ஆட்குறைப்பில் எம்பசிஸ்-சென்னையில் 200 பேர் நீக்கம்
மும்பை: இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனங்கள் அடுத்தடுத்து ஆள் குறைப்பில் இறங்கியுள்ளன.
ஆனால், இதை எந்த சாப்ட்வேர் நிறுவனமும் வெளிப்படையாக ஒப்புக் கொள்ள மறுக்கின்றன.
டிசிஎஸ் முதலில் ஆள் குறைப்பை ஆரம்பித்தது. பின்னர் ஐபிஎம் ஆள் குறைப்பில் இறங்கியது. இன்போசிஸும் இதைத் தொடர்ந்தது.
இப்போது எம்பசிஸ் நிறுவனம் ஆள் குறைப்பில் இறங்கியுள்ளது. சென்னை அலுவலகத்திலிருந்து 200 பேரை அது வேலையை விட்டு அனுப்பியுள்ளது. கடந்த 2 வாரங்களில் இத்தனை பேர் வேலையிலிருந்து நீக்கப்பட்டனர்.
ஆனால் இதுகுறித்து வேறு விதமாக விளக்கம் அளித்துள்ளது எம்பசிஸ். அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆள் குறைப்பு என்பது வதந்தியான தகவல். இதுபோன்ற வதந்திகளுக்கு எம்பசிஸ் பதில் அளிக்காது.
தொடர்ந்து எம்பசிஸ் நிறுவனத்திற்கு ஆட்கள் தேர்வு நடந்து கொண்டுதான் உள்ளது. தேவைக்கேற்ப சாப்டவேர் பொறியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுக் கொண்டுதான் உள்ளனர்.
2006ம் ஆண்டு 11 ஆயிரம் ஊழியர்களைக் கொண்ட நிறுவனமாக இருந்த எம்பசிஸ், 2007ல் 27 ஆயிரம் பேரைக் கொண்டதாக உயர்ந்தது. இதே போக்கு இந்த ஆண்டும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எம்பசிஸ் ஆரம்பத்தில் இந்திய நிறுவனமாகவே இருந்தது. பின்னர் இதை அமெரிக்காவின் ஈடிஎஸ் கையகப்படுத்தியது. பன்னாட்டு நிறுவனம் ஒன்றால் விலைக்கு வாங்கப்பட்ட முதல் இந்திய சாப்ட்வேர் நிறுவனம் எம்பசிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்போசிஸ் நிறுவனமும் கூட கடந்த 3 ஆண்டுகளில் 2500 ஊழியர்களை வேலையை விட்டுப் போகுமாறு கூறியுள்ளது. இதற்கு முக்கியக் காரணம் அமெரிக்க பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்த நிலைதான்.
அதேசமயம் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்கள் புதிதாக ஆட்களை எடுப்பதும் குறைந்தபாடில்லை. அதுவும் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. 2008ம் ஆண்டு நிதியாண்டில் 4 லட்சத்து 30 ஆயிரம் பேர் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர். மார்ச் மாத வாக்கில் இது மேலும் 20 லட்சம் பேராக அதிகரிக்கவுள்ளது.
எனவே ஆள் குறைப்பு என்ற பதம் சரியில்லை. திறமைக் குறைவு காரணமாகவே அவர்கள் நீக்கப்பட்டிருக்கலாம் என்பது சாப்ட்வேர் துறை நிபுணர்களின் வாதம்.
இன்போசிஸைப் பொறுத்தவரை ஆண்டுக்கு 1.2 சதவீதம் பேர் திறமைக் குறைவால் வேலையிழந்து கொண்டுதான் உள்ளனர். இது கடந்த 3 ஆண்டுகளில் மாறாமல் நிலையாக இருந்து கொண்டிருக்கிறது. அதன் அடிப்படையில்தான் கடந்த 3 ஆண்டுகளில் 2500 பேர் வேலையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இன்போசிஸ் விளக்குகிறது.
பெங்களூர் இன்போசிஸ் வளாகத்தில் மட்டும் 88 ஆயிரத்து 600 பேர் பணியாற்றுகின்றனர். இந்த நிதியாண்டுக்குள் புதிதாக 32 ஆயிரம் பேரை சேர்க்க திட்டமிட்டுள்ளது இன்போசிஸ்.
யாஹூ நிறுவனத்தின் பெங்களூர் அலுவலகத்திலும் கூட ஆள் குறைப்பு நடந்துள்ளது. பிப்ரவரி 13ம் தேதி 40 பேரை ராஜினாமா செய்யுமாறு நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள் திறமைக் குறைவு காரணமாக அனுப்பப்பட்டவர்கள். மற்றவர்கள், தங்களது வேகத்திற்கேற்ற தகுதி இல்லாதவர்கள் என யாஹூ இந்தியா தலைவர் சரத் சர்மா கூறுகிறார்.
கடந்த ஆண்டு யாஹூவின் ஊழியர் பலம் 1500 ஆக இருந்தது. மாதத்திற்கு 80 பேர் வீதம் அந்த நிறுவனத்தில் சேர்ந்து கொண்டுள்ளனர் என்கிறார் சரத் சர்மா.
மெக்சிகோவில் இன்போசிஸ்ச
இதற்கிடையே, இந்தியாவின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸ், லத்தீன் அமெரிக்க நாடான மெக்சிகோவில் தனது அலுவலகத்தைத் திறந்துள்ளது.
அமெரிக்கா, லத்தீன் அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய பகுதிகளில் உள்ள தனது வாடிக்கையாளர்கள் நலனை முன்னிட்டு இந்த மெக்சிகோ கிளையைத் திறந்துள்ளது இன்போசிஸ்.
இன்போசிஸ் டெக்னாலஜிஸ் எஸ்.டி.ஆர்.ஐ.டே சிவி என பெயரிடப்பட்டுள்ள இந்த மெக்சிகோ நிறுவனம், வங்கித் துறை, நிதித்துறை, விநியோகம், சிறு தொழில் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், தனது வாடிக்கையாளர்களுக்கு ஆலோசனை மற்றும் தகவல் தொழில்நுட்ப உதவிகளை இன்போசிஸ் செய்யும்.
இதுதவிர பிபிஓ சேவையையும் இன்போசிஸிஸன் மெக்சிகோ கிளை மேற்கொள்ளும். அடிப்படக் கட்டமைப்பு நிர்வாகம், அமலாக்கம் உள்ளிட்டவற்றிலும் அது தனது சேவையை மேற்கொள்ளும்.
மெக்சிகோ கிளைத் தொடக்க விழாவில் மெக்சிகோ அதிபர் பிலிப்பி டே ஜீசஸ் கால்டரான் ஹினோஜோசா, இன்போசிஸ் தலைவர் என்.ஆர்.நாராயண மூர்த்தி, நியுவோ லியான் மாகாண ஆளுநர் ஜோஸ் நடிவிடாட் கோன்சாலஸ் பராஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நாராயணமூர்த்தி பேசுகையில், மெக்சிகோ இன்போசிஸை அரவணைத்துள்ளது. இங்கு கிளையை ஆரம்பிக்க ஊக்கம் அளித்தது. மெக்சிகோ மையத்தில் 87 புதிய ஊழியர்கள் சேர்ந்துள்ளனர். இவர்களில் பலர் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு பிரஷ்ஷாக வந்தவர்கள் என்றார்.
ஏற்கனவே இதேபோன்ற இன்போசிஸ் வளர்ச்சி மையங்கள், செக் குடியரசு, போலந்து, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், சீனா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளிலும் உள்ளன.
வட அமெரிக்கா, கனடா, ஐரோப்பாவுக்கு மிக அருகில் இருப்பதால்,மெக்சிகோவில் புதிய வளர்ச்சி மையத்தைத் தொடங்கத் திட்டமிட்டது இன்போசிஸ்.
மேலும், லத்தீன் அமெரிக்கா, சாப்ட்வேர் துறையில் வளர்ந்து வரும் முக்கியச் சந்தை என்பதாலும், மெக்சிகோவில் தனது மையதைத் தொடங்கியுள்ளது இன்போசிஸ்.
-
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை












Click it and Unblock the Notifications