For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏர் இந்தியாவின் டெல்லி-நியூயார்க் 'நான் ஸ்டாப்' விமானம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: ஏர் இந்தியாவின் டெல்லி, நியூயார்க் இடையிலான நான் ஸ்டாப் விமான சேவை இன்று தொடங்கியது.

ஏஐ-101 என்ற எண்ணுடைய இந்த விமானம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலிருந்து நியூயார்க்கின் ஜான் எப். கென்னடி விமான நிலையத்திற்கு 16 மணி நேரங்களில் சென்றடையும். வழக்கமாக இதற்கு 19 மணி நேரமாகும். மறு மார்க்கத்தில் 18 மணி நேரங்களில் இது டெல்லியை வந்தடையும்.

238 இருக்கைகள் கொண்ட மிகப் பெரிய போயிங் 777-200 எல்.ஆர். விமானம் இந்த மார்க்கத்தில் இயக்கப்படுகிறது.

அமெரிக்காவுக்கு ஏர் இந்தியா இயக்கும் 2வது நான் ஸ்டாப் விமானம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி மும்பை - நியூயார்க் விமானம் நான் ஸ்டாப் விமானமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இதேபோன்ற இன்னொரு விமான சேவையை பெங்களூர் முதல் சான்பிரான்ஸிஸ்கோ வரை அறிமுகப்படுத்தவும் ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது.

டெல்லி - நியூயார்க் நான் ஸ்டாப் விமானம் டெல்லியிலிருந்து நள்ளிரவு 12.30 மணிக்குக் கிளம்பும். நியூயார்க்கை மாலை 5.45 மணிக்கு சென்றடையும். அதேபோல நியூயார்க்கிலிருந்து மாலை 4 மணிக்குக் கிளம்பி அடுத்த நாள் மாலை 4.30 மணிக்கு டெல்லியை வந்தடையும்.

இந்த விமானத்தில் பயணிகள் செளகரியப்படும் நேரத்தில் உணவு பரிமாறப்படும். மேலும் இருக்கைகளும் மிகவும் செளகரியமான வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் காலை நீட்டி வசதியாக அமர்ந்து பயணிக்க முடியும். முதல் வகுப்பில் உள்ள இருக்கைகளில் 8, படுக்கைகளை மாற்றிக் கொள்ளக் கூடிய வசதியுடன் கூடியது.

எக்கானமி வகுப்பிலும் பலவித வசதிகள் பயணிகளுக்கு செய்து தரப்பட்டுள்ளது. இந்த வகுப்பில் உள்ள ஒவ்வொரு இருக்கைக்கு முன்பும், கால்களை வசதியாக வைத்துக் கொள்வதற்காக பூட் ரெஸ்ட் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் 250 மணி நேரம் ஓடக் கூடிய வீடியோ, 150 மணி நேரம் ஒலிக்கக் கூடிய ஆடியோ வசதியும் இடம்பெற்றுள்ளது. பயணிகள் தங்களுக்கு விருப்பமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தேர்வு செய்து கொள்ள முடியும்.

முதல் வகுப்புப் பயணிகள் பார்த்து ரசிக்க 23 இன்ச் டிவி ஸ்க்ரீன் பொருத்தப்பட்டிருக்கிறது. அதேபோல, எக்சிகியூட்டிவ் வகுப்பில் 15 இன்ச் மானிட்டரும், எக்கானமி வகுப்பில் 10.4 இன்ச் மானிட்டரும் பொருத்தப்பட்டிருக்கும்.

பல்வேறு இந்திப் படங்கள், பாடல்களை தங்களது விருப்பம் போல பார்த்துக் கொள்ளும் வசதியும் விமானத்தில் உள்ளது.

தொடக்க விழா பயணக் கட்டணமாக எக்கானமி வகுப்புக்கு ரூ. 30,700 மற்றும் வரிகள், எக்சிகியூட்டிவ் வகுப்புக்கு ரூ.159 லட்சம் கட்டணம் மற்றும் வரிகள், முதல் வகுப்புக்கு ரூ. 3.57 லட்சம் கட்டணம் மற்றும் வரிகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முதல் மற்றும் எக்சிகியூட்டிவ் வகுப்பில் பயணிப்போருக்கு டெல்லி விமான நிலையத்திற்கு வரவும், அங்கிருந்து செல்லவும், அதேபோல நியூயார்க் விமான நிலையத்திற்கு வரவும், அங்கிருந்து செல்லவும் இலவச வாகன வசதி செய்து தரப்படும்.

இதுதவிர முதல் வகுப்புப் பயணிகளுக்கு 75 டாலர் கிப்ட் வவுச்சரும், எக்சிகியூட்டிவ் பயணிகளுக்கு 50 டாலர் கிப்ட் வவுச்சரும் வழங்கப்படும். இதைப் பயன்படுத்தி அவர்கள் விமானத்தில் உள்ள வரியற்ற பொருள் விற்பனையை பயன்படுத்தி பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

இந்த சலுகைக் கட்டணம் மற்றும் பிற சலுகைகள் ஏப்ரல் 30ம் தேதி வரை அமலில் இருக்கும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X