியோரை நாங்கள் தான் தேர்வு செய்தோம்.
ஆனால் கூட்டத்தில் உறுப்பினர்களின் கருத்தை இவர்கள் மதிப்பதில்லை, ஏற்பதும் கிடையாது. சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு முறையான நிதி ஒதுக்கீடும் செய்வதில்லை. அப்படியே நிதி ஒதுக்கீடு செய்தாலும் அதற்கான வேலைகளில் ஈடுபடும் போது அவர்களது தலையீடு அதிகமாகவே உள்ளது.
இதை உணர்த்த தான் திருவோடு ஏந்தி போராட்டம் நடத்தினேன். இதற்கும் தலைவர், துணைத் தலைவர் செவி சாய்க்கவில்லை என்றால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன் என்றார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications