
புதுவை: ஆண் வாக்காளர்களை விட பெண்களே அதிகம்
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆண்களை விட பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
புதுச்சேரியில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் மொத்தம் 30 சட்டசபை தொகுதிகள் உள்ளன. புதுச்சேரி பிராந்தியத்தில் 21 தொகுதிகளும், காரைக்கால் பிராந்தியத்தில் 6 தொகுதிகளும், மாஹேவில் 2 தொகுதிகளும், ஏனாம் பகுதியில் ஒரு தொகுதியும் உள்ளன.
மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 31 ஆயிரத்து 577 ஆகும். இவர்களில் பெண்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 79 ஆயிரத்து 57 பேர் ஆவர். ஆண்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 52 ஆயிரத்து 520 ஆகும்.
புதுச்சேரி பிராந்தியத்தில் மட்டும் 5 லட்சத்து 57 ஆயிரத்து 645 வாக்காளர்கள் உள்ளனர். காரைக்கால் பகுதியில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 593 பேர் உள்ளனர். மாஹேவில் 27 ஆயிரத்து 776 பேர் உள்ளனர். ஏனாம் பிராந்தியத்தில் 25 ஆயிரத்து 563 பேர் உள்ளனர்.
ஒட்டுமொத்தமாக பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். ஆண்களை விட 26 ஆயிரத்து 537 பெண்கள் அதிகம் உள்ளனர். பல்வேறு தொகுதிகளில் பெண்கள்தான் அதிக அளவில் வாக்காளர்களாக உள்ளனர்.