பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி மலேசியா பயணம்
டெல்லி: பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி 3 நாள் பயணமாக ஞாயிற்றுக்கிழமை மலேசியா செல்கிறார்.
தனது மூன்று நாள் பயணத்தின்போது, மலேசிய பாதுகாப்பு அமைச்சரும், துணைப் பிரதமருமான முகம்மது நஜீப் பின் துன் ஹஜியாப்துல் ரஸாக், வெளியுறவு அமைச்சர் அகமது சையத் ஹமீத் அல்பார் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.
மேலும் பிரதமர் அப்துல்லா பின் ஹாஜி அகமது படாவியையும் அவர் சந்தித்துப் பேசுகிறார். பின்னர் பினாங்கு செல்கிறார். அங்கு மாகாண ஆளுநர் ஹாஜி அப்துல் ரஹ்மான் பின் ஹாஜி அப்பாஸை சந்திக்கிறார்.
அந்தோணியுடன் பாதுகாப்புத் துறை செயலாளர் விஜய் சிங், ஆலோசகர் சுந்தரம் கிருஷ்ணா, ராணுவ துணைத் தளபதி ஷா, விமானப்படை துணைத் தளபதி பிரவுன், கடற்படை துணைத் தளபதி சுஷில், வெளியுறவுத்துரை இணைச் செயலாளர் பிரேன் நந்தா ஆகியோர் அடங்கிய உயர் மட்டக் குழுவும் செல்கிறது.
மலேசியாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே தூதரக உறவுகள் ஏற்பட்டு இந்த ஆண்டுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. மேலும் இது மலேசியாவின் 50-வது சுதந்திர தின ஆண்டும் ஆகும்.
கடந்த 1993ம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. மேலும், 6வது மலேசிய-இந்திய பாதுகாப்பு ஒத்துழைப்புக் கூட்டமும் டெல்லியில் நடந்தது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் மலேசிய விமானப் படையினருக்கு இந்திய விமானப்ப டையினர், சுகோய் ரக போர் விமானப் பயிற்சியையும் கடந்த மாதம் அளித்தனர்.
கடந்த ஆண்டு மே மாதம் மலேசிய பாதுகாப்பு அமைச்சகத்துடன், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் புதிய ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது. அதன்படி மலேசிய விமானப் படையினருக்கு சுகோய் ரக விமானங்கள் குறித்த தொழில்நுட்பப் பயிற்சியை இந்தியா அளித்தது.
மலேசியாவில் தமிழர் பிரச்சினை வெடித்த பின்னர், இந்திய அமைச்சர் ஒருவர் மலேசியா செல்வது இதுவே முதல் முறை என்பதால் அந்தோணியின் பயணம் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications