For Daily Alerts
Just In
தங்கத்தின் விலையில் மாபெரும் உயர்வு
சென்னை: நாடு முழுவதும் தங்கத்தின் விலையில் மிகப் பெரும் அளவி்ல் உயர்ந்துள்ளது.
10 கிராம் தங்கத்தின் விலை 12,800 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வாரத்தை விட இது ரூ. 200 அதிகமாகும்.
அதே போல வெள்ளியின் விலையும் கிலோ ரூ. 24,500 ஆக உயர்ந்துள்ளது. இது கடந்த வாரத்தை விட ரூ. 900 அதிகமாகும்.
டாலர் மதிப்பு வீழ்ச்சி, ரூபாயின் மதிப்பு உயர்வு, கச்சா எண்ணெய் விலை உயர்வு, திருமண சீசன் என பல்வேறு காரணிகள் ஒன்றாய் இணைந்து இந்த விலை உயர்வுக்கு காரணமாகியுள்ளன.
பங்குச் சந்தையில் 900 புள்ளிகள் சரிவு:
இதற்கிடையே இந்திய பங்குச் சந்தைகளில் நேற்று பெரும் சரிவு ஏற்பட்டது. மும்பை பங்குச் சந்தையில் 900 புள்ளிகள் சரிந்ததால் லட்சக்கணக்கான முதலீட்டாளர்களுக்கு ரூ. 2 லட்சம் கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
அதே போல தேசிய பங்குச் சந்தையான நிப்டியிலும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.